search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai"

    • வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சந்தோஷ் நாராயணன் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், "10 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு, முழங்கால் அளவு தண்ணீர், குறைந்தது 100 மணிநேரம் மின்வெட்டு என்பது முகத்தில் அறையும் உண்மை. இது ஒரு ஏரியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. சென்னையின் மற்ற பகுதிகளை விட எங்களிடம் ஏராளமான திறந்தவெளி நிலங்களும், குளங்களும் உள்ளன. வெறும் அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசை ஆகியவையே மழை நீர் மற்றும் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது. அது ஒவ்வொரு முறையும் ஆறு போல் பெருக்கெடுத்து எங்கள் குடியிருப்புகளை தாக்குகிறது.


    இந்த நேரத்தில் ஏதேனும் நோய் அல்லது மருத்துவ அவசரநிலை ஆகியவை மரணத்தில் முடிகிறது. எங்கள் பகுதி மக்களைச் சென்றடையவும், அவர்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் தொட்டிகளை நிரப்பவும், மீட்பு மற்றும் பிற முக்கியமான தேவைகளுக்கு உதவவும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். மீட்புப் பணிகளுக்காக என்னிடம் ஒரு படகு மற்றும் பல பம்புகள் நிரந்தரமாக உள்ளன.

    சென்னைவாசிகளின் நம்பிக்கைக்கு பாராட்டுகள், நான் செல்லும் இடங்களில் எல்லாம் மிகவும் நெகிழ்ச்சியும் நேர்மறை எண்ணங்களும் நிலவுகின்றன. தீர்வுக்கான முயற்சி இருக்கும் என நம்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    • சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களை மீட்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் தங்கர் பச்சான் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும்.

    இவ்வேளையில் உச்ச நட்சத்திர திரைப்பட நடிகர்களும், அவரவர்களின் லட்சக்கணக்கான ரசிகர்களும் களத்தில் இறங்கி உதவினால் மக்களின் நிலமை விரைவில் சீரடையும். இதை உடனே செய்தால்தான் உங்களை உயர்த்தி விடும் இந்த மக்களுக்கு நடிகர்களாகிய நீங்கள் செய்யும் நன்றி கடன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • சிரியா தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்னை 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    • தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னையில் இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சென்னையில் கிண்டி, மாம்பலம், பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளான குன்றத்தூர், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், மாதாவரம், வண்டலூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோபல், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை,

    விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மண நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படுகிறது.
    • மணலியில் காற்று மாசு அளவு 224 ஆக பதிவு.

    சென்னையில் இன்று (நவம்பர் 12) மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக பதிவாகி இருக்கிறது. நவம்பர் 10-ம் தேதி காற்று மாசு அளவு 83-ஆக இருந்த நிலையில், நேற்றைய காற்று மாசு அளவு 115 ஆகவும், இன்று 178 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசு வெடித்து வருவதால், காற்று மாசு அதிகரித்து இருக்கும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் தெரிவித்து உள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அளவு பதிவு செய்யப்பட்டதில், மணலியில் அதிகபட்சமாக காற்று மாசின் அளவு 224 ஆக பதிவாகி இருக்கிறது.

    இதே போன்று பெருங்குடியில் காற்று மாசு அளவு 221 ஆகவும், ஆலந்தூரில் 188 ஆகவும், வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 ஆகவும் பதிவாகி உள்ளது. சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் காற்று மாசு அளவு 170-க்கும் அதிகமாகவே பதிவாகி இருக்கிறது.

    • வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
    • இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    சென்னை:

    'கூகுள்' நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், போஸ்னியா-ஹெர்சகோவினா, பஞ்ஜா லூகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வருபவர் லேடன் அடமோவிக். இவர், செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'நம்பியோ' என்ற தனியார் நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.

    இந்த நிறுவனத்தின் மூலம் அவர், உலகின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார். பல செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையிலும், வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வு முடிவை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    இதில் பாதுகாப்பான மாநகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும், உலகளவில் 127-வது இடத்தையும் பிடித்துள்ளது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் 'அவ்தார்' என்ற நிறுவனம், 'வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இதில் 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை உள்ள நகரங்களின் வரிசையில் 78.4 புள்ளிகளுடன் சென்னை பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநகரம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்போது இந்திய அளவில் பாதுகாப்பான மாநகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்திருப்பது சென்னை போலீசாரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை போலீஸ் மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது என்று போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

    • சென்னையில் இருந்து பயணிகளுடன் இயக்கப்பட்ட ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.
    • நெல்லை சந்திப்பில் காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது.

    நெல்லை:

    நெல்லை-சென்னை இடையே 'வந்தே பாரத்' ரெயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

    நாளை முதல் இருமார்க்கத்திலும் இயங்கும்

    தொடக்க விழாவை யொட்டி சிறப்பு ரெயிலாக இயக்கப்பட்டது. நேற்று மதியம் சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணி களுடன் இயக்கப்பட்ட இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லை வந்து சேர்ந்தது.

    செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் ரெயில் ஓடாது. அதன்படி இன்று இந்த ரெயில் இயக்கப்பட வில்லை. நாளை (புதன் கிழமை) முதல் இருமார்க் கத்திலும் இந்த ரெயில் சரியான கால அட்ட வணைப்படி இயங்குகிறது.

    தீபாவளி முன்பதிவு

    அதன்படி நெல்லை சந்திப்பில் இருந்து (வண்டி எண்- 20666) காலை 6 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் எழும்பூரில் இருந்து (வண்டி எண்-20665) பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு நெல்லையை இரவு 10.40 மணிக்கு வந்தடைகிறது.

    இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை முடிந்து விட்டது. பலர் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இது தவிர தீபாவளி, பொங்கல் பண்டிகை காலத்தில் சென்னையில் இருந்து நெல்லைக்கு வருவதற்கு இப்போதே முன்பதிவு செய்து விட்டதால், இருக்கை கள் நிரம்பி விட்டன. இதன்படி பொங்கலுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் இருக்கை கள் அனைத்தும் நிரம்பி விட்டது.

    அதேபோல் தீபாவளி, பொங்கல் விடுமுறை முடிந்து மறுநாள் நெல்லை யில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான டிக்கெட்டு களும் விற்று தீர்ந்தன.

    இந்த ரெயில் இன்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பிட்லைனில் நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

    புதிய நுழைவுவாயில்

    நாளை முதல் இரு மார்க்கங்களிலும் இயக்கப் படும் நிலையில், காலை 6 மணிக்குள் வந்தே பாரத் எக்ஸ்பிரசில் ஏற வரும் போது புதிய நுழைவு வாயில் கட்டிடம் அருகே வருமாறு ரெயில்வே அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    புதிய நுழைவு வாயில் பகுதியில் வந்தே பாரத் எக்ஸ்பிரசின் கடைசி பெட்டி நிற்கும் என்பதால், கடைசி நேரத்தில் வரு வோரும், கடைசி பெட்டியில் ஏற வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் புதிய கட்டிட நுழைவு வாயில் பகுதிக்கு வந்து ஏறிச் செல்ல ரெயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    நாளை, முதல் நாள் பயணம் என்பதால் ரெயில்வே போலீசார் அங்கு கூடுதலாக நிறுத்தப் பட்டு பயணிகளுக்கான சந்தேகங்களை தீர்க்கவும், அவர்களை பாதுகாப்பாக ஏற்றி அனுப்பி வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    • சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம்.
    • அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

    தமிழகத்தின் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுதவிர கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதே போன்று சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்கிறது.

    வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி சென்னை, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக நகர் முழுக்க குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காலை முதலே வெப்பம் வாட்டிய நிலையில், திடீர் மழை நகரை குளிர்வித்துள்ளது.

    • மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • தற்போது மழை பெய்து வருவதால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 18-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆலந்தூர், கிண்டி, அசோக் நகர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் நகரில் குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. 

    • போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
    • புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது.

    சென்னை மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை முன்பை விட தற்போது பலமடங்கு அதிகரித்து விட்டது. சென்னை மெட்ரோ ரெயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

    நகரில் போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தான் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மெட்ரோ ரெயிலில் நாள் முழுவதும் ரூ. 100 எனும் கட்டணத்தில் பயணம் செய்வதற்கான சிறப்பு சலுகையை சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைக்கு "ஒரு நாள் சுற்றுலா அட்டை" என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றுலா அட்டையின் விலை ரூ. 150 ஆகும். இதில் ரூ. 50 பயண அட்டையில் வைப்பு தொகையாக திருப்பி ஒப்படைக்கப்பட்டு விடும். வார இறுதி நாட்களில் புதிய ஒருநாள் சுற்றுலா அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த சுற்றுலா அட்டையின் கால அவகாசம் ஒருநாள் மட்டும்தான். அந்த வகையில் பயனர்கள் ஒருநாள் முடிவில் சுற்றுலா அட்டையை ஒப்படைக்கும் போது ரூ. 50 வைப்புத்தொகை திருப்பி தரப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

    • வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
    • சென்னை நகரில் நாளையும் மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்த நிலையில், இன்று பிற்பகல் முழுக்க நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    அதன்படி தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. இதே போன்று வேளச்சேரி, தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முன்னதாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ X வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுதவிர நாளை காலை நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டமாகவும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பாதக தெரிவித்துள்ளது. மாலை அல்லது இரவு வேலையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் என்று மேலும் தெரிவித்தது.

    ×