search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CAR LOAN"

    • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனக் கடனைப் பத்திரப்பதிவு விதிகளைப் பின்பற்றி மட்டுமே வசூலிக்க வேண்டும்.
    • மீட்பு முகவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.

    கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக உரிமையாளர்களிடமிருந்து மீட்பு முகவர்கள் மூலம் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வாகனங்களை வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்வது வாழ்வு மற்றும் வாழ்வாதாரத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்று பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    'மீட்பு முகவர்கள்' என்று அழைக்கப்படும் குண்டர்கள் வாகனங்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு முற்றிலும் தடை செய்கிறது.

    இதுதொடர்பான 5 மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பிரசாத், "வாடிக்கையாளர் மாத தவனை செலுத்தத் தவறியிருந்தால், வாகனத்தை பறிமுதல் செய்ய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீட்பு முகவர்களின் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. அத்தகைய மீட்பு முகவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுகிறேன்.

    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனக் கடனைப் பத்திரப்பதிவு விதிகளைப் பின்பற்றி மட்டுமே வசூலிக்க வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • நான் சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு திருச்சி தாட்கோ அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன்
    • அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து விட்டேன்

    திருச்சி,

    திருச்சி ஏவூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன். இவர் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். தற்போது முசிறி பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, வாடகை கார் ஓட்டி குடும்ப நடத்தி வருகிறேன்.

    கடந்த 15 வருடங்களாக வாடகை கார் ஓட்டும் நான் சொந்தமாக ஒரு கார் வாங்குவதற்கு திருச்சி தாட்கோ அலுவலகத்தில் மனு அளித்திருந்தேன். அவர்கள் கேட்ட அனைத்து சான்றிதழ்களையும் ஒப்படைத்து விட்டேன். அதைத்தொடர்ந்து தாட்கோ அலுவலகம் பரிந்துரை செய்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை மேலாளர் எனக்கு கார் லோன் தர மறுக்கிறார்.

    எனவே கார் லோன் வழங்கிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×