search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bats"

    • வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என தொற்று நோய் நிபுணர் எச்சரித்து உள்ளார்.
    • ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாக கண்டறிப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூர நோய் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது. தொடர்ந்து அந்த கொரோனா அரக்கன் உருமாறி பொதுமக்களை பாடாய் படுத்தியது.

    இந்த தொற்றில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக மீண்டு தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்த போதிலும் கொரோனா முழுமையாக நம்மை விட்டு அகலவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார். வவ்வால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தலைமையிலான தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறிப்பட்டு உள்ளது.

    இந்த தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 50 டன் தேங்காய் மட்டைகள் குவியலாக சேமித்து வைக்கப்படிருந்தது.
    • தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு ட்பட்ட கல்லுக்குளம் அருளானந்த நகர் 3-வது தெரு பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி டெங்கு தடுப்புகள் பணிகள் நடைபெற்றது. மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையிலான குழுவினர் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த களபணியின் போது அருளானந்த நகர் 3-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 50டன் தேங்காய் மட்டைகள் குவியலாக சேமித்து வைக்கப்படிருந்தது.

    டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதற்கு வாய்ப்பாக இந்த தேங்காய் மட்டைகள் இருக்கும் என்பதால் தனியார் காலி மனையின் உரிமையாளருக்கு பொது சுகாதார சட்டத்தின் படி நோட்டீசு வழங்கப்பட்டு பொக்லைன் எந்திரங்கள் கொண்டு 5 லாரிகள் மூலமாக தேங்காய் மட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் செவிலியர் கல்லூரி, விடுதிகள் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளியில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஏடிஸ் கொசு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    வீடுகள், காலிமனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இந்த முகாமுக்கான ஏற்பாடு களை துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர், நகர்ப்புற ஆரம்ப சுகாதார செவிலியர் உமா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×