என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "commercial complex"
- ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார்.
- 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சி 19-வது வார்டு பகுதியான மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் ஆய்வு செய்தார். பிறகு சர்ச் வீதியில் அடிப்படை வசதிகள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை ஆய்வு செய்த அவர் கூறுகையில், தாராபுரம் மார்க்கெட் பகுதியில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகம் தொடங்கப்பட்டு பணிகள் வெகு விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முழு முயற்சியுடன் செயல்பட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அதே போன்று தாராபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள், சாக்கடை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது 22-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.நாகராஜ், 19-வது வார்டு உறுப்பினர் புனிதா சக்திவேல், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பாலு, நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
- வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் கடந்த 2008-2009ம் ஆண்டு ரூ.15 லட்சம் மதிப்பில் 14 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. ஆனால் அதன் பின்னர் தற்போது வரை அந்த வணிக வளாகம் திறக்கப்படாமல் பயன்பாடு இன்றி உள்ளது.
இதனால் வணிக வளாகம் முழுவதும் புதர் மண்டி காணப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே சிதிலமடைந்துள்ளது. இதனால் அரசு பணம் வீணாகியுள்ளது. எனவே இந்த வணிக வளாகத்தை சீமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ராஜகோபாலன்பட்டி ஊராட்சிக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
எனவே அதிகாரிகள் இந்த வணிக வளாகத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- செட்டிகுளத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் வணிக வளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
- புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
மதுரை
மதுரை அருகே செட்டிக்குளத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரூர்பன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிகவளாக கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் சரவணன் முன்னிலைய வகித்தார். புதிய கட்டிடத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். ெதாடர்ந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை வழங்கினார். ரூ.14.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையையும் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராகவன், மண்டலம் சசிகுமார், ஊராட்சி தலைவர் பூங்கோதை மலைவீரன், மகளிர் திட்ட அலுவலர் காளிதாஸ் கூட்டுறவு இணைப்பதிவாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் திருமருகலில் சந்தைப்பேட்டை சாலையில் அரசு சார்பில் சுமார் ரூ.15 லட்சம் செலவில் 5 கடைகள் கொண்ட புதிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த கட்டிடம் பாழடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடத்தை சீர்செய்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து கடந்த ஆண்டு ‘தினத்தந்தி‘ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கட்டிடத்துக்கு உடனடியாக வர்ணம் பூசப்பட்டது. அப்போது இந்த 5 கடைகளில் 4 கடைகளை மட்டும் வாடகைக்கு விட திருமருகல் ஒன்றிய ஆணையர் ஏல அறிவிப்பும் செய்திருந்தார். ஆனால், ஏதோ காரணங்களால் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
மக்கள் வரி பணத்தில் கட்டப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக வணிக வளாகம் பூட்டியே கிடப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகள் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மை பாதிக்கப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பயன்பாடற்று பூட்டியே கிடக்கும் இந்த அரசு வணிக வளாகத்தை உடனே திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்