search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cannabis dealer"

    • அரகண்டநல்லூரில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
    • இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் அரங்கண்டநல்லூர் போலீசார் மணம்பூண்டி மேடு ரவுண்டானா அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை அழைத்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.சந்தேகமடைந்த போலீசார் அவரை சோதனையிட்டனர்.

    அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சோலைவண்டிபுரத்தை சேர்ந்த சுப்பரமணி மகன் மோகன் என்கிற மோகன்ராஜ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, மேற்படி கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • 1¼ கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கஸ்பா சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

    இந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்ட்டு ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார் அவரது மேற்பார்வையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ஜெகதீசன் உள்ளிட்ட போலீசார் கொண்ட தனிப்படை போலீசார் நேற்று மாலை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    அப்போது ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனைக்கு வைத்திருந்த குடியாத்தம் தரணம்பேட்டை ஷெரிப் நகர் 2வது தெருவை சேர்ந்த அஸ்லாம் என்கிற இம்ரான் (வயது 25) என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

    அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அஸ்ஸலாமை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி வந்தவர் போலீசாரிடம் பிடிபட்ட கஞ்சா வியாபாரி அஸ்லாம் தொடர்ந்து பல வருடங்களாக கஞ்சா விற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் கஞ்சாவுடன் அஸ்லாமை பிடித்தனர்.

    அப்போது பிளேடால் உடல் முழுவதும் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரை மிரட்டி தப்பி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முத்திரையர் பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முத்திரையர் பாளையம் கல்கி கோவில் அருகே புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சா பொட்டலங்களை விற்க தயார் செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் 10 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்களில் ஒருவன் காந்தி திருநல்லூரை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), மற்றொருவன் திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன் (21) என்பதும், மொத்த கஞ்சா வியாபாரியான தர்மனிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து அய்யப்பன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    மேலும் விசாரணையில் புதுவையில் தங்கி விற்பனை செய்ய தர்மன் விரும்பியதால் தர்மனை அய்யப்பன் புதுவை அழைத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×