என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Bumpy road"
- பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, பனப்பாக்கத்திலிருந்து உளியநல்லூர் செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.
பனப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் இந்த வழியாக பனப்பாக்கம் அரசு மேல்நிலை ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளியில் படித்து வரும் பள்ளி, மாணவர்கள் மற்றும் காஞ்சிபுரம், வாலாஜா செல்லும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த வழியாக சென்று வருகின்றனர்.
வேலைக்கு செல்வோர் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் விளைந்த பொருட்களை பனப்பாக்கம், காஞ்சிபுரம் எடுத்து செல்ல இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
அதிகமாக மக்கள் சென்றுவரும் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதாக புகார்
போளூர்:
போளூலருந்து ஜவ்வாது மலைக்குச் செல்லும் பிரதான சாலை வீரப்பன் தெரு ஆகும். இந்த தெருவில் 10 இடங்களுக்கு மேல் குண்டும் குழியுமாக பல மாதங்களாக உள்ளன, இதனால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன.
தொடர் மழையால் குழிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது சிலர் இரு சக்கர வாகனங்களில் சென்றபோது விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளனர்.
எனவே இந்த ப் பிரதான சாலை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.
- இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
இரு மாநில எல்லையை இணைக்கும் நாவற்குளம் பிரதான சாலை குண்டும் குழியுமான நிலையில் போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவை- திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து பாட்டானூர்-நாவற்குளம் வழியாக புதுவைக்கு செல்லும் பழமை வாய்ந்த பிரதான சாலை உள்ளது.
தமிழக புதுவை எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில் குடியி ருப்புகள் பெருகி மக்கள் எண்ணிக்கையும் கூடியுள்ளது.
இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், 2002-ம் ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலை தற்போது மிகுந்த சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் வரை மிகவும் சிரமப்பட்டு சென்று வர வேண்டி உள்ளது.
மழைக்காலங்களில் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமாக இருப்பதாகவும், அருகிலுள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு செல்ல தாமதமானதால் வழியிலேயே குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சாலை சமீபத்தில் புனரமைக்கப்பட்டாலும் கொஞ்சம் நாட்களிலேயே சாலை சேதமடைந்தன. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் இங்கு வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்களை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் தமிழக அரசானது இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என நாவற் குளம் பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
- காடாம்புலியூரில் கனமழை காரணமாக குண்டும் குழியுமான சாலையை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.
- 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளது.
கடலூர்:
கடந்த 10ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை தரம் உயர்த்தப்பட்டு நாற்கர சாலை அமைக்கும் பணி நடை பெற்று வந்தது. இந்த நாற்கர சாலை பணிக்காக சாலை ஓரங்களில் இருந்த வீடு, நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை போடும் பணிதொடங்கியது. ஆனால் 10 ஆண்டுகளாக தொடங்கிய நிலையிலேயே இந்த பணி உள்ளதால் சாலையில் குண்டும் குழி–யும் ஏற்பட்டு உயிர் பலி வாங்கும் சாலையாக இந்த பண்ருட்டி சென்னை சாலை மாறி உள்ளது.
கடந்த 2 நாட்களாக பண்ரு–ட்டியில் மழை பெய்து வருவதால் இந்த குண்டும் குழியுமான சாலை சேரும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள குழியில் விழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக உள்ளது. எனவே கடலூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பேசி இந்த போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைத்து தரவேண்டும். பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சேரும் சகதியு மாகிய தேசிய நெடுஞ்சா லையில் உள்ள பள்ளத்தை இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சரி செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்