என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bribery"

    • சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
    • லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.

    அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
    • தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.

    இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

    இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.

    • குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
    • அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.

    அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

    லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக  நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.

    கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி,  குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.

    இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
    • லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.

    அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.

    லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.

    • பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க பாண்டி(வயது 40).

    இவர் அப்பகுதியில் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் வாங்கிய 5 சென்ட் நிலத்திற்குரிய பட்டா பெயர் மாறுதல் செய்து தரகேட்டு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். மீதி ரூ.8 ஆயிரத்தையும் தந்தால் தான் பட்டா பெயர் மாற்றம் செய்வேன் என சுப்பிரமணியன் கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த தங்கபாண்டி இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனைகையும், களவுமாக பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.

    அதன்படி ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை தங்கபாண்டியிடம் கொடுத்து அனுப்பினர். அவர் அந்த ரூபாய் நோட்டுகளுடன் இன்று பாளையஞ்செட்டிகுளத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று சுப்பிரமணியனிடம் கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனைகையும், களவுமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும்

    அவினாசி :

    அவினாசி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நில அளவீடு, பெயர் மாற்றம், உள்ளிட்ட பணிகளுக்கு சென்றால் , நில அளவீடு செய்வதற்கு சர்வேயர் மோகன்பாபு லஞ்சம் கேட்பதாகவும் அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் தாலுகா அலுவலகம் முன்பு தொடர்ந்து தர்ணா மற்றும் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அவர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்படி மாவட்ட கலெக்டர் எஸ்.வினித் இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட நில அளவையாளர் மோகன்பாபுவை நீலகிரி மாவட்டம் குந்தா வட்டத்திற்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

    • தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றியவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
    • 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதிப்பு.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா உடையார்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேலு (வயது45).

    விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது விவசாய நிலத்தில் பைப்புதைக்க, தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டார். அப்போது, வங்கி தரப்பில், நில மதிப்பு சான்று கேட்டனர்.

    இதையடுத்து ராஜவேலு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

    இந்தநிலையில் நில மதிப்பு சான்றிதழை பெற்றுத்தருவதாக கூறி, தாசில்தார் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பாபநாசம் காப்பான் தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (58) என்பவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

    அரசு பணி செய்வதற்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத ராஜவேலு, கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி வழக்குப்பதிவு செய்து கல்யாணசுந்தரத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தார்.

    இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரணை செய்து கல்யாணசுந்தரத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    அரசு தரப்பில் வக்கீல் முகமதுஇஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.

    • நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார்.
    • அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி. சாத்தமங்கலம் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல் உள்ளிட்ட தானியங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.தற்போது நெல் அறுவடை என்பதால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை மூட்டை மூட்டையாக கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் பூதங்குடியைச் சேர்ந்த முகுந்தன் (வயது 40). இளம் விவசாயி. இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் 450 மூட்டை நெல் விளைந்தது. இதனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தார்.இதனை அங்குள்ள தலைமை லோடு மேன் தியாகராஜன் (55), மற்றும் ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அங்கு வந்த நெல் வியாபாரிகள் இந்த 450 மூட்டையை தவிர மீதமுள்ள நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றனர்எனது நெல் மூட்டைகள் ஏன் விலை போகவில்லை என நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் அப்துல் ரகுமானிடம் (45) முகுந்தன் கேட்டுள்ளார். இதற்கு அவர் தலைமை லோடு மேனை பார்க்குமாறு கூறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து தலைமை லோடு மேனை முகுந்தன் சந்தித்தார். அவர் ஒரு மூட்டைக்கு ரூ.55 வீதம் மொத்தம் ரூ.25 ஆயிரம் கேட்டுள்ளார்.பணத்தை ஏற்பாடு செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்ட விவசாயி முகுந்தன், நேராக கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதனிடம் விஷயத்தை கூறினார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை முகுந்தனிடம் அளித்தனர்.

    அதனை எடுத்துக் கொண்டு சி. சாத்தமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்திற்கு இன்று காலை முகுந்தன் சென்றார்.அப்போது அங்கிருந்த ஊழியர்கள் தலைமை லோடு மேனும், எழுத்தரும் அறைக்குள் பேசிக் கொண்டுள்ளனர். அங்கு செல்லுங்கள் என்று கூறினர். இதையடுத்து முகுந்தன் அறைக்குள் சென்றார்.மாறு வேடத்தில் முகுந்தனை பின் தொடர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு மறைந்திருந்தனர். அப்போது முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரம் பணத்தை எழுத்தர் அப்துல் ரகுமானிடம் வழங்கினார். பணத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்குமாறு எழுத்தர் கூறினார்.இதையடுத்து முகுந்தன் தான் கொண்டு சென்ற ரூ.25 ஆயிரத்தை தலைமை லோடு மேன் தியாகராஜனிடம் வழங்கினார்பணத்தை வாங்கிய தியாகராஜன் அதனை எண்ணத் தொடங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எழுத்தர் அப்துல் ரகுமான், தலைமை லோடு மேன் தியாகராஜன் ஆகிய 2 பேரை கையும், களவுமாக கைது செய்தனர்விவசாயியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய சம்பவத்தில் 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    நாகப்பட்டினம்:

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமா மற்றும் போலீசார், களியல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுப்பதற்காக ரசாயன பொடி தடவப்பட்ட 4500 ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோனிடம் கொடுத்தனர். அந்த நோட்டுகளை அவர், கிராம நிர்வாக அதிகாரி முத்துவிடம் கொடுத்தார். அதனை முத்து வாங்கியதும் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

    தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சரிபார்த்து வருகிறார்கள். கிராம நிர்வாக அலுவலர் முத்து மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவல கத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
    • இருவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது என்பது காவல் துறையில் கரும் புள்ளியாகவே எப்போதும் இருந்து வருகிறது.

    சிக்னல்களில் நின்றபடி லாரிகள், சரக்கு வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி கொண்டே இருக்கின்றன. செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பின்னர் பொது மக்களே இது போன்ற வீடியோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து போலீசார் இருவர் லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் சிக்கி உள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள போலீஸ் பூத்தில் வைத்து வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கரிடம், இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெகடர் ஜெய்சங்கர், ஏட்டு பாலாஜி ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது. எத்தனை பேரிடம் லஞ்சம் வாங்கினர்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்.
    • அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் சாவடியை சேர்ந்தவர் பரணி. இவர் வீடு கட்டுவதற்கு கடலூர் மாநகராட்சியில் அனுமதி கேட்டு ண்ணப்பித்தார். இது தொடர்பாக அனுமதி வழங்கும் அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகதெரிகிதறது .இதனால் மன    உளைச்சலடைந்த பரணி கடலூர் லஞ்ச ஓழிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார் ரசாயணம் கலந்த ரூபாய் நோட்டுகளை பரணியிடம் வழங்கி அதிகாரிளிடம் வழங்க கூறினார்கள். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அலுவலகத்திற்கு பணத்துடன் வந்த பரணி, ஊழியர் ரகோத்தமனிடம் பணத்தை கொடுத்தார். இதனை வாங்க மறுத்த ஊழியர், அருகில் உள்ள தனியார் கட்டுமான அலுவலக உரிமையாளரை பார்த்து அவரிடம் பணம் கொடுக்க கூறினார்.

    தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் ஆறுமுகத்திடம் சென்ற பரணி, ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆறுமுகத்தை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர் ரகோத்தமனையும் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து மேலும், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×