என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Baahubali elephant"
- பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது.
- பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்து அங்குள்ள பயிர்களை தின்றும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
தொடர்ந்து அந்த யானையை மயக்கஊசி போட்டு பிடிப்பதற்கான நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானை திடீரென அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றுவிட்டதால் வனத்துறையினர் தற்காலிகமாக தேடுதல் வேட்டையை கைவிட்டனர்.
இந்த நிலையில் பாகுபலி யானை கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம் வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வருகிறது. மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் சம்பவத்தன்று மதியம் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது பாகுபலி யானை திடீரென மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது.
இதனை பார்த்து வாகனஓட்டிகள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே ரோட்டை கடக்க முயன்ற யானை திடீரென அங்கு நின்றிருந்த ஒரு காரை லேசாக முட்டி தள்ளி வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியது. பின்னர் மேட்டுப்பாளையம் ரோடு வழியாக சிறுமுகை காட்டுக்குள் சென்று விட்டது.
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி ரோட்டில் பாகுபலி யானையின் நடமாட்டம் வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், மேற்குதொடர்ச்சி மலையில் கோடைக்காலம் காரணமாக கடும் வறட்சி நிலவுவதால் பாகுபலி யானை தண்ணீர் மற்றும் உணவு தேடி அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியேறி வந்து உள்ளது. வனப்பகுதியில் கோடைமழை பெய்து பசுமை திரும்பினால் காட்டு யானைகள் மீண்டும் மலைஅடிவாரத்துக்கு வரும் நிலைமை ஏற்படாது. மேலும் அடர்ந்த காட்டுக்குள் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளனர்.
- வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
- வனத்துறையினர் பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓடந்துறை, நெல்லித்துறை, சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை யானை நடமாடி வந்தது.
இந்த யானை அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து வந்தது. ஆனால் இதுவரை மனிதர்கள் எவரையும் அந்த யானை தாக்கவோ, தாக்க முயற்சிக்கவோ இல்லை.
எனினும் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக 2 கும்கி யானைகள் வரவழைத்து, வனத்துறையினர் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியை மேற்கொண்டனர். ஆனால் யானை அடர் வனப்பகுதிக்குள் சென்றதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
கடந்த சில மாதங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. தற்போது மீண்டும் பாகுபலி யானை வனத்தையொட்டி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாட தொடங்கியது.
மேலும் யானையின் வாயில் காயம் இருப்பததால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவிக்கவே, வனத்துறையினர் மருத்துவ குழுவினர் மற்றும் 2 கும்கி யானைகளுடன், பாகுபலி யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக யானையை தேடும் பணியை தொடங்கினர்.
தொடர்ந்து யானையை கண்காணித்த போது, வாயில் ஏற்பட்ட காயம் குணமாகி வந்து தெரிய வரவே சிகிச்சை அளிப்பதற்கான கட்டாயம் ஏற்படவில்லை என மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் அறிக்கை வெளியிட்டனர்.
மேலும் யானையின் நடமாட்டம் குடியிருப்பை ஓட்டிய பகுதிகளுக்குள் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படுகிறது.
நேற்றிரவு பாகுபலி யானை மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் வனப்பகுதியில் ஒருபுறம் இருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல கம்பீரமாக ரோட்டை கடந்து சென்றது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் மேட்டுப்பா ளையம்-ஊட்டி சாலையில் பாகுபலி யானை கடந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்தி பாகுபலி யானை வனப்பகுதிக்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
இதனையடுத்து பாகுபலி யானை சாவகாசமாக சாலையை கடந்து சென்றது. இதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்து, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் கடந்த இரு மாதங்களாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்த பாகுபலி யானை இன்று காலை மீண்டும் சமயபுரம் ஊருக்குள் சாவகாசமாக உலா வந்தது.
இரண்டு மாதங்கள் ஆகியும் தனது வழித்தடத்தை மறக்காமல் மீண்டும் அதே பாதையில் சமயபுரம் வழியாக மேட்டுப்பாளையம் - வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையை கடந்து மறுபுறம் உள்ள வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் வன ஆர்வலர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.
- யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குபட்பட்ட சமயபுரம், நெல்லிமலை வனப்பகுதிகளில் நடமாடிய பாகுபலி யானை தற்போது வாயில் காயத்துடன் சுற்றித்திரிகிறது.
இதையடுத்து வனத்திலுள்ள பாகுபலி காட்டுயானையை கண்காணிக்க கடந்த வாரம் சாடிவயல் வனப்பகுதியில் இருந்த 2 மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சனிக்கிழமை முதுமனை யானைகள் முகாமில் இருந்து யானைக்கு சிசிக்சை அளிக்க வசீம், விஜய் ஆகிய இரு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது.
இந்த யானைகளின் உதவியுடன் பாகுபலி காட்டுயானைக்கு மயக்க ஊசி செலுத்தி வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிந்து அதற்கு சிகிச்சை அளிக்க 2 மருத்துவ குழுவினர் வந்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக பாகுபலி யானையை மருத்துவ குழுவினர், வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.
பாகுபலி யானை இடம் மாறி ஒவ்வொரு இடமாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் குன்னூர் ஆறு வரும் வழியில் ஒரே இடத்தில் நின்று 3 மணி நேரம் பலா பழத்தை ருசித்துள்ளது. அந்த இடம் யானையை மீட்க முடியாத அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. அதனால் வனத்துறையினரால் நேற்று யானையை மீட்க முடியவில்லை. இன்றும் தொடர்ந்து பாகுபலி யானை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனஆர்வலர்கள் கூறியதாவது:-
பாகுபலி காட்டுயானைக்கு வலியின் தாக்கம் அதிகம் உள்ளதால் தான் கடந்த வாரம் தாசனூர் பகுதியிலுள்ள கோவில் சுவரை உடைத்து சென்றுள்ளது. இதுவரை பயிர்களை சேதப்படுத்தி வந்தது தற்போது உடைமைகளை சேதப்படுத்தி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே யானைக்கு சிகிச்சை அளிப்பதில் மெத்தனம் காட்டாமல் விரைவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- 4-வது நாளாக யானையை தேடும் பணி நடக்கிறது.
- யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதனை பொதுமக்கள் செல்லமாக பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.
இந்த யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றியதை வனப்பணி யாளர்கள் பார்த்தனர்.
இதபற்றிய தகவல் அறிந்ததும் யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை யினர், அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.
வனத்துறை 2 குழுக்கள் அமைத்தும், மோப்பநாய்கள் உதவியுடன் யானையை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கா கவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்து றையினர் திட்டமிட்டனர்.
இதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யா னைகள் வரழைக்கப்பட்டன.
அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொ ண்டு வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக யானையை தொடர்ந்து தேடும் பணியில் வனத்து றையினர் ஈடுபட்டனர்.
தற்போது யானையானது நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.
அங்கு யானையின் நிலைமையை கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை சரியான இடத்திற்கு வந்தவுடன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் யானையின் பின் சென்று புகைப்படம் எடுக்கின்றனர்.
- யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஏராள மான யானைகள் உள்ளன. இதில், ஒரு ஆண் யானை மட்டும் கடந்த ஒரு ஆண் டாக மேட்டு ப்பாளையம், சிறுமுகை ஆகிய வனப்பகு திகளில் சுற்றி வருகிறது.
இந்த ஆண் யானைக்கு பொதுமக்கள் பாகுபலி என்று பெயரிட்டு வருகி ன்றனர். இந்த யானை இதுவரை யாரையும் தொல்லை செய்யவில்லை. விவசாய நிலங்களுக்கு சென்று அதிகமான பயி ர்களை சேதம் செய்வதும் இல்லை. கடந்த ஒரு வாரமாக இந்த யானை, நெல்லி மலையில் இருந்து வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை, மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, வனத்துறை மர டெப்போ, சிறுமுகை வனப்பகுதி ஆகிய பகுதி களில் சுற்றி வரு கிறது.
பொதுமக்கள் குடியி ருப்பு பகுதி வழியாக பவானி ஆற்றுக்கு தண் ணீர் குடிக்க செல்கிறது. அதே போன்று மேட்டுப் பாளையம் வனப்பகுதி, ஊட்டி சாலையில் இந்த யானை கடந்து செல்கிறது.
அப்போது பொது மக்கள் யானையின் முன் பும், பின்னுமாக சென்று மொபைல் போனில் புகை ப்படம் எடுக்கின்றனர். சிலர் சத்தமிட்டு விரட்டு கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக அமைதி யாக சென்று வந்த இந்த யானை, தற்போது ஆக் ரோஷமாக சென்று வருகிறது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறியதாவது:-
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று சாலை யிலும், குடியிருப்பு பகுதியிலும் சுற்றி வருகிறது. இந்த யானை மிகவும் சாதுவாக உள்ளதால் யாரும் அதை துன்புறுத்தவும், விரட்டவும் வேண்டாம். விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடு பவர்கள் யானைக்கு தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, யானைகள் விவசாய நிலங்களில் புகுந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்