search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Badminton match"

    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பலர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 8-ம் ஆண்டு பூப்பந்து போட்டி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமையில் மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.கடந்த 3 தினங்களாக போட்டிகள் நடைபெற்று வந்தது.

    கடந்த 3 தினங்களாக நடைபெற்ற பூப்பந்து போட்டியில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநில பூப்பந்தாட்ட துணைத் தலைவர் ம. அன்பழகன் தலைமை தாங்கினார். ஜே பி பி சி தலைவர் எஸ் மோகன்ராஜ் வரவேற்றார்.

    திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான கா தேவராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு சதன் ரயில்வே அணிக்கு ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசு ஐ.சி.எப். அணிக்கு ரூ.40 ஆயிரம், 3-வது பரிசு எஸ்.ஆர்.எம். அணிக்கும் ரூ.30 ஆயிரமும், பெண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.எஸ்.என்.எல். பொறியியல் கல்லூரி மாணவிகள் முதல் பரிசு ரூ.25 ஆயிரம், சென்னை எல்.எஸ்.எஸ். அணி 2-ம் பரிசு ரூ.20 ஆயிரம், சேலம் தேவாரம் பைவ் ஸ்டார் அணி 3-ம் பரிசு ரூ.15 ஆயிரமும், 4-ம் பரிசு ரூ.10 ஆயிரம் பரிசுகளையும், கோப்பைகளையும் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில ஆதிதிராவிடர் நல துணைத் தலைவர் சா. ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் எம். காவியா விக்டர், துணைத் தலைவர் பெ. இந்திரா பெரியார்தாசன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
    • பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பூப்பந்தாட்ட குழு நடத்திய 9ம் ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.2-வது இடம் பெற்ற திருப்பூர் ஹிமாலயா அணிக்கு ரூ.7,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 3-வது இடம் பெற்ற கோவை நஞ்சுண்டாபுரம் அணிக்கு ரூ.5,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பெற்ற பல்லடம் பூப்பந்தாட்ட குழு அணிக்கு ரூ.3,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராம். கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், குமரப்பன்,வேல்மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    • திருப்பூர் மாவட்ட அணியின் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம்.
    • போட்டிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் இளையோர் மற்றும் மிக இளைேயாருக்கான மாவட்ட அளவிலான ஐவர் தேர்வு திறன் பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்ன சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாளை 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை ) காலை 8மணிக்கு நடக்கிறது.

    இதில் இளையோர் பிரிவில் பங்கேற்க 1-1-2003 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். மிக இளையோர் பிரிவுக்கு 1-1-2007 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.

    போட்டிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பூர் மாவட்ட அணியின் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம்.

    போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகல் மற்றும் வயது சான்று நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  

    • தென்காசி மாவட்டம் குறுவட்ட அளவிலான இறகுப்பந்தாட்டம் போட்டிகள் தென்காசியில் ஜெகநாதன் அரங்கில் நடைபெற்றது.
    • பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் முதலிடமும் மற்றும் சீனியர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குறுவட்ட அளவிலான இறகுப்பந்தாட்டம் போட்டிகள் தென்காசியில் ஜெகநாதன் அரங்கில் நடைபெற்றது.அதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஜூனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் முதலிடமும் மற்றும் சீனியர் பிரிவில் 2-ம் இடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளர் ரெ. ஜெ. வே. பெல், செயலாளர் கஸ்தூரி பெல், பள்ளி முதல்வர் ராபர்ட் பென், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பாராட்டினர்.

    ×