search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bag theft"

    • கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
    • திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை.

    நாமக்கல்:

    உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா ஐயர் மகன் கணேஷ் (38). இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 16-ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் ராகவனை பார்க்க வந்துள்ளார். பின்னர் நேற்று திருச்சியிலிருந்து நாமக்கல் வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். நாமக்கல்லில் பஸ் நின்றபோது கழிப்பறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது இவரது பையை காணவில்லை. அதில் லேப்டாப், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நாமக்கல் போலீசில் கணேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மீண்டும் திருட வந்த போது வாலிபர் சிக்கினார்
    • கேரள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது

    கோவை :

    திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சுகேஷ் (வயது 38). ராணுவ வீரர். இவர் கடந்த மாதம் 17-ந் ேததி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஏ.சி பெட்டியில் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.

    ரெயில் கோவை வந்ததும் சுகேஷ் தனது பையை பார்த்தார். அப்போது பை மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அருகில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    பின்னர் பை திருட்டு போனது குறித்து சுகேஷ் கோவை ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் வாலிபர் ஒருவர் ராணுவ வீரரின் பையை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இதனை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது ராணுவ வீரரிடம் பையை திருடி வாலிபர் ரெயில் நிலையத்தில் நிற்பதை பார்த்தனர்.

    சுதாரித்து கொண்ட போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அைழத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில் அந்த வாலிபர் கோழிகோட்டை சேர்ந்த ரத்திஷ் (38) என்பதும், அவர் மீது கேரள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும், கோவையில் மீண்டும் திருட வந்த போது மாட்டி கொண்டதும் தெரியவந்தது.

    ேமலும் ராணுவ வீரரின் ைபயில் பொருட்கள் ஏதும் இல்லாததால் அதை வீசிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ரத்திசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    திருப்பூர் பிளாஸ்டிக் கம்பெனியில் 3 டன் கேரி பேக்குகளை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு ஆர்.வி.இ. நகரை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவர் வீரபாண்டியில் பிளாஸ்டிக் கேரி பேக் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனியில் கேரி பேக் விற்பனை கணக்கில் மோகனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து பொருட்களின் விற்பனை மற்றும் இருப்பை சோதனை செய்தார். அப்போது 3 டன் கேரி பேக்குகள் திருட்டுபோனது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அதே கம்பெனியில் வேலை செய்யும் திருப்பூர் நொச்சி பாளையத்தை சேர்ந்த ஊழியர் பரத் (30) என்பவர் திருடியது பதிவாகி உள்ளது. இதனையடுத்து மோகன் வீரபாண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பரத்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் பிப்ரவரி மாதம் முதல் சிறிது சிறிதாக 3 டன் கேரி பேக்குகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.  இதனையடுத்து பரத்தை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் காட்டன் மில் ரோட்டில் உள்ள செல்வவிநாயகர் கோவில் உண்டியல் திருடப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த சந்தானக்குமார் (17), பவுன்ராஜ் (14) ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் கோவில் உண்டியலை திருடியதும், அதில் ரூ.6 ஆயிரம் இருந்ததையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
    ×