என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College students clash"
- மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு தகராறு.
- 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை.
கோவை:
தேனி மாவட்டம், பங்களா மேடு, பழைய டி.வி.எஸ். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ராகுல் (வயது 18). இவர் நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கோவை சவுரி பாளையம் ரோட்டில் அண்ணா நகர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வருகிறார்.
இந்த நிலையில் ராகுலுக்கும், அதே கல்லூரியில் பி.பி.ஏ.முதலாம் ஆண்டு படிக்கும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி என்பவருக்கும் சீனியர்-ஜூனியர் பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கல்லூரியில் கடந்த 19-ந் தேதி தனியார் டி.வி. நிகழ்ச்சி அங்கு உள்ள ஆடிட்டோரியத்தில் நடந்தது. அப்போது மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்படடது. சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.
நேற்று முன்தினம் ராகுல் அங்கு உள்ள டீக்கடை அருகில் நின்ற போது மீண்டும் ராகுல்காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவரிடம் தகராறு செய்தனர். அப்போது ராகுலுடன் தங்கி படிக்கும் மாணவர் கதிர் என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அப்போது ராகுல் காந்தியின் நண்பர்கள் அவரது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் ஜிபிஎஸ் கருவி வசதி இருந்ததால் அதன் மூலம் மோட்டார் சைக்கிள் ராம நாதபுரம் ஒலம்பஸ், பாரதி நகரில் இருப்பதை கண்டு பிடித்து நேற்று மாலை கதிர் மற்றும் நண்பர்கள் மீண்டும் எடுத்துக் கொண்டு திரும்பி வந்தனர்.
நேற்று மாலை ராகுல் காந்தி, தனது நண்பர்கள் சிலருடன் ராகுல் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த ராகுல் மற்றும் கதிர் அவரது நண்பர்களை அடித்து உதைத்து கத்தியால் குத்தினர்.
இதில் ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ் பாண்டியன், ரோஷன் ராஜா ஆகியோருக்கு தலை, கை, மார்பு, கழுத்து பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.
அதோடு நிற்காமல் ராகுல் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் அவர்கள் தங்கியிருந்த அறையையும் அடித்து நொறுக்கினர். அதன் பிறகு அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதை பார்த்த மற்ற மாண வர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். காயம் அடைந்த மாண வர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகி ச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ராகுல் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் தொடர்பாக முதலாம் ஆண்டு மாணவர் ராகுல்காந்தி, கெவின் சதீஷ் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
- ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை வண்டிகரு ப்பண்ணசாமி கோவில் பின்புறம் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் திண்டுக்கல், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
விடுதியில் தங்கி படித்தும், பல மாணவர்கள் தினசரி வந்து செல்லும் மாணவர்களாகவும் பயின்று வருகின்றனர். இவர்களில் சீனியர், ஜூனியர் என்ற வேறுபாடுகளை தாண்டி குழு அமைத்து தகராறில் சில மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கல்லூரி வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது முதற்கொண்டு கேண்டீனில் உணவு சாப்பிடுவதில் முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சி னைகளில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.
கல்லூரி நிர்வாகம் அவர்களை சமாதானம் செய்தும் எச்சரிக்கை விடுத்தும் கண்டித்து வந்து ள்ளனர். இருந்தபோதும் இவர்களது மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே வந்துள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட இந்த தகராறு கல்லூரிக்கு வெளியிலும் பயங்கரமாக வெடித்தது. அய்யலூர் - கடவூர் பிரிவில் நேற்று மாலை கல்லூரி மாணவர்கள் இரு குழுக்க ளாக பிரிந்து 30க்கும் மேற்பட்டோர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.
ஒருவரையொருவர் கற்களைக் கொண்டு தாக்கியும் கட்டிப்புரண்டு நடுரோட்டில் விழுந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆடுடோவில் வந்த ஒரு கும்பல் மாணவர்களை தாக்கினர். இதனை அருகில் இருந்த பொதுமக்கள் தடுக்க முயன்றும் முடியவில்லை.
இதனையடுத்து வடமதுரை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்ட சில மாணவர்களை விசா ரணைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் விளக்கம் கேட்கப்படும் என்று போலீசார் தெரி வித்தனர். இதனிடையே மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு மாவட்டங்க ளில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அது பஸ்நிலையம் உள்பட பொது இடங்களிலும் பயங்கரமாக வெடித்து ள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இது போன்ற மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அது போன்ற சம்பவம் நடைபெறாத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் உரிய விசா ரணை நடத்தி வருங்கா லங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்