search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Co-operative"

    • வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
    • 2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 69-வது ஆண்டு உறுப்பினா்கள் பேரவைக் கூட்டம் ஊட்டியில் நடந்தது.

    கூட்டத்திற்கு தலைவா் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். கடன் பிரிவு மேலாளா் பிரவீன் வரவேற்றாா். கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் முத்து சிதம்பரம், வங்கியின் பொது மேலாளா் சங்கர நாராயணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பேரட்டி ராஜி, பீமன், ஹேம்சந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    கூட்டத்தில், வங்கியின் 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.

    தொடா்ந்து வங்கியின் தலைவா் வினோத் பேசியதாவது:-

    2021-22-ம் ஆண்டில் வங்கியின் லாபம் ரூ.3.06 கோடியாக உயா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு விவசாயிகளை நம்பியே இந்த வங்கி உள்ளது. வங்கியின் வைப்புத்தொகையை உயா்த்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

    மேலும், கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு வங்கிகள்தான் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கியில் ஊட்டியில் மட்டுமே ஒரு ஏ.டி.எம் மையம் இருந்தது. தற்போது மஞ்சூா், கோத்தகிரியில் ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடா்ந்து, 2021-22 ஆம் ஆண்டுக்கான வங்கியின் நிகர லாபம் ரூ.1 கோடியே 74 லட்சத்து 84 ஆயிரத்து 813-யை வங்கியின் துணை விதிகளின்படி, லாப பிரிவினை செய்ய கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    • மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • துணைத்தலைவா் முருகன் நன்றி கூறினாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட தலைவா் முருகன் தலைமையில் ராம நாதபுரத்தில் நடைபெற்றது. மாநில தலைவா் தமிழரசு, பொதுச்செயலாளா் சா்வே சன் முன்னிலை வகித்தனா்.

    ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்கள் பயன் பெறும் வகையில் கூட்டுறவு பட்டய பயிற்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.

    தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து "தமிழ்நாடு வங்கி"யாக உருவாக்கிட வேண்டும். 128 நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட பொதுச்செயலாளா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் ரமேஷ் மற்றும் திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். முடிவில் துணைத்தலைவா் முருகன் நன்றி கூறினாா்.

    ×