search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "choice"

    • தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் என மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று 6-ந்தேதி தொடங்கி வருகிற 20 ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கடலுார் கல்வி மாவட்டத்தில் 236 பள்ளிகள் மூலம் 10309 மாணவர்கள், 9570 மாணவிகள் மொத்தம் 19779 மாணவர்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 209 பள்ளிகள் மூலம் 7965 மாணவர்கள், 6950 மாணவிகள் மொத்தம் 14915 மாணவர்களும் என மொத்தம் 445 பள்ளிகள் மூலம் 18274 மாணவர்கள், 16520 மாணவிகள் மொத்தம் 34794 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.   இது தவிர தனித்தேர்வர்களாக கடலுார் கல்வி மாவட்டத்தில் 423 மாணவர்கள், 210 மாணவிகளும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 445 மாணவர்கள், 183 மாணவிகள் மொத்தம் 628 மாணவர்களும் என மொத்தம் 868 மாணவர்கள், 393 மாணவிகள் மொத்தம் 1261 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக கடலுாரில் 80 மையங்களும், விருத்தாச்சலத்தில் 69 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 7 தேர்வு மையத்தில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதை யொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுகள் சரியாக நடைபெறுகிறதா? அனைத்து மாணவர்களுக்கும் கேள்வித்தாள் வழங்கப்பட்டுள்ளதா? அவர்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா? திடீர் மின்தடை ஏற்பட்டால் மாற்று நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது முதன்மை மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருட்டிணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 241 அரசுப் பளளியில் 8652 மாணவர்களும், 9104 மாணவிகளும், அரசு உதவி பெறும் 31 பள்ளிகளை சேர்ந்த 1607 மாணவர்களும் 1449 மாணவிகளும், 89 தனியார் பள்ளிகளை சேர்ந்த 2747 மாணவர்களும், 2068 மாணவிகளும் என ஆக மொத்தம் 25627 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 121 தேர்வு மையங்களும், தனித் தேர்வர்களுக்காக 4 மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 125 தேர்வு மையங்களில் 10-ம் வகுப்பு தேர்வு இன்று தொடங்கி நடந்து வருகிறது. மேலும், அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், போக்குவரத்து வசதிகள், முதலுதவி சிகிச்சை போன்றவைகள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
    • நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவைகளை தேர்வு செய்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் -ஆலக்குடி சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் "விஞ்ஞான் பெஸ்ட் "என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி ரம்யா சத்தியநாதன் கல்விக்குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    ரம்யா சத்தியநாதன் கல்வி குழுமச் செயலர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தமிழ்நாடு அறிவியல் கழகத் துணைத் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்கள் காயத்ரி,

    சுந்தரநாயகி, ரமேஷ் பாபு ஆகியோர் கண்காட்சியின் நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவை களை தேர்வு செய்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    முன்னதாக ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் ஆ கியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

    • தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும்.
    • தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 பணியிடங்களுக்கு (34 ஆண் மற்றும் 1 பெண்) தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட வர்களுக்கு மட்டும் ஆட்கள் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா அறிவுறுத்தலின்பேரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெ ற்றது.

    இதற்கு ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, ஊர்க்காவல் படை துணை மண்டலத் தளபதி டாக்டர் மங்களேஸ்வரி, ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கி ஆட்கள் தேர்வு நடத்தினர்.

    இத்தேர்வில் தஞ்சாவூர், கும்பகோணம். பட்டுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 324 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 325 பேர் கலந்து கொண்டனர்.

    அவர்களின் சான்றி தழ்கள் சரிபார்க்கப்பட்டன.

    இதையடுத்து உயரம், மா ர்பளவு சரிபார்க்கப்பட்டது.

    தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்வுகள் அனை த்தும் முடிந்த பின்னர் இதிலிருந்து 35 பேர் ஊர் காவல் படைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தேர்வு செய்யப்படும் ஊர் காவல் படையினர் போலீசாருடன் இணைந்து பணியாற்றுவர்.

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருப்பதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். தமிழக கல்வித்திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து, மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார்படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும். ‘நீட்’ தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் தேர்ச்சி சதவீதம் மிக குறைவு.

    அது மட்டுமல்ல முதல் 50 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த ஒரு மாணவி மட்டுமே இடம் பெற முடிந்தது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. ‘நீட்’ தேர்வு முறையில் நடைபெற்ற குளறுபடிகளே இதற்கு காரணம்.

    தமிழக மாணவர்கள் குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரையுள்ள ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ‘நீட்’ தேர்வு முறை தடையாக இருந்ததாகவே கருதுகிறேன். மேலும் தமிழக கல்வித் திட்டம், பயிற்சி முறை போன்றவற்றில் அதிக முக்கியத்துவம் கொடுத்து அதன் அடிப்படையில் மாணவர்களை ‘நீட்’ தேர்வு முறைக்கு முழுமையாக தயார் படுத்தவேண்டிய நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×