என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BRIDEGROOM SUICIDE"
- செந்தமிழ்செல்வன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலக்கண்ணன் மகன் செந்தமிழ்செல்வன் (வயது 28). சிதம்பரம் நகராட்சியில் தற்காலிக டிரைவராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் செந்தமிழ்செல்வன் நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கடந்த 15-ந்தேதி வயிற்று வலி அதிகமானதால் வலியில் அலறி துடித்தார்.
இதனால் மன வேதனையில் இருந்த செந்தமிழ்செல்வன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் செந்தமிழ்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செந்தமிழ்செல்வனின் சகோதரர் நடராஜன் சிதம்பரம் நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியில் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு தாய் வீட்டுக்கு சென்றதால் விரக்தியடைந்த புதுமாப்பிள்ளை தூக்கில் தற்கொலை செய்துகொண்டார்
- மனமுடைந்த கார்த்திக் தனிமையில் யாருடனும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளார்
திருச்சி:
திருச்சி உறையூர் சிவந்தி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் கார்த்திக் (வயது 27). இவர் அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார்.
இவருக்கும், இவரது உறவுக்கார பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த ஏழு நாட்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கார்த்திக்கின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் கார்த்திக் தன் மனைவியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் கார்த்திக் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கார்த்திக் தனிமையில் யாருடனும் பேசாமல் விரக்தியாக இருந்துள்ளார்.
இதையடுத்து சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உறையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்