search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday"

    • ஒடிசாவின் பூரி கடற்கரையில் 1,213 மண் தேநீர் கோப்பைகள் கொண்டு மணல் சிற்பம்.
    • தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் உருவப் படத்தை வித்தியாசமான முறையில் மணல் சிற்பமாக செதுக்கி இருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

    அதன்படி, பட்நாயக் 1,213 தேநீர் கோப்பைகளை நிறுவி "ஹேப்பி பர்த்டே மோடி ஜி" என்ற வாழ்த்துடன் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

    இதுகுறித்து பட்நாயக் கூறுகையில், " பிரதமர் மோடியின் தேநீர் விற்பனையாளர் முதல் நாட்டின் பிரதமர் வரையிலான பயணத்தைக் காட்ட மண் தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி சிற்பம் உருவாக்கியுள்ளேன். இங்கே எனது கலையின் மூலம் பிரதமருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்" என்றார்.

    • நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக பிரதமர் மத்திய பிரதேசம் செல்கிறார்.
    • விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஐடிஐ மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.

    பிரதமர் நரேந்திர மோடி நாளை தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் உரையாற்றுகிறார்.

    அதன்படி, வனவிலங்குகள் மற்றும் பெண்கள் அதிகாரத்திற்கான சுற்றுச்சூழல், திறன் மற்றும் இளைஞர் மேம்பாடு மற்றும் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய நான்கு நிகழ்வுகளில் உரையாற்றுகிறார்.

    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை குனோ தேசிய பூங்காவில் விடுவிப்பதற்காக அவர் மத்திய பிரதேசம் செல்ல உள்ளார். அங்கு அவர் உரையாற்றுகிறார். பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து, விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு ஐடிஐ மாணவர்களின் முதல் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மாணவர்களிடையே உரையாற்றுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல், முக்கிய தேசிய தளவாடக் கொள்கையை பிரதமர் மோடி நாளை மாலை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    • உணவை 40 நிமிடங்களில் 56 வகை உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
    • டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற உணவு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாளை (செப்டம்பர் 17-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்தநாளையொட்டி டெல்லி கன்னாட் பிளேஸில் அமைந்துள்ள ஆர்டார் 2.0 என்கிற உணவகத்தில் 56 இன்ச் மோடி ஜி தாலி என்கிற பெயரில் உணவுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் 56 விதமான உணவு வகைகளைக் கொண்ட பிரத்யேக உணவு தட்டு வழங்கப்படுகிறது. இந்த உணவை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 8.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து உணவக உரிமையாளர் சுமித் கல்ரா பேசியதாவது:-

    பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் நம் நாட்டின் பெருமைக்குரியவர். அவருடைய பிறந்தநாளில் தனித்துவமான ஒன்றை அவருக்குப் பரிசளிக்க விரும்புகிறோம். அதனால்தான் இந்த பிரமாண்ட தாலியை வெளியிட முடிவு செய்தோம். அதற்கு 56 இன்ச் மோடி ஜி தாலி என்று பெயரிட்டோம்.

    இதனுடன், நாங்கள் அவருக்கு இந்த தட்டை பரிசளிக்க விரும்புகிறோம், அவர் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இதை செய்ய முடியாது. எனவே அவரை மிகவும் நேசிக்கும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த தட்டில் வந்து மகிழுங்கள். இந்த சிறப்பு தாலி வாடிக்கையாளர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் அளிக்கும்.

    இதற்காக வெகுமதியை வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். யாராவது 40 நிமிடங்களில் இந்த பிளேட்டை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.8.5 லட்சம் பரிசாக வழங்குகிறோம்.

    மேலும், செப்டம்பர் 17 முதல் 26 வரை எங்களிடம் இந்த உணவை சாப்பிடுபவர்கள், அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் கேதார்நாத்தை தரிசிக்க டிக்கெட் பெறுவார்கள். ஏனெனில் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் இதுவும் ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 15, 17-ந் தேதிகளில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
    • சிறப்புப் பரிசு வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் அண்ணா, பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா, பெரியாா் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மேற்கண்ட நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கும், பிற்பகல் 2 மணிக்கு கல்லூரி மாணவா்களுக்கும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது.

    அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தாய் மண்ணுக்குப் பெயா் சூட்டிய தனயன்', 'மாணவா்க்கு அண்ணா', 'அண்ணாவின் மேடைத் தமிழ்', 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும்', 'பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள்', 'அண்ணாவின் தமிழ் வளம்', 'அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி !' 'மக்களிடம் செல்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது.

    பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவா்களுக்கு 'தொண்டு செய்து பழுத்த பழம்', 'தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும்', 'தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள்', 'தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம்', 'தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்' ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு 'தந்தை பெரியாரும், பெண் விடுதலையும்', 'தந்தை பெரியாரும், மூடநம்பிக்கை ஒழிப்பும்', 'பெண் ஏன் அடிமையானாள்?', 'இனிவரும் உலகம்', 'சமுதாய விஞ்ஞானி பெரியாா்', 'உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும்' ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவருக்கு தலா ரூ.2 ஆயிரம் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.

    மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலராலும், கல்லூரி போட்டிக்கு கல்லூரி கல்வி இணை இயக்குநராலும் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே பங்கேற்ற இயலும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருக்கிறார்.
    • கிருஷ்ணம்மாள் எந்த நோய் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார்.

    துடியலூர் :

    கோவை தடாகம் ரோடு கணுவாய் காளியூர் சுடுகாடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவர் கடந்த 1917-ம் ஆண்டு பிறந்தார். தற்போது 106 வயதான கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு நேற்று பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணம்மாளின் கணவர் ராயப்பர் கவுண்டர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ராயப்பன் என்ற மகனும், ராயக்காள் என்ற மகளும் உள்ளனர்.

    ராயப்பன், அவருடைய தங்கை ராயக்காள் ஆகியோருக்கு தலா 3 குழந்தைகள் உள்ளனர். ராயக்காளின் 3. குழந்தைகள் மூலம் 7 பேரன் பேத்திகள் மற்றும் 2 கொள்ளுப்பேத்திகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணம்மாளின் பிறந்த நாளை கிடா வெட்டி உறவினர்கள் மற்றும் பொது மக்களுக்கு விருந்து கொடுத்து கொண் டாடினர். மேலும் அவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இது குறித்து கிருஷ்ணம்மாளின் குடும்பத்தினர் கூறுகையில், கிருஷ்ணம்மாள் எந்த நோய் பாதிப்பும் இன்றி வாழ்ந்து வருகிறார். அவர், ராகி, சோளம் போன்ற தானிய உணவு வகைகளையே சாப்பிடுகிறார். கீரை கட்டாயமாக சேர்த்துக் கொள்வார். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியமாக இருக்கிறார். எங்களிடம் பாசத்துடன் நடந்து கொள்வார் என்றனர்.

    • உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    • பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

    • ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்ததின போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது.

    மதுரை

    மதுரை நாடார் உறவின்றைக்குப் பாத்தி யமான ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமரா ஜரின் 120-வது பிறந்தநாள் விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பள்ளித்தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். பள்ளி துணைத்தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத்தலைவருமான எஸ்.கே. மோகன் முன்னிலை வகித்தார்.

    பள்ளி துணைச்செயலாளர் செந்தில்குமார், பள்ளி விடுதிக்குழுச்செயலாளர் குமார், மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செ யலாளர் வி.பி.மணி, பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் காசிமணி, ஜெயராஜ்-அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் சூசை அந்தோணி ஆகியோர் பேசினர்.

    சிறப்பு விருந்தினராக மதுரை இலக்கிய மன்றம் நிறுவனர் -தலைவர் அவனி மாடசாமி கலந்து கொண்டு காமராசர் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். மேலும் அவர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மதுரை மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் அதிக வெற்றிப் புள்ளிகளை பெற்ற முதல் 3 பள்ளிகளுக்கு சுழற்கோப்பை வழங்க ப்பட்டது. மதுரை புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசினையும், திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 2-வது பரிசினையும், மதுரை தியாகராஜர் நன்முறை மேல்நிலைப்பள்ளி 3-வது பரிசினையும் பெற்றனர்.

    தலைமையாசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியங்கள் வரைதல் உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

    விழாவில் பள்ளியின் தாளாளர் வெல்கம் என்.மோகன், மாவட்ட ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை மேற்கு மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.சிவசாமி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி நிர்வாக இயக்குனர் அருண் பிரசாத் மோகன் வரவேற்றார். விவேகா மெட்ரிக் பள்ளி தாளாளர் வெல்கம் மோகன் நன்றி கூறினார்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இலுப்பூர் கல்வி மாவட்டத்திலேயே முதல் இடம் பெற்ற பள்ளி விராலிமலை விவேக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.
    • ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள  ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதா ஜியின் 60-வது ஜன்ம தின பூஜை ஆடி முதல் நாளான நேற்று நடைபெற்றது.

    புனித நீருடன் கலசங்கள் வைக்கப்பட்டு யாக வேள்விகளு டன் பூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு பல வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் உடன் மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜிக்கு பாத பூஜை உடன் கலச அபிஷேகம் செய்தனர். மதியம் மகேஸ்வர பூஜையுடன் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

    யோகினி சிவாம்பா சரஸ்வதி மாதாஜி அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வில் பல நகரங்களில் இருந்து வந்திருந்த சாதுக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்ட அனை வருக்கும் அருளாசி வழங்கினார்கள்.

    • கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
    • உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர்.

     மதுரை

    மதுரை கரும்பாலை நாடார்உறவின்முறை சார்பில் காமராஜர் பிறந்த தின விழா நடந்தது. மைக்கேல் ராஜ் தலைமை தாங்கினார். வேல்முருகன், மகளிர் அணியை சேர்ந்த பாக்கியலட்சுமி, கோகிலா மற்றும் ேமாகன், சேகராஜ் முன்னிலை வகித்தனர்.

    மகளிர் மற்றும் உறவின்முறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் 200 பேர் பால்குடம் எடுத்து வந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அபிஷேகம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை குட்டி என்ற அந்தோணிராஜ், சுவிட்ராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருந்தலைவர் காமராஜ ரின் 120-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதையொட்டி பெரியகடை வீதியில் உள்ள அவரது சிலைக்கு, நாடார் உறவின்முறை பரிபாலன சங்கத்தின் தலைவர் தங்கபாண்டியன், செயலாளர் பி.ராஜகுரு ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அழகர்சாமி, ஜெயராஜ், சீனி வாசன், துரைபாண்டி யன், ஜெயசேகர், பாண்டி யராஜன், ஐஸ்ஜெயராஜ், மீனா, காசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் துணைதலைவர் லதாகண்ணன், வார்டு உறுபினர்கள் குருசாமி, சத்யபிரகாஷ், முத்துலட்சுமி சதீஸ் மற்றும் பேட்டை பெரியசாமி, பேரூர் செயலாளர் முனியாண்டி, வார்டு செயலாளர் நாகேந்திரன் தவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர் விரும்பராஜன் தலைமையில் பேரூர் செயலாளர்கள் திரவியம், வாடிப்பட்டி மதன், மதுரை தெற்கு மாவட்ட துணைசெயலாளர் வீரமாரிபாண்டியன், மாவட்ட விவசாய அணி முள்ளைசக்தி மற்றும் வழக்கறிஞர் காசிநாதன், மீனாட்சிசுந்தரம் ஜெயராமன், தவமணி, மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    இதே போல நாம்தமிழர் கட்சி பேரூர் நிர்வாகி சங்கர் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • அரசு பள்ளியில் காமராஜ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
    • வேட்டி, சட்டை, துண்டு மாணவர்கள் அணிந்து வந்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்பட்டது.

    காமராஜர் படத்திற்கு தலைமை ஆசிரியர் கோ.மூர்த்தி மாலை அணிவித்து, மரியாதை செலுத்த் தினர். காமராஜர் பற்றிய பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் காமராஜரின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர் ரேவதி சுதாதேவி, சத்யப்ரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்கள் வேட்டி, சட்டை, துண்டு காமராஜரின் முகமூடி (மாஸ்க்) அணிந்து வந்து கலந்து கொண்டிருந்தனர்.

    கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளையொட்டி வேட்டி, சட்டை, துண்டு, 

    ×