என் மலர்
நீங்கள் தேடியது "camp"
- காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
திருச்சி :
முசிறி அருகே காமாட்சி பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முசிறி கோட்ட உதவி இயக்குனர் சையது முஸ்தபா அனைவரையும் வரவேற்றார்.
மண்டல இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா திட்ட விளக்க உரையாற்றினார். முகாமில் தீவன அபிவிருத்தி மற்றும் கால்நடை மேலாண்மை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது.
சிறந்த கிடேரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு மேலாண்மை விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் உலர் தீவன வைக்கோல் கட்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. 550 கால்நடைகளுக்கு தடுப்பூசி , குடற்புழு நீக்கல் , செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சினை பரிசோதனை, மற்றும் தாது உப்பு கலவை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடை உதவி இயக்குனர்கள் டாக்டர்கள் பாரிவேல், சுகுமார், கால்நடை உதவி மருத்துவர்கள் கார்த்திக், குமரேசன், கோபி, முருகேசன், விவேகானந்தன், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
- உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
- வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் கீழ் பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் உயிரி கட்டுப்பாட்டு முகவர்களின் செயல்திறன் விவசாயிகள் பயிற்சி முகாம் மாரப்ப நாய்க்கன்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.
நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, நாமக்கல் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் ஹரிதா, வேளாண்மை அலுவலர் ரசிகபிரியா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் திலிப்குமார், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
- வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
- வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வெள்ளகோவில்:
யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவில், எல்.கே.சி.நகரில் நடைபெற்றது.
வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி.ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர்.மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
- மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்க்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டல ங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டலம் 4-ம் எண் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள். இதில் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜர் புரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
- பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, முன்னிலை வகித்தார். பல்லடம் அரசு மருத்துவமனை கண் பரிசோதனை நிபுணர் பாலமுருகன் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 9 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் ஊராட்சி துணைத் தலைவர் செல்லத்துரை, ஊராட்சி செயலாளர். நேரு , மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் செவிலியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு மேல நீலிதநல்லூர் யூனியன் சேர்மன் மாதவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார். இப்பயிற்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராம குடிநீர் சுகாதார உறுப்பினர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குழுவின் செயல்பாடு, ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.
பயிற்சியின் போது களநீர் பரிசோதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி ராஜேஸ்வரி கூறினார். மேலும் வெங்கடேசன், சுகுமாரன், தனசேகரன், சடையாண்டி, முருகன், ராஜேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் நீரின் அவசியத்தை பற்றி பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.
- 850 பணியாளா்கள் முழுமையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
- மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
தஞ்சாவூர்:
வடகிழக்கு பருவ மழை யையொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களு க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
வடகிழக்கு பருவ மழையை யொட்டி தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 51 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 51 குழுக்களில் அந்தந்த மாமன்ற உறுப்பினா்களின் தலைமையில் மாநகரா ட்சியின் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்ப ட்டுள்ளனா்.
மேலும், பருவ மழையை எதிா்கொ ள்ளும் விதமாக மாநகராட்சியிலுள்ள 850 பணியாளா்களும் முழுமையாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
கட்டுப்பாட்டு அறைக்கு மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், மாநகராட்சியில் இக்குழுக்களுக்கு தகவல் அளித்து உடனடியாக போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக 18004251100 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 7598016621, 04362 - 231021 என்கிற எண்களிலும் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையிலும் மாநகராட்சி பணியாளா்கள் மூவா் பணியில் இருப்பா்.
தஞ்சாவூா் மாநகராட்சி பகுதியில் நூறு ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழைமையான கட்டட ங்களில் அதன் உரிமையா ளா்கள் பாதுகாப்பைக் கருதி யாருக்கும் வாடகைக்கு விட வேண்டாம். அதில் யாரும் குடியிருக்க வேண்டாம்.
சுகாதாரத் துறையினா், மருத்துவமனைகள், மின் ஊழியா்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
மழை அதிக அளவில் பெய்து, தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டால், அப்பகுதியைச் சோ்ந்த அனைவரையும் முகாமுக்கு அழைத்து சென்று உணவு வழங்குவது, பாதுகாப்பாக தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம் .
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மண்டலக் குழுத் தலைவா் எஸ்.சி. மேத்தா, மாநகராட்சி செயற்பொறியாளா் ஜெகதீசன், உதவிச் செயற்பொறியாளா் ராஜசேகரன், உதவிப் பொறியாளா் சந்திரபோஸ், மேலாளா் ஜெயக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
- பாலமேடு அருகே கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடந்தது.
- இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
அலங்காநல்லூர்
பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், திருமங்கலம் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலர் கிரிஜா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 180-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடல் புழு நீக்கம், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்து மருந்து வழங்கினர்.
சிறப்பாக கால்நடைகளை பராமரித்த உரிமையாளர்கள் 3 பேருக்கு சான்றிதழ், பரிசுகள் மற்றும் சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெள்ளையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், பேரூர் செயலாளர் ரகுபதி, பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், கவுன்சிலர் சரவணன், அணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
- ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டணம் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் தனி வட்டாட்சியர் குடிமைப்பொருள் வழங்கல் தமிம் ராசா தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் காளிமுத்தன் முன்னிலை வகித்தார்.
இதில் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 15 மனுக்களும், பெயர் நீக்க 12 மனுக்களும், திருத்தங்களுக்காக 9 மனுக்களும் அளிக்கப்பட்டது. இந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார், ஆதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக தலைமையகத்தின் மூலம் வேலூரில் ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக தலைமையகத்தின் மூலம் வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் அக்னி வீர், சிப்பாய் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், நர்சிங் உதவியாளர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஆகிய பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமிற்கு தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பதாரர்கள்www.joinindianarmy.nic.in-ல் பதிவேற்றியபடி அந்தந்த பேரணி அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்க ளையும் கொண்டு வர வேண்டும். ஆவணங் களின் வடிவங்களும் அறிவிப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.
முழுமையான ஆவணங்கள் மற்றும் தவறான வடிவத்தில் உள்ளவை கொண்டு வரும் விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது.
- இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது.
புதியம்புத்தூர்:
தமிழகம் முழுவதும் நவம்பர் 12,13,26,27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் போன்றவைகளுக்கு தேர்தல் கமிஷன் வாய்ப்பளித்திருக்கிறது. இந்த பணி சனி, ஞாயிறு ஆகிய 2 தினங்களிலும் நடந்தது. நேற்று ஓட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள சங்கம் பட்டி குலசேகர நல்லூர், தெற்கு ஆரைகுளம் ஆகிய கிராமங்களில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று யூனியன் சேர்மன் ரமேஷ் பார்வையிட்டார். அவருடன் கொடியங்குளம் பஞ்சாயத்து தலைவர் அருண்குமார், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் லட்சுமணன், ஒன்றிய கவுன்சிலர் மொட்டை சாமி, ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன் ஆகியோர் உடன் சென்றனர்
- வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்.
- புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று வாக்காளர் சேர்க்கை, நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இப்ப பணிகளில் புதிய வாக்காளர்களை பெயர் பட்டியலில் சேர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.
கட்சி நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, விடுதல் இல்லாமல் அனைத்து புதிய வாக்காளர்களையும் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி.கலைவாணன் எம்.எல்.ஏ திருவாரூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி சிறப்பு முகாம் பணிகளை நேரில் பார்வையிட்டு உற்சாகப்ப டுத்தினார்.
வாக்குச்சாவடி சேர்க்கை முகாம்களில், வாக்காளர் சேர்க்கை பணிகள் தொய்வின்றி நடைபெறுகிறதா என்பதை யும் கேட்டறிந்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள புதிய வாக்காளர்களை கண்டறிந்து, பட்டியலில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கட்சியி னரை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தேவா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.