search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blast accident"

    • பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
    • உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    திண்டுக்கல் நத்தம் அருகே மலை அடிவாரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

    இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், ஆவிச்சிப்பட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பட்டாக ஆலையில் நேற்று (24.08.2024) பிற்பகல் சுமார் 03.30 மணியளவில் வெடிமருந்து தயாரிக்கும் பணியின்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனியைச் சேர்ந்த திரு.கண்ணன் (எ) சின்னன் (வயது 42) த/பெ. குருசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த திரு.முனீஸ்வரன் (எ) மாசா (வயது 30) த/பெ.மாரிமுத்து ஆகிய இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்.
    • உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் நிவாரணம்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராமப் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே உள்ள கீழ உப்பிலிக்குண்டு கிராம பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்குவாரியில் இன்று நிகழ்ந்த எதிர்பாராத வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்துகளை இறக்கியபோது விபத்து ஏற்பட்டுள்ளது. கல்குவாரியை மூட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    வெடி விபத்து தொடர்பாக இருவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில், குவாரியின் உரிமையாளர் ராஜ்குமார் மற்றும் சேது என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    ×