என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Christmas cake"
- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு.
- கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கேக் தான் பிரதான இனிப்பு. ஒரு சுவையான மற்றும் எளிதான செய்ய கூடிய கிறிஸ்துமஸ் கேக். சிறுவர்களுக்கும் மற்றும் பெரியோர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு கேக் இது. கேக் வகைகளில் லவங்கப்பட்டை கேக் வித்தியாசமானது.
தேவைப்படும் பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
லவங்கப்பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 கப்
வெண்ணெய் - 1 கப்
வெனிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
முட்டை - 3
பால் - 5 கப்
உப்பு - கால் டீஸ்பூன்
சிரப் தயாரிக்க:
லவங்கப்பட்டை தூள் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் 6 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - ஒரு கப்
வெனிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
ஓவனை 350 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் ஃப்ரிஹீட் செய்ய வேண்டும். அகலமான கிண்ணத்தில் லவங்கப்பட்டை தூள், மைதா மாவு, பேக்கிங் பவுடர், உப்பு இவற்றை கொட்டி சலித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த கலவையில் பாலை ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் அடித்து கலக்க வேண்டும். மற்றொரு பெரிய கிண்ணத்தில் சர்க்கரை, வெண்ணெய், வெனிலா எசன்ஸ் ஆகியவற்றை போட்டு மென்மையான கிரீம் போல அடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி மீண்டும் நன்றாக அடித்துக்கொள்ளவு வேண்டும். இப்போது இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து அடித்து கலக்கவும். பின்னர் அதை டிரேயில் ஊற்றி 40 நிமிடங்கள் வேகவைத்து எடுக்க வேண்டும். வெந் ததும் ஓவனில் இருந்து வெளியே எடுத்து ஆறவைக்க வேண்டும்.
அடிகனமான சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் லவங்கப்பட்டை தூள், வெண்ணெய், சர்க்கரை, வெனிலா எசன்ஸ், தண்ணீர் ஆகியவற்றை போட்டு மிதமான தீயில் சூடுபடுத்தவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து கலவை கெட்டியாகத் தொடங்கும்போது அடுப்பில் இருந்து இறக்கி இந்த சிரப்பை கேக்கின் மீது ஊற்ற வேண்டும். இப்போது சுவையான லவங்கப்பட்டை கேக் தயார்.
- கேக் மீது ஒரு தனி பிரியம் வரத்தொடங்கிவிடும்.
- குக்கீஸ்களை தயாரிக்காமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது.
டிசம்பர் மாதம் என்றாலே கிறிஸ்துமஸ் நேரம் தான். அப்போதில் இருந்தே கேக் மீது ஒரு தனி பிரியம் வரத்தொடங்கிவிடும். சுவை மிகுந்த கேக் மற்றும் குக்கீஸ்களை தயாரிக்காமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது. கேக் என்று வரும் போது அதில் எத்தனை வெரைட்டிகள் இருந்தாலும், ஃபுரூட் கேக் தான் எப்போதுமே சிறந்தது. இப்போது ஃபுரூட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
(குறிப்பு) இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஃபுரூட் கேக்கிற்கு பழங்களை ரம் மற்றும் பிராந்தியில் ஒரு மாதத்திற்கு முன்பு ஊற வைத்து செய்தால், அதன் சுவையே தனி. அதற்கு நேரம் இல்லாவிட்டால், குறைந்தது ஒரு வாரத்திற்காவது ஊற வைத்து செய்யுங்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சர்க்கரை - 1 கப்
மைதா - 2 1/2 கப்
இன்ஸ்டன்ட் காபி தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு தூள் - 1 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பில்லாத வெண்ணெய் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 5
வென்னிலா எசன்ஸ் - 2 டீஸ்பூன்
கேரமல் - 1 கப்
ரம் மற்றும் பிராந்தியில் ஊற வைத்த பழங்கள் - 3 கப்
ரம் - 5 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு, அடுப்பில் வைத்து சர்க்கரை கரைய வைக்க வேண்டும். குறிப்பாக இந்நிலையில் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். சர்க்கரையானது நன்கு கரைந்து பொன்னிறமாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சர்க்கரை அடிப்பிடிக்காமல் பார்த்து கவனமாக செய்ய வேண்டும்.
சர்க்கரையானது கரைந்து பொன்னிறமான பின்னர், அதனை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பின் கரண்டி கொண்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஒரு நிமிடம் கிளறி இறக்கி கலவையை குளிர வைக்கவேண்டும்.
முதலில் ஓவனை 160 டிகிரி செல்சியஸில் சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் 2, 8×2 இன்ச் பேனில் சிறிது வெண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பவுலில் மைதா, காபி பவுடர், பேக்கிங் பவுடர், ஏலக்காய் பொடி, பட்டை தூள், கிராம்பு தூள், ஜாதிக்காய் பொடி மற்றும் உப்பு போட்டுக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பவுலில் வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்த, எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு 5 நிமிடம் மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் முட்டையை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு அடிக்க வேண்டும். பின் வென்னிலா எசன்ஸ் மற்றும் குளிர வைத்துள்ள கேரமல் சேர்த்து நன்கு கிளறிவிடவேண்டும்.
பிறகு அதில் மைதா கலவையை கட்டி சேராதவாறு கொஞ்சம் கொஞ்சமாக கலந்து சேர்த்து கிளறி விட வேண்டும். பின் ஊற வைத்துள்ள பழங்களை சேர்த்து கிளறி, பேக்கிங் செய்யக்கூடிய பேனில் ஊற்ற வேண்டும்.
இறுதியில் அதனை ஓவனில் வைத்து, 1 மணிநேரம் பேக் செய்ய வேண்டும். இவ்வளவு 1 நேரம் பேக் செய்த பின்னர், அதனை திறந்து ஒரு டூத்பிக் கொண்டு குத்தி பார்க்கும்போது, அதில் மாவு ஒட்டியிருந்தால், மீண்டும் பேக் செய்ய வேண்டும்.
பின்னர் அதனை ஓவனில் இருந்து வெளியே எடுத்து குளிர வைத்து, கேக் மோல்டில் இருந்து ஒரு தட்டிற்கு மாற்ற வேண்டும்.
அதன்பிறகு கேக்கின் ஆங்காங்கு லேசான ஓட்டைகளைப் போட்டு, கேக்கின் மேல் ரம்மை தெளித்துவிட்டு, காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து, 2-3 நாட்கள் கழித்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஃபுரூட் கேக் ரெடி.
- 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள "கால்டன் சமுத்திரா" நட்சத்திர ஹோட்டலில் 240கிலோ எடை கொண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கேக் தயாரிப்பதற்காக திராட்சை, ஜெரி, பப்பாளி, ஸ்டாபரி, பைனாப்பிள் உள்ளிட்ட பலவகை டிரை புரூட்ஸ் 120கிலோவும், விஸ்கி, பிராந்தி, உட்கா, ஜின், ரம், பக்காடி உள்ளிட்ட மதுபானங்கள் 60லிட்டரும் சேர்க்கப்பட்டது.
சின்னத்திரை பிரபலங்கள், பிரபல சமையல் கலைஞர்கள், சுற்றுலா விருந்தினர்கள், ஹோட்டல் பணியார்கள் என 50க்கும் மேற்பட்டோர் கேக் மிக்ஸிங் செய்தனர். பின் அவைகளை 3 பேரல்களில் மூடி வைக்கப்பட்டது. 40நாட்கள் கழித்து ஊரவைக்கப்பட்ட டிரை புரூட்ஸ், மதுபான கலவையை எடுத்து அதில் 240கிலோ கேக் செய்யப்பட உள்ளது.
- புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துேஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
- இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊறவைக்கப்பட்டன.
இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு தயாரிக்கபடும் கேக் சிறப்பாக வரும்போது அந்த ஆண்டும் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
- புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.
- 45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை அக்கார்டு ஒட்டல் சார்பில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்மஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
100 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.
45 நாட்கள் ஊறவைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்