search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cemetery Day"

    • மதுரையில் நடந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
    • குடும்பத்துடன் வந்து மலர்தூவி வழிபாடு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று கல்லறை தோட்டங்களில் மலர் தூவி, படையல் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி உயிர் நீத்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மனம் உருகி கண்ணீரோடு வழிபாடு நடத்துவது வழக்கம்.இன்று (2-ந்தேதி) மதுரையில் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. மதுரையில் மகபூப் பாளையம், தத்தனேரி, பாக்கியநாதபுரம், புதூர், அழகரடி, கூடல் நகர், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.

    கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை படையல்களாக படைத்து மனம் உருகி கண்ணீருடன் இறைவழிபாடு செய்தனர். இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறும் வகையில் இறை வேண்டுதல்களும் செய்யப்பட்டன.பல்வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படவில்லை. தற்போது அங்கு கல்லறைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    • நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
    • கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.

    கடலூர்:

    கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.

    மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர். 

    ×