search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleanliness work"

    • கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக்குகள் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
    • பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தல கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட கப்புகள், மணலில் புதைந்து கிடக்கும் பொருட்களை கண்டுபிடித்து எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.

    முன்னதாக காரைக்குடி 9 வது பட்டாலியன் மகேஷ் நீர்நிலைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
    • மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் துாய்மைபடுத்தப்பட்டன.

    ஊட்டி,

    காந்திஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நடந்தது.

    பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கோவில் வளாகங்கள், குளங்கள், மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், பள்ளி வளாகங்கள் துாய்மைபடுத்தப்பட்டன.

    அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த மக்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோட்ட பொறுப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.  

    • வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள, தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

    அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தனியார் நிறுவனம் தூய்மைப்பணிக்கு, அகற்றப்படும் குப்பை கழிவுகளின் டன் கணக்கீடு அடிப்படையில் உரிமம் பெற்றுள்ளது.மாநகராட்சி பகுதியில் முழுமையாக குப்பை கழிவுகள் சேகரித்து அவற்றை முறைப்படி அழிக்கும் வரையிலான முழுமையான பணியை அந்நிறுவனம் மேற்கொள்ளும். இதற்காக, தற்போது வார்டு பகுதிகளில் 1,200 புதிய குப்பை தொட்டி உட்பட பல பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இப்பணிக்கு இதற்கு முன்னர் மாநகராட்சி பயன்படுத்திய நிர்வாகத்துக்குச் சொந்தமான வாகனங்கள் வாடகை அடிப்படையில் பயன்படுத்தபடவுள்ளது. மேலும், வார்டு பகுதியில் தூய்மைப்பணிக்கு உரிய எண்ணிக்கையிலான ஆட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுத்த நிறுவனத்துக்கு 15 நாள் சோதனை அடிப்படையில் தூய்மை பணி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அவ்வகையில் கடந்த, 1-ந் தேதி முதல் நிறுவனம் நடத்திய சோதனை அடிப்படையிலான தூய்மைப் பணி நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்று முதல் முழு வீச்சில் தனியார் நிறுவனம் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தூய்மைப் பணியை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சியில் தூய்மைப் பணி முழுமையாக தனியார் நிறுவனம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இதற்கான பணியாளர்களை நிறுவனம் முழுமையாக நியமித்துள்ளது. இந்நிலையில் மாநகராட்சியில் தற்போதுள்ள 685 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

    • பாபநாசம் அரசு பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.
    • பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ெரயில் நிலைய வளாகத்தில் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கம் மற்றும் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை உள்ளிட்டோர் இணைந்து தூய்மை பணிகள் மேற்கொண்டனர்.

    தூய்மை பணியை ஒட்டி தேசிய மாணவர் படையினர் ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, தூய்மை செய்தனர்.

    மேலும் ெரயில் தண்டவாள பகுதிகளில் தேங்கியிருந்த குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியும், வளர்ந்திருந்த செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தியும் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சை சரக ெரயில்வே வணிக ஆய்வாளர் ராம்குமார், ெரயில்வே முதுநிலை பொறியாளர் (பணிகள்) பிரேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பணிகளை உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், பட்டதாரி ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் செய்திருந்தார்.

    • நெற்குப்பை பேரூராட்சி கூட்டத்தில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.
    • முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மன்ற செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார்.பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலகுறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரண மடைந்தார்.

    இதனால் துணைத்தலைவ ராக இருந்த பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்று கொண்டார். முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற் றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந் ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

    அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கனே சனுக்கு வார்டு கவுன்சிலர்களும் அலுவலர் பணியாளர்களும் பொன்னாடை போர்த்தி பணிநிறைவு வாழ்த்துக்கள் தெரிவித்த னர். கூட்டம் முடிவில் தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு நன்றி கூறினார்.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
    • பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் திட்டத்தின் கீழ் 75 நாட்கள்அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.

    விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று கொடுத்தல், மண் மாதிரி எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை, வாழைக்கன்று நேர்த்தி பண்ணை, குட்டை அமைத்தல், சூரிய ஒளி உலர்த்தி, உயிர் உரம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடத்தில் எடுத்து கூறும் வகையில் பச்சாம்பாளையம், கீழ்வாணி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளிடத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    மேலும் அந்தியூரில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    இதில் காவியா, கீர்த்தனா, கவுசல்யா, காவியாஸ்ரீ, மதிமிதா, கீர்த்தனா, மாளவிகா, கவுசல்யா, மரியா தெரஸ்மனோஜ், மேக்னா விஸ்வின், மோனிகா உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தார்கள்.

    நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு மயானத்தில் சாலை பணியாளர்கள் தூய்மைப் பணி மேற்கொண்டனர். வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னதுரை, கணவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாலை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சண்முகராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வத்தலகுண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் வத்தலகுண்டு உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வீரன், உதவி பொறியாளர்கள் தாமரை மாறன், யோகவேல், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கணேசன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் கார்மேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது.
    • வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ''எனது குப்பை எனது பொறுப்பு'' நகரங்களில் தூய்மைக் கான மக்கள்இயக்கத்தின் சார்பில் வீடுகள் தோறும் மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வழங்க கோரியும், பிளாஸ்டிக் பாலிதின் ஒழிப்பு, பாலிதீன் மஞ்சள்பை பயன் பாடு பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. 1-வது வார்டு சாணம்பட்டி முத்தாலம்மன் கோவில்முன்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சண்முகம் உறுதி மொழி வாசித்தார். துணைத் தலைவர் கார்த்திக் விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் பேசினார். மக்கும், மக்காத குப்பைகள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வீடுகள் தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், மஞ்சள்பை வழங்கப்பட்டது. மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்கும் பெண்களுக்கும், வீட்டு தோட்டம் அமைத்து அதில் மக்கும் குப்பையை உரமாக பயன் படுத்தும் பெண்களுக்கும் பரிசுகளும், வீடுகள் தோறும் மஞ்சள் பைகளை பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் வழங்கினார். பாண்டியராஜபுரம் சாலையில் ஒருங்கிணைந்த சிறப்பு துப்புரவு பணி முகாம் மூலம் செடி கொடிகள் அகற்றி வடிகால் சுத்தம் செய்யப் பட்டது. சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் தீலிபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

    • சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் நெல்கட்டும்செவல் ஊராட்சியில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமை தாங்கினார்

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் நெல்கட்டும்செவல் ஊராட்சியில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மை பணி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் செயலர் சக்திவேல் மற்றும் கவுன்சிலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
    • விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில்ராஜாஜி பூங்காவில் தூய்மை பணிக்கான சான்று வழங்கும் விழா நடைபெற்றது

    விழாவிற்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்ட நகராட்சி பணியாளர்கள் வர்த்தகர்கள் சேவை சங்கங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா பொறியாளர் முகமது இப்ராகிம் துணைத் தலைவர் மங்களநாயகிநகர மன்ற உறுப்பினர்கள் உமா, நடராஜன், மயில்வாகனம் ,அனிஸ்பாத்திமா.பிரியும் அறக்கட்டளை பிரபு வர்த்தக சங்க பொருளாளர் சீனிவாசன் ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில் தொழிலதிபர் ஆறுமுகம்மற்றும் நகராட்சி பணியாளர்கள் குருகுலம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    நிகழ்ச்சியில் வேதாரண்ய த்தை சேர்ந்த தேவி பாலுவின் மகள் எழிலரசி குளத்தில் விழுந்த இரு சிறுவர்களை காப்பாற்றியதற்காக தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்றுள்ளார். இவருக்கு நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் புகழேந்தி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

    நிகழ்ச்சி முடிவில் என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் பின்பு ராஜாஜி பூங்காவில் இருந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது விழிப்புணர்வு பேரணியில் போதை எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    • போடிகாமன்வாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
    • கிராம பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என கலெக்டர் விசாகனிடம் கோரி கோரிக்கை வைத்தனர்.

    செம்பட்டி:

    ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீவல்சரகு, போடிகாமன்வாடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை கலெக்டர் விசாகன் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதுகுறித்து, கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது,

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 306 கிராம ஊராட்சிகளிலும் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சுகாதார மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தும் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் கடந்த 20-ந்தேதி தொடங்கப்பட்டது. 2.10.2022 வரை நடைபெறும் பிரச்சாரத்தின் முதல் நிகழ்வாக, அனைத்து அரசு கட்டிடங்கள், பொது இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மிகச் சிறப்பாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற அலுவலகம், வட்டார வள மையம், கிராம நிர்வாக அலுவலகம், கிராமப்புற நூலகம், பொது விநியோக கடை உள்ளிட்ட 2,536 அரசு அலுவலக கட்டிடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

    306 கிராமம் ஊராட்சிகளில் உள்ள 3,084 குக்கிராமங்களில் 2530 இடங்கள் அதிகமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ள ஹாட்ஸ்பாட் இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளை 2,588 தூய்மை காவலர்கள், நேரு யுவகேந்திரா தொண்டர்கள், மகளிர் குழுவினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அப்பகுதிகளை தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

    கழிவுநீர் வாய்க்கால்களை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றுள்ளது. மேலும் 228 வரத்து வாய்க்கால் பகுதிகள், 536 நீர் நிலைப் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

    நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ், துாய்மைப் பணிகள் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, தரைமட்ட நீர்தேக்க தொட்டி, இதர நீர் ஆதாரங்கள் சுத்தம் செய்து குளோரினேசன் செய்யும் பணிகள் அனைத்து கழிவுநீர் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால் நிறைவுறும் பகுதி துாய்மைப்படுத்தும் பணிகள், இதர அரசு அலுவலக கட்டிடங்கள் தூய்மைப் படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

    1.10.2022 வரை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என கலெக்டர் விசாகன் தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தினேஷ்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) ரெங்கராஜன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி முருகேசன், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, ஏழுமலையான், கிராம ஊராட்சித் தலைவர்கள் போடிகாமன்வாடி நாகலட்சுமி சசிக்குமார், சீவல்சரகு ராணி ராஜேந்திரன், ஊராட்சி செயலர்கள் திருப்பதி, சேசுராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    போடிகாமன்வாடியில் கிராம பெண்கள் தங்களுக்கு 100 நாள் வேலை வேண்டும், முதியோர் உதவித்தொகை வேண்டும் என கலெக்டர் விசாகனிடம் கோரி கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    ×