search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China Earthquake"

    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது.
    • சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

    சீனா:

    சீனாவின் ஜின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் நேற்றிரவு 11.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில் பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சீனாவை தொடர்ந்து இந்திய தலைநகர் டெல்லியிலும் நள்ளிரவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 11.45 முதல் 12 மணிக்குள் மக்கள் கடும் அதிர்வை உணர்ந்துள்ளனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக டெல்லியில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்; பல வீடுகள் இடிந்து விழுந்தன
    • ட்சாய், ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் பதிவிட்டுள்ளார்

    நேற்று மதியம், சீனாவின் வடமேற்கு எல்லையில் கிங்காய்-திபெத் பீடபூமி (Qinghai-Tibet plateau) பிராந்தியத்தில் கான்சு-கிங்காய் (Gansu-Qinghai) எல்லைக்கருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் தற்போது வரை 118க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல வீடுகள் இடிந்து விழுந்தன.

    பலர் உயிரை காத்து கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

    சீன அரசு, மீட்பு பணிகளை விரைவாக துவங்கியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கவும், பாதிக்கப்பட்டோருக்கு புகலிடம் மற்றும் உடனடி நிவாரணம் கிடைக்க ஒருங்கிணைந்த முயற்சிக்கு உத்தரவிட்டார்.

    இந்நிலையில், வடகிழக்கு பசிபிக் கடலில் உள்ள தீவு நாடான தைவான் நாட்டின் முதல் பெண் அதிபர், ட்சாய் இங்-வென் (Tsai Ing-Wen), சீனாவில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். அத்துடன் சீனாவிற்கு தேவையான உதவிகளை வழங்க தைவான் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

    தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் ட்சாய் ஆங்கிலத்திலும், எளிமையான சீன மொழியிலும் இரங்கலை பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தனது பதிவில், "நிலநடுக்கத்தில் தங்களின் உயிருக்கு உயிரானவர்களை இழந்து வாடும் சீனர்களுக்கு எனது இதயபூர்வமான இரங்கலை தெரிவிக்கிறேன். உதவிகள் தேவைப்படும் நிலையில் உள்ள அனைவருக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். விரைவில் நிலைமை சீரடையும் என நாங்கள் நம்புகிறோம். கடினமான இயற்கை பேரிடர் மீட்பு பணியில் சீனாவிற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தைவான் தயாராக உள்ளது" என தெரிவித்தார்.

    சுயாட்சி பெற்ற நாடாக தன்னை தைவான் அறிவித்தாலும், சீனா அந்நாட்டின் மீது முழு உரிமை கொண்டாடி வருகிறது.

    சீனாவிற்கும் தைவானுக்கும் இடையே இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வரும் நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்ட தைவானின் வான்வெளியிலும், நீர்பரப்பிலும், தனது ராணுவ ஆதிக்கத்தை அதிகரித்து வந்தது.

    ஆனால், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு, தைவான் அதிபர் உதவிக்கரம் நீட்டுவதை அரசியல் விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

    2008ல் சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் (Sichuan province) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது சுமார் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அப்போதும் தைவான், சீனாவிற்கு நேசக்கரம் நீட்டி தன் நாட்டிலிருந்து நிபுணர் குழுவை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×