search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cancer treatment"

    • ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.
    • கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி செயல்படுகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதால் தினந்தோறும் நோயாளிகள் இங்கு ஏராளமானோர் வருகிறார்கள்.

    இதற்கிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ஏற்கனவே அதிநவீன கதிரியக்க கருவி உள்ளது. ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் இருந்து வருகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஜிப்மரில் புற்று நோயாளிகளுக்கு விரைந்து கதிரியக்க சிகிச்சை அளித்திடும் வகையில் ரூ.30 கோடியில் அதிநவீன கருவி வாங்க மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்த கருவி பொருத்தப்பட்டதும் தினந்தோறும் கூடுதலாக 100 புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்கவும் மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

    • பிப்ரவரி 6 அன்று மன்னர் சார்லசுக்கு கேன்சர் இருப்பதாக அரண்மனை தெரிவித்தது
    • உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது

    கடந்த பிப்ரவரி மாதம், இங்கிலாந்து மன்னரான மூன்றாம் சார்லஸ், புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் அரண்மனை அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 6 அன்று தெரிவித்தது. ஆனால், எந்த வகையான கேன்சர் என்பது பற்றியோ உடலின் எந்த பாகத்தில் உள்ளது என்பது குறித்தோ அரண்மனை அலுவலகம் தகவல் வெளியிடவில்லை.

    மேலும், மன்னர் சார்லஸ் இதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அவர் புற்று நோய்க்கான சிகிச்சை பெற தொடங்கி விட்டதாகவும் அரண்மனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மன்னர் மூன்றாம் சார்லஸ் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகெங்கும் உள்ள பல முக்கிய தலைவர்கள் செய்தி அனுப்பி வந்தனர்.

    மேலும், பல இங்கிலாந்து மக்களும் மன்னர் சார்லஸ் நலம் பெற அவருக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

    இதுவரை உலகெங்கிலும் இருந்து 7 ஆயிரத்திற்கும் மேலான கடிதங்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    குறிப்பாக, குழந்தைகள் தங்கள் கைப்பட எழுதி மற்றும் வரைந்து அனுப்பியுள்ள கடிதங்கள் தினந்தோறும் அரண்மனையில் குவிகின்றன.


    இது குறித்து மன்னர் சார்லஸ் தெரிவித்திருப்பதாவது:

    இது போன்ற அன்பான எண்ணங்கள்தான் எனக்கு பெரும் ஆறுதலையும், ஊக்கத்தையும் தருகின்றன. பல கடிதங்களை படிக்கும் போது எனக்கு கண்களில் நீரே வந்து விட்டது.

    நான் நலமடைய விரும்பும் அனைவருக்கும் என் நன்றி.

    எனக்காக நேரம் ஒதுக்கி தங்களின் அன்பான வார்த்தைகளால் கடிதம் எழுதிய அனைவருக்கும் நன்றி.

    இவ்வாறு சார்லஸ் தெரிவித்தார்.

    • பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று
    • இதுநாள் வரை நோய்க்கான சிகிச்சைமுறையில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று கேன்சர் (cancer) எனப்படும் புற்று நோய்.

    ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.

    இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.

    புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்" என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்தார்.

    • தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது.

    மதுரை

    மருத்துவம் ஓர் மகத்தான சேவை, சாதாரண மனிதனுக்கும் எளிதில் சென்றடைய மனிதநேயத்துடன் கூடிய தரமான மருத்துவ சேவை செய்வதை நோக்கமாகவும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது.

    22 ஆண்டுகளுக்கு முன்பு அதிநீவன ஸ்கேன் கருவிகளை கொண்டு தென் தமிழகத்தில் ஒரு புரட்சியை செய்து வந்தது. குறைந்த செலவில் தரமான மருத்துவ பரிசோதனை கிடைப்பதால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் CT ஸ்கேன், MRI Scan, USG ஸ்கேன், ECG. ECHO, TMT, DIGITAL X-RAY, Mammogram மற்றும் அதிநவீன ரத்த பரிசோதனை ஆய்வகம் (Laboratory) மூலம் பயன் பெறுகின்றனர்.

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2006-ம் ஆண்டு தேவகி புற்றுநோய் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். தென் தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன "லீனியர் அக்ஸிலரேட்டர்" புற்றுநோய் கதிர்வீச்சு கருவியை கொண்டு புற்று நோய்க்கான துல்லியமான சிகிச்சையை இன்று வரை தொடர்ந்து வழங்கி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை பிரிவு, கீமோதெரபி என்னும் மருத்துவ சிகிச்சை பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நோயாளிகள் அதிக அளவில் பயனடைகிறார்கள்.

    புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டு தோறும் பிப்.4-ந்தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    2023-ஆம் ஆண்டில் Close the care gap என்பதே இந்த தினத்தின் மையக் கருத்தாக உள்ளது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அதற்கான முறையான குணப்படுத்த கூடிய சிகிச்சையை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதை மனதில் வைத்து மதுரை அரசரடி, தேவகி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த வருடம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவியான Halycon கருவி தென் இந்தியாவில் முதல்முறையாக நிறுவப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துவது மட்டுமின்றி பக்க விளைவுகளை குறைக்கிறது. இதில் 4 விதமான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    1. IMRT சிகிச்சையில் திருத்திய செறிவுடன் புற்றுநோய் பாதித்த இடத்தில் முப்பரிமான கதிர்வீச்சை செலுத்தி சுற்றியுள்ள நல்ல திசுக்களை பாதுகாக்கிறது.

    2.VMAT என்னும் சுழல் கதிர்வீச்சு மூலம் மிக குறைவான நேரத்தில் துல்லியமான கதிரியக்கத்தை செலுத்துவதாகும்.

    3. IGRT என்பது தினமும் நோய் பாதித்த இடத்தை CT Scan மூலமாக கண்டறிந்து கதிர்வீச்சை நோயின் அசைவிற்கு ஏற்ப கொண்டு சேர்ப்பதாகும்.

    4. Stereotactic முறையில் மிக சிறிய அளவிலான தலை மற்றும் உடலில் உள்ள கட்டிகளை மிக குறுகிய நாட்களில் துல்லியமாக கொண்டு சேர்க்கிறது. இந்த சிகிச்சையை வெளி நோயாளியாக இருந்தே தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

    தேவகி மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக சிறந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு, மாநில-மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், தனியார் மருத்துவ காப்பீடு உள்ளவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452 -2288832 (Emergency No: 96006 00888) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    அமெரிக்காவில் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று நாடு திரும்பினார். #ManoharParrikar #ReturnIndia
    புதுடெல்லி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கணையத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதற்காக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றா. அதைத்தொடர்ந்து, மும்பை லீலாவதி மருத்துவமனையிலும் சிகிச்சைகள் பெற்றார்.

    ஆனாலும், மேல் சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தற்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிறைவுற்றுள்ளது. இதையடுத்து, மனோகர் பாரிக்கார் இன்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் வந்த மனோகர் பாரிக்கர், மும்பை வந்தார். அங்கிருந்து கோவா செல்கிறார். #ManoharParrikar #ReturnIndia
    10 அரசு ஆஸ்பத்திரிகளில் 170 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன கருவி அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    எழும்பூர் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி நிலையத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்து, அரசு அலுவலர்களுக்கு புகையிலை தடுப்பு சட்ட அறிவிப்பு பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி, உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    புகைப்பிடிப்பவருக்கு ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. தேசிய குடும்ப நல ஆய்வு 20152016ன்படி இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை 40.1 சதவீதத்திலிருந்து 31.7 சதவீதமாக குறைந்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடுப்புச்சட்டம், பொது இடங்களில் புகை பிடித்தலை தடை செய்கிறது, சிறார்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும், சிறார்கள் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதையும் தடை செய்கிறது.

    மேலும், ரூ.170 கோடி மதிப்பில் புற்று நோய் சிகிச்சைக்கான நேரியல் முடுக்கிகள் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, காஞ்சீபுரம் மாவட்டம் காரப்பேட்டை மற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய 10 இடங்களில் விரைவில் அமைக்கப்படும். காஞ்சிபுரம், கோயம்புத்தூர், விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 அரசு மருத்துவமனைகளில் ரூ.1.50 கோடி செலவில் புற்றுநோயாளிகளுக்கான 10 வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிசிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.


    ×