என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bank"

    • மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மார்ச் 30 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை வங்கிகளுக்கு பொதுவிடுமுறையாகும். மார்ச் 31 ஆம் தேதி திங்கள் கிழமை ரம்ஜானை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக அன்று பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படுவதில்லை.

    நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதனால், அத்தியாவசிய வங்கி சேவைகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை தினங்களில் மொபைல் பேங்கிங் மற்றும் யு.பி.ஐ., சேவை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    மும்பை:

    மும்பையை சேர்ந்த நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் ரூ.122 கோடி மோசடி நடந்தது கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கியின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மோசடியில் ஈடுபட்ட வங்கியின் பொது மேலாளர் ஹிதேஷ் மேத்தா கைது செய்யப்பட்டார்.

    அவர் வங்கி பெட்டகத்தில் இருந்த பணத்தை எடுத்து கட்டுமான அதிபர், தொழில் அதிபர் உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக போலீசார் தொழில் அதிபர் அருணாச்சலம் உலகநாதன் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளனர்.

    இதில் அருணாச்சலம் உலகநாதன், ஹிதேஷ் மேத்தாவிடம் இருந்து வாங்கிய பணத்தில் ரூ.15 கோடியை ஜார்கண்டை சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் பாண்டே என்ற பவன் குப்தாவிடம்(வயது45) கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 28-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.

    இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?

    கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?

    என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள்.
    • கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொரு ளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ ) மூலம் செயல்படுத்தப்படும் தனி நபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் பூதலூர் வட்ட அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை ) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது.

    மேற்படி, கடன் பெறுவதற்கு 19 முதல் 60 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் . சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, கடன் மனுக்களுடன் மனுதாரரின் சாதி சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் , கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இச்சிறப்பு முகாமில் சுலந்து கொண்டு அனைத்து பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர்கள் கடன் உதவி பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    ராசிபுரம்:

    சேலம் மாவட்டத்திற்கு வருகின்ற 15 மற்றும் 16-ந் தேதிகளில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளின் திட்ட பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வரி இனங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரி தலைமை வகித்தார். இதில் சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், உதவி செயற்பொறியாளர் எஸ்.ஆர்.ஜவகர், அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள், பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் நாமக்கல் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்து 46 ஆயிரத்திற்கு, பொதுமக்களின் பங்களிப்பு தொகையாக ரூ.51 லட்சத்து 82 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையினை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் எஸ்.எம்.மலையமான் திருமுடிகாரியிடம் வழங்கினர்.

    • புதியமுத்தூரில் உள்ள வங்கியில் சித்ரா ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடி வந்தார்.
    • இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஓட்டப் பிடாரம் அருகே உள்ள தெற்கு வெள்ளாரத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி சித்ரா (வயது 55).

    இவர் புதியமுத்தூரில் உள்ள வங்கியில் அவரது கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் எடுத்துக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள அவரது மகனை பார்க்க சென்றுள்ளார். பணத்தை கையில் இருந்த பையில் வைத்திருந்தார். பின்னர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்வதற்காக பஸ்சில் ஏறி அமர்ந்த போது தனது பையில் இருந்த ரூ.85 ஆயிரம் பணம் காணாமல் போய் இருந்தது.

    இதனால் பதறிப்போன சித்ரா இது குறித்து மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் இசக்கி யப்பன் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.

    • வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
    • கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்

    டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.

    இதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அமரேசன், துணைத் தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வட்டி இல்லா கடன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    • ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • புதுமைப்பெண் திட்டத்தில் 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 செப்டம்பர் மாதம் சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயபடிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை தலா ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் புதுமை ப்பெண் திட்டத்தில் முதல் கட்டத்தில் 758 மாணவிகளும், 2-ம் கட்டத்தில் 830 மாணவிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

    மொத்தமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 1,588 மாணவிக ளுக்கு தலா ரூ.1000 வழங்க ப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.
    • கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    புதுச்சேரி:

    புதுவை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் துரைராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் இந்த மாதம் வழங்க உள்ள 13-வது தவணைத் தொகையை பெறுவதற்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம். எனவே விவசாயிகள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

    மேலும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் பெறப்பட்ட தகவலின்படி, புதுவை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் விவசாயிகள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல், நிதி உதவியை பெற இயலவில்லை.

    அவர்கள் அனைவரும் உடனடியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கினை தொடங்கி உதவித்தொகையை பெற இயலும். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோ மெட்ரிக் எந்திரம் மூலம் விவசாயிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்னை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் வங்கி கணக்கினை தொடங்கி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
    • கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி கட்டிடம் சுமார் 40 ஆண்டுக ளுக்கு முன்பு கட்டப்ப ட்டதாகும். நாள்தோறும் இந்த வங்கிக்கு வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், தற்போது இந்த வங்கி கட்டிடம் மேற்காரைகள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வங்கிக்கு வரும் மக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

    எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • ஓமலூர் அருேக கடன் தொல்லையால் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ் 37, இவர் செவ்வாய்பேட்டையில் உள்ள பொதுத்துறை வங்கியில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

    இந்த நிலையில குடும்ப தேவைக்காக சிலரிடம் கடன் வாஙகியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வங்கிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டிலேயே மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    ×