என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BJP President Annamalai"
- பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்று வந்தது.
- பிரமாண்ட மேடை மற்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பங்கு பெரும் பிரமாண்ட பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
பொதுக்கூட்டம் நடை பெறுவதற்கான பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜேஷ் ராஜா தலைமையில் நடைபெற்று வந்தது.
பிரமாண்ட மேடை மற்றும் 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமரும் வண்ணம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே .ஏ. ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், கே.எம். அருள் செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை எஸ். மாரியப்பன், அகில பாரத அய்யா வழி மக்கள் பேரியக்கம் ஸ்ரீவைகுண்ட வரகவி ஸ்ரீ குரு சிவச்சந்திரன் சுவாமிகள், மண்டல் பார்வையாளர் முருகேசன், சுரண்டை அருணாச்சலம், அரசு தொடர்பு பிரிவு குத்தாலிங்கம், தென்காசி நகர பொதுச்செயலாளர் யோகா சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
- பாராளுமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
தூத்துக்குடி:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
வரவேற்பு
இதற்காக நாளை (24-ந்தேதி) காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து நெல்லை சாலையில் மறவன்மடம், கோரம்பள்ளம் இடையே உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் தூத்துக்குடியில் உள்ள அனைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணிக்கு 3-ம் மைலில் உள்ள தேவர் சிலைக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, துணைத் தலைவர் தங்கம், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பரமசிவம், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சின்னத்தங்கம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கிறார்.
மாலை அணிவிப்பு
தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் தலைமையில் மாலை அணிவிக்கிறார்.அதனைத் தொடர்ந்து குருஸ் பர்னாந்து சிலைக்கு மாவட்ட துணைத் தலைவர் வாரியார், மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் விவேகம் ரமேஷ் தலைமையில் மாலை அணிவிக்கிறார். வ.உ.சி.சிலைக்கு மாவட்ட பா.ஜ.க. பொருளாளர் சண்முக சுந்தரம் மற்றும் முன்னணி நிர்வாகிகள் தலைமையில் மாலை அணிவிக்கிறார்.
செயல்வீரர் கூட்டம்
பின்னர் காமராஜர் சிலைக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன், துணைத் தலைவர் சுவைதர் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 12 மணிக்கு தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெறும் மாவட்ட பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி பேசுகிறார்.
கூட்டத்தில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்,பூத் கமிட்டி நிர்வாகிகள், கிளை கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய முன்னணி நிர்வாகி கள் உட்பட கட்சியின் அனைத்து பொறுப்பா ளர்களையும் சந்தித்து பேசுகிறார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றபின் முதல் முறையாக தூத்துக்குடியில் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி பேச இருப்பதால் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்.
தென்காசி
பின்னர் தென்காசி மாவட்டம் செல்கிறார். அங்கு அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தென்காசியில் நடைபெறும் பொதுக்கூ ட்டத்தில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார்.
- தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
- அப்போது பாராளு மன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது குறித்து கட்சியினரிடம் அவர் கருத்துக்களை கேட்கிறார்.
தூத்துக்குடி:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாளை (12-ந் தேதி) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வருகிறார்.
நிர்வாகிகள் கூட்டம்
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க. அதிக எம்.பி. தொகுதியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் நோக்கில் கட்சிப் பணிகளை அவர் தீவிரப் படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடியில் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் மாநில தலைவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள மாணிக்கம் மஹாலில் காலை 10 மணிக்கு நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம், நெல்லை தெற்கு மாவட்டம்,வடக்கு மாவட்டத்தில் உள்ள சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் வியூகம்
அப்போது பாராளு மன்ற தேர்தலுக்கான வியூகம் அமைப்பது குறித்து கட்சியினரிடம் அவர் கருத்துக்களை கேட்கிறார்.
சுமார் 3 மணி நேரம் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்ட பின்னர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெரும் வியூகம் குறித்து அண்ணாமலை பேசுகிறார், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் இக்கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்