search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus conductor died"

    முக்கூடல் அருகே தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற அரசு பஸ் கண்டக்டர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஆலங்குளம்:

    முக்கூடலை அடுத்த பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சியை சேர்ந்தவர் சந்திரன்(வயது40). இவர் சேரன்மகாதேவி அரசு போக்குவரத்து கழக டெப்போவில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர் தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். 

    கிணற்று பம்புசெட்டுக்குள் சென்ற அவர் மின்மோட்டார் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் பலத்த காயம் அடைந்தார். 

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். வழியிலேயே சந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகிறார்கள்.
    வாலாஜா அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த எருகன்தொட்டி சின்ன தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது49). அரசு பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவர் இன்று காலை ஆற்காடு போக்குவரத்து பணிமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாந்தாங்கல் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் வாலாஜா அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் கோபி (வயது 32). இவர் நேற்றிரவு வாலாஜா பச்சையம்மன் கோவில் எதிரே உள்ள எம்.பி.டி. சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் பரிதாபமாக இறந்து போனார்.

    பாகூர்:

    பாகூர் சிவன் கோவில் பின்புறம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகாஷ் (வயது 26). இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    நேற்று இரவு பிரகாஷ் பரிக்கல்பட்டு பகுதிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாகூர்- பரிக்கல்பட்டு சாலையில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமு, ஏட்டு புவனேஷ் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் பாகூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×