என் மலர்
நீங்கள் தேடியது "Cell phone"
- கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
- கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வெள்ளியின்று நடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே., ஆர்.சி.பி. இடையேயான போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியின்போது போட்டியை காண வந்த ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு போனது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் செல்போன்களை திருடிய வட மாநிலத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 36 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
பிளாக்கில் டிக்கெட் வாங்கி மைதானத்திற்குள் சென்று செல்போன்களை திருடி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னை வந்து அறை எடுத்து தங்கி, ஐ.பி.எல். போட்டியை காண வந்த ரசிகர்களிடம் கைவரிசை நடத்தி உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிய செல்போன்களுடன் வேலூர் சென்று அங்கிருந்து பஸ் மூலம் ஜார்க்கண்ட் செல்ல இருந்தவர்களை, திருவல்லிக்கேணி ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் வேலூர் பஸ் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- தவுபிக் தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பல்லடம் :
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்தவர் தவுபிக்(வயது 37). இவர் பல்லடம் பனப் பாளையம் பகுதியில் உள்ள, தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்குச் செல்வதற்காக மில்லில் இருந்து வெளியே வந்துள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள், பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அவர் தர மறுக்கவே அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் வைத்திருந்த சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள செல்போன், ரொக்கம் ரூ.10,000 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதையடுத்து காயத்துடன் தொழிற்சாலைக்குச் சென்று அதன் உரிமையாளரிடம் கூறியுள்ளார். பின்னர் இது பற்றி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி சேர்ந்தவர் மாலதி (வயது 36) .இவர் மாளிகை மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடலூர் பி.என்.பாளையம் சேர்ந்த தணிகாசலம் (வயது 38). பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி பெற்றார்.இதை தொடர்ந்து 2 பேரும் மொபைலில் பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் மாலதியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தணிகாசலம் தானாக முன்வந்து பல உதவிகள் மாலதிக்கு செய்து வந்தார். ஆனால் தணிகாசலத்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் பேசுவதை மாலதி நிறுத்தி விட்டார்.
சம்பவத்தன்று மாலதி தனது இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தணிகாசலம் மாலதியை வழிமறித்து அவரது செல்போனை பறித்து யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாலதி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் தணிகாசலம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
- ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.
மதுரை
மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.
உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
- மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் போட்டோவை மார்பிங் செய்ததை அறிந்த மோகனசுந்தரி அதிர்ச்சியில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
- வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்துள்ளார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் இருகலூரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (42). இவரது மனைவி மோகன சுந்தரி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நம்பியூர் அரசு போக்குவரத்துக்கு கழக கிளையில் வெங்கடாசலம் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனசுந்தரி ஆன்லைன் செயலி மூலமாக கடன் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் மோகனசுந்தரியின் செல்போனை ஹேக் செய்து அதில் இருந்த அனைத்து போன் நம்பர்களையும் எடுத்து அனைவருக்கும் அவரது போட்டோவை மார்பிங் செய்து அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மோகனசுந்தரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிலுக்கு சென்று வருவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு சென்ற மோகனசுந்தரி அதன் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெங்கடாசலம் நம்பியூர் போலீசில் மாயமான மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மோகன சுந்தரியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த விஜய்,பிரவீன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் கர்நாடகா எண் கொண்ட திருட்டு வாகனம் என தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விஜய்,பிரவீன் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவர்களுக்கு வேறு கொள்ளையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செல்போனை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
- பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக திருச்செந்தூருக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார்.
சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கொண்டு செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பக்தர்களின் செல்போன்களை வைத்து விட்டு தரிசனம் செய்வதற்கு ஏதுவாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதனை இன்று அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா சேவைக்காக 4 சக்கர வாகன பயன்பாட்டினை தொடங்கி வைத்தார். மேலும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 25 ஆண்டுகளாக பணியாற்றிய 10 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு உபயதாரர் பணிகளை ஆய்வு செய்து பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் யாத்திரை நிவாஸ் பணிகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து திருச்செந்தூர் கோவில் நிதியில் இருந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மற்றும் சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சிகளில் கலெக்டர் செந்தில்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் குமரகுருபரன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் கார்த்திக், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் பறித்து சென்றனர்.
- நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
திருச்சி மாவட்டம் ஏளூர்பட்டியை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் கடந்த2-ந்தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது உறவினர் திருமுருகன் நாமக்கல் பகுதிகளில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.
வீரம்மாளை பார்ப்ப–தற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திருமுருகன் மருத்துவமனை குள்ளேயே போதை தலைக்கு ஏறும் அளவிற்கு மது குடித்துளார். பின்பு பெண்கள் வார்டு பகுதிகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துடன் கழிவறைகளையும் எட்டிப் பார்த்து உள்ளார்.
இதை கண்ட மருத்துவமனை காவலா–ளிகள் கண்டித்த போது அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திருமுருகனை மருத்துவமனை காவலாளி களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திருமுருகனை எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
- திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
சேலம்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் சம்பவத்தன்று இரவு சொந்த வேலையாக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ஜங்ஷன் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார்.
இவருடன் பயணித்த, மற்றொரு பயணி 5 ரோடு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது திடீரென கத்தி முனையில் ரமேஷ் இடமிருந்து ரூ.15,000 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.9,500-ஐ பறித்துக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிவு செய்து ரமேஷிடம் பணம் பறித்த மர்ம நபரை தேடி வருகிறார்.
- வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
- முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
மதுரை
மதுரை மேல வடம்போக்கி தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 64). இவர் நேற்று மாலை வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அவரது மனைவி சமையல் அறையில் இருந்தார். அப்போது ஒரு மர்மநபர், அவருடைய வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக்கொண்டு ஓடினார்.
இதனைப்பார்த்த ஜெயபிரகாஷ், திருடன்... திருடன்... என்று கூச்ச லிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டிலிருந்து வெளியே தப்பி ஓடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். அதன் பிறகு அவர் திடீர் நகர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் லோகே சுவரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் சிவகங்கை மாவட்டம் வேல்முடிக்கரையை சேர்ந்த பார்த்திபன் (34) என்பது தெரிய வந்தது.
அவரிடம் ஜெய பிரகாசின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பார்்த்திபனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் மீது பல வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
பார்த்திபன் முகவரி கேட்பது போல வீடுகளுக்கு சென்று எத்தனை பேர் உள்ளார்கள்? என்று வேவு பார்த்து விட்டு, திருட்டில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.நேற்று மாலை மதுரை மேல வடம்போக்கி தெருவுக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் முதியவர் ஜெயப்பிரகாஷ் டிவி பார்த்துக் கொண்டி ருந்ததை பார்த்த பார்த்திபன், நைசாக வீட்டுக்குள் புகுந்து செல்போனை திருடிக் கொண்டு தப்ப முயன்றார். அப்போது பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாயமான 159 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மதுரை
மதுரை மாநகரில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் வகையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன், தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் மீனாட்சி கோவில் சரகம்-12, தெற்கு வாசல்-2, திடீர் நகர்- 19, தல்லாகுளம்- 50, செல்லூர்- 26, அண்ணாநகர்-36 உள்பட 159 செல்போன்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும்.
மதுரை மாநகரில் தொலைந்து போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு மீட்கப்பட்ட 159 செல்போன்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), வனிதா (தலைமையிடம்), ஆறுமுகசாமி (போக்கு வரத்து) மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- முசிறியில் காணாமல் போன ரூ.1.5 லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை உரியவர்களிடம் டி.எஸ்.பி. ஒப்படைத்தார்
- புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது.
முசிறி:
திருச்சி முசிறி காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் வழியாக விசாரணை நடைபெற்றது. தனிப்படை போலீசார் புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்போன்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட ஒன்றரை லட்சம் மதிப்பிலான 12 செல்போன்கள் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் திருப்பதி, கருணாநிதி, பயிற்சி இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் காவலர் சூர்யன் ஆகியோர் உடனிருந்தனர்.