என் மலர்
நீங்கள் தேடியது "Communist"
- வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
- திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
வள்ளியூர்:
வள்ளியூர் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக சீரமைப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பஸ் நிலையம் மூடப்பட்டு அனைத்து பேருந்துகளும் பஸ்நிலையத்திற்கு வெளியே சாலையோரம் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாலையோரம் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடி பாதுகாப்பின்றி காத்திருக்கின்றனர்.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வள்ளியூர் நகர செயலாளர் கலைமுருகன், ராதாபுரம் வட்டாரச் செயலாளர் சேதுராமலிங்கம், மணியன் ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வள்ளியூர் பஸ் நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பயணிகள் காத்திருப்பதற்கு மழை, வெயிலில் பயணிகளை பாதிக்காதவாறு பெரிய அளவில் மேற்கூரையுடன் கூடிய காத்திருப்பு கூடாரம் அமைக்கவேண்டும். மேலும் பஸ்நிலைய கட்டுமானபணி குறித்த திட்டமதிப்பீடு, வேலையின் கால நிர்ணயம், ஒப்பந்தகாரர் விபரம் உள்ளிட்ட அறிவிப்பு கள் அடங்கிய பலகை அமைக்கவேண்டும். இது தவிர திருச்செந்தூர் செல்லும் பேருந்தை பழைய பேருந்துநிலையம் பகுதியில் நிறுத்தாமல் புதிய பேருந்து நிலையம் வரையில் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
எரவாஞ்சேரி ஊராட்சியில் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு வழங்கினர். நிகழ்விற்கு கட்சியின் கிளைச் செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். கட்சியின் ஒன்றிய செயலா ளர் ஸ்டாலின் பாபு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு,விவசாய சங்க நிர்வாகி ஜெகநாதன், சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் தமிழரசன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.
மனுவில் நாட்டார்ம ங்கலத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும் சேவை மைய கட்டிடத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கு தெருவில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,ஊராட்சிக்கு உட்பட்ட குளங்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுடுகாட்டிற்கு சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்த ப்பட்டுள்ளது.
- புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.
- 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. காஷ்மீர் முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த 150 உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். ஓட்டல் ஜெயராமில் கூட்டம் நடக்கிறது.
முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு மத்திய பா.ஜனதா அரசை வீழ்த்த இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைந்து போராட வியூகம் வகுக்கப்படும்.
கேரள அமைச்சர்கள், பீகார் எம்.எல்.ஏ.க்கள், தேசிய செயலர்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். 28-ந் தேதி மாநில கட்சி கட்டுப்பாட்டுக்குழு கூட்டமும் நடக்கிறது. புதுவையில் முதல் முறையாக இந்த கூட்டம் நடக்கிறது. 26-ந் தேதி நாடு முழுவதும் கவர்னர் பதவிகளை ரத்துசெய்யக்கோரியும், புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரியும் தேசியளவிலான கருத்தரங்கு நடத்தப்படும்.
இதில் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ராஜா, தமிழக மாநில செயலாளர் முத்தரசன், தேசிய செயலாளர் கானம் ராஜேந்திரன், தெலுங்கானா செயலாளர் நாராயணசாமி, மார்க்சிஸ்டு கட்சி ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், புதுவை எதிர்கட்சித்தலைவர் சிவா உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
புதுவையில் தேர்வு நேரத்தில் ஏழை மக்களின் மின் இணைப்பை துண்டித்து வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை வெள்ளை அறிக்கையாக அரசு வெளியிட வேண்டும். ரெஸ்டோ பாரை கண்டித்து போராட்டம் நடத்தியவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஜாமீன் வழங்கியுள்ளனர். இதை கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையில் மாநில அந்தஸ்து விவகாரத்தில் முரண்பாடு நிலவுகிறது. பா.ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறி மாநில அந்தஸ்துக்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி போராடினால் அவரோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன், பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஏ.ஐ.டி.யூ.சி. தினேஷ்பொன்னையா ஆகியோர் உடனிருந்தனர்.
- பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் அதிகாரிகளிடம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் அநாகரிகமான முறையில், பொது இடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இணை இயக்குனரை தொலைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது அதிகார அத்துமீறல் என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
பா.ஜனதா எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவை மாநிலத்தில் வசிப்பவர்கள் அனைவரும் குடும்ப அட்டையை கவுரவத்திற்காகவே வைத்துள்ளனர். ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்குவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், பா.ஜனதா தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் குடும்ப அட்டை ஒப்படைப்பது மக்களை ஏமாளியாக்கும் செயல்.
பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் ஏழை-எளிய மக்களும், நடுத்தர மக்களும் பொது விநியோக திட்டம் அத்தியாவசியமானதா கும். குடிமை பொருள் வழங்கல் துறையை தன் வசம் வைத்துள்ள பா.ஜனதா பொதுமக்கள் பார்வைக்கு இத்தகைய நாடகத்தை அரங்கேற்றுவது ஏமாற்று செயலாகும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சிவகங்கையில் இ.கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகர இ.கம்யூனிஸ்டு நிர்வாகிகள் கூட்டம் பொருளாளர் சேகர் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், நகரச் செயலாளர் மருது, துணைச் செயலாளர் சகாயம் பாண்டி, ஆட்டோ சங்க செயலாளர் பாண்டி, மாதர் சங்க அமைப்பாளர்கள் குஞ்சரம் காசிநாதன், சாரதா அமிர்தசாமி, சசிகுமார் ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வருகிற மே 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை நகர் முழுவதும் நடைபயணம், தெருமுனை பிரசாரம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுற்றி சமூக விரோத செயலுக்கு இடமளிக்கும் வகையில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் தலை, நரம்பு, இருதய மற்றும் கேன்சர் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த வித வசதியும் இல்லை. இந்த குறையை உடனடியாக அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். சிவகங்கையின் கிழக்குப்புறத்தில் உள்ள சுற்றுச்சாலையை உடனடியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை நகர் பகுதியில் உடனடியாக புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
சிவகங்கையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு எந்த அரசு அலுவலகங்களையும் மாற்றக்கூடாது. சிவகங்கையில் இருந்து சென்னைக்கு பகல் நேர ெரயில் விட வேண்டும். வட மாநிலங்களுக்குச் செல்லும் ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
- தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்படுவதால் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் வக்கீல் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.
மேலூர் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் மற்றும் பட்டா, சிட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கல் ஆகியவற்றிற்காக பொதுமக்களை அலைகழிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைச் செயலாளர் மெய்யர், தாலுகா குழு உறுப்பினர் பெரியவர், மாவட்ட குழு உறுப்பினர் திலகர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர்.
- சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர்.
திருவனந்தபுரம்:
கர்நாடகா தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வியடைந்து காங்கிரஸ் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அனைத்து மாநிலத்திலும் கொண்டு செல்ல காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் கட்சியை மேலும் பலப்படுத்த முடிவு செய்து அதற்கான வேலைகளில் காங்கிரஸ் இறங்கி உள்ளது.
இதில் முதல் கட்டமாக கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமான நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் முன்பு கூட்டணியில் இருந்த கேரளா காங்கிரஸ் (மாணி பிரிவு) கட்சியை மீண்டும் தங்கள் அணிக்கு இழுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மாணி பிரிவினர் தற்போது கம்யூனிஸ்டு கூட்டணியில் உள்ளனர். அவர்களுக்கு மத்திய கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவு உள்ளது. இதனாலேயே அவர்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் பாரதிய ஜனதாவினர், கிறிஸ்தவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் பிஷப்புகளை சந்தித்து பேசினர். இதனை கருத்தில் கொண்டும் தான் காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.
நங்கவள்ளி:
சேலதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி தாக்கப்பட்டதை கண்டித்து மேச்சேரி பேருந்து நிலையத்தில் கம்யூனிஸ்டு கட்சி, வாலிபர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு பேரூராட்சி கவுன்சிலர் பழனி தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து, சி.ஐ.டி.யூ. சேலம் மாவட்ட நிர்வாகி திருப்பதி, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராலமானோர் பங்கேற்றனர்.
சேலத்தில் பெரியசாமியை தாக்கியவர்களை கண்டித் தும், அவர்களை கைது செய்ய கோரியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் பிரசாந்த் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நோக்கங்களை மாவட்ட குழு உறுப்பினர் ராமர், மூத்த நிர்வாகி கணேசன், நகர செயலாளர் மாரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தனகுமார், நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சங்கரி, முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நடவடிக்கையை கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் 80 நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை பதவி விலக வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
- மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.
- புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் புதுவை மாநிலக்குழு கூட்டம் கூட்டம் முதலியார்பேட்டை, கட்சி தலைமை அலுவ லகத்தில் நடந்தது.
மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சலீம் கட்சியின் தேசிய குழு முடிவுகள், மாநில அரசியல் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் நாரா கலைநாதன், அந்தோணி, ரவி, அமுதா, பொருளாளர் சுப்பையா உட்பட மாநில குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை அரசின் பத்திரப்பதிவுத்துறையை முழுமையாக சீரமைப்பு செய்ய வேண்டும். நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசு சார்பு நிறுவனங்களை புனரமைப்பு செய்து, ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதான் மந்திரி மித்ரா என்ற ஒருங்கிணைந்த ஜவுளி வளாக திட்டத்தில் புதுவையை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அடிப்படை வசதிகள் செய்யக்கோரி நடத்தினர்
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி, தொரப்பாடி, 49-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.
இதில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து சாலைகளையும், கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு அதே பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும். 445 ஏக்கரில் உள்ள ஏரியை தூர்வாரி சுற்றுக்கால்வாய்களை உயர்த்தி மதகுகளை உயர்படுத்தி ஏறி வடிகால் செல்லும் கால்வாய்களை சீர்படுத்த வேண்டும்.
பொதுக் கழிப்பிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.குடிநீர் வசதி மற்றும் வீதிகள் தோறும் பொதுமக்கள் பயன்படுத்த போதுமான குடிநீர் பொதுக் குழாய்களை அமைத்து தர வேண்டும்.
பொதுமக்களும் இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் சமுதாயக்கூடம், நூலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். பூங்காவை சீர்படுத்தி முதியவர்கள், மாணவர்கள், சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தொரப்பாடி ரெயில்வே கேட் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை சீரமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
- தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.