என் மலர்
நீங்கள் தேடியது "construction"
- ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நெல்லை:
நெல்லை, தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குலசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியங்களின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியதாரர்கள் வருகிற ஆண்டிற்கான உயிர்வாழ் சான்றினை www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கீழ்கண்ட விவரங்களுடன் பதிவேற்றம் செய்யுமாறும், உயிர்வாழ் சான்றினை தாக்கல் செய்வதற்கு யாரும் நேரில் அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஓய்வூதியதாரர்களின் பதிவு எண், ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் உயிர்வாழ் சான்றினை சமர்ப்பிக்க வேண்டும். அசல் ஆதார் அட்டையினை சரியாக உள்ளீடு செய்ய வேண்டும். (தவறான ஆதார் எண் உள்ளீடு செய்யப்பட்டிருந்தால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்). வாரியம் மற்றும் தொழிலின் தன்மை சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
ஏற்கனவே, ஓய்வூதியம் பெற்று வந்த அசல் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் வங்கி கணக்கு ஐ.எப்.எஸ்.சி. கோடு, எம்.ஐ.சி.ஆர்.கோடு ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரிய ஓய்வூதியதாரர்கள், அவர்களது சாதியை சரியாக குறிப்பிட வேண்டும்.
புதிய குடும்ப அட்டை எண் மற்றும் அசல் அட்டை ஆகியவற்றை சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆயுள் சான்றுக்கு ஆதாரமாக ஓய்வூதிய ஆணை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் கையொப்பம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஓய்வூதியதாரர் அவரது ஆதார் அட்டையினை கையில் பிடித்துக் கொண்டிருப்பது போல் நேரடி போட்டோ எடுக்கப்பட வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு நெல்லை, தென்காசியில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
- இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழைய பாளையத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர்.
இக்கோவிலை புதுப்பித்து, திருப்பணிகள் செய்து, ராஜகோபுரம் அமைத்து கும்பாபிசேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதை ஏற்று, தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இக்கோவிலில் 5 நிலை ராஜகோபுரம் அமைத்து, திருப்பணிகள் செய்திட ரூ.1.53 கோடி மதிப்பில் அனுமதி அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-அமைச்சர் ஸ்டாலின், திருப்பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர், கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ராஜகோபுரம் கட்டுமானப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி, எம்.எல்.ஏ அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் புதுவை அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கல்வீடு கட்டும் மானியம். 30 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை வழங்க ப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறை மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதி யம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1கோடியே 92 லட்சம் ஆகும்
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி சவுந்த ர்ராஜன், உதவி பொறி யாளர் சுதர்சன் தொகுதி என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராதாகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது
- புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் பஸ் நிலையம் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் முயற்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 4 கோடி 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகி யோர் குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டுமான பணி களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா, திருச்சி மண்டல செயற்பொறியாளர் கருப்பையா, உதவி இயக்குனர் வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் சிவகுமார், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், செயல் அலுவலர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சிப்பாடி பாலமுருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சாலை அமைக்க பூமிபூைஜ நடந்தது.
- ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. இதில் தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் ரூபி, துணைத் தலைவர் சுலைமான், ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு, தலைமை மருத்துவர் அசோக், வார்டு உறுப்பினர் நாகநாதன், பெரியாள் என்ற முனியசாமி, மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதி நிதியில் இருந்து ரூ.4 லட்சமும், தி.மு.க. தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார் கவுன்சில் நிதியில் இருந்து ரூ.10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த சாலைப் பணி நடைபெறவுள்ளது.
- மரகதவல்லி கோவிலில் கற்கோவில் கட்டும் பணி தொடங்கியது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நரிக்குடியை அடுத்துள்ள இருள்சிறை கிராமத்தில் மரகதவல்லி உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கற்கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது.
முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து வாத்தியங்கள் முழங்க புனித நீருடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதனை தொடர்ந்து பூமிபூஜை விழா நடந்தது. புனித நீரை கற்கோவில் கட்ட இருக்கும் இடத்தில் ஊற்றி வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
- புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
- ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மங்கலம் தொகுதிக்குட்பட்ட மேல்சாத்தமங்கலத்தில் குடுவை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
புதுவை வேளாண்துறை நிலத்தடி நீர் அதிகார அமைப்பு நிதி உதவியின் மூலம் ரூ.1 கோடியே 85 லட்சத்தில் 5 மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
படுகை அணை கட்டுமான பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நிலத்தடி நீர் அதிகார அமைப்பு உறுப்பினர் செயலர் மனோகர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் ஜெயராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல உறுவையாறு அன்பு நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இங்கு 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி யுடன் கூடிய குடிநீர் திட்டம் ரூ. 1 கோடியே 51 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதற்கான அடிக்கல்லை முதல்- அமைச்சர் ரங்கசாமி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- வளர்ச்சி திட்ட பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கு வேண்டும் என அறிவுறுத்தினார்.
- ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை பார்வையிட்டார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம், பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டம் மற்றும் கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கிராம ஊராட்சி செயலகம் கட்டும் பணி, ஆவின் பால் தயாரிக்கும் கட்டிடம் கட்டும் பணி, அரசு வீடுகள் கட்டும்பணி, ஊராட்சியில் 600 குடும்பங்க ளுக்கு தனிநபர் உறிஞ்சிகுழி அமைக்கப்பட்டு வரும் பணி,கழிவு நீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி, அங்குள்ள சாவடிக்குளம் சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணி உள்ளிட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து கலெக்டர் அதிகாரிகளிடம் கூறுகை யில், அனைத்து பணிகளையும் தரமாகவும் விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர் அருள்மொழி, பிடிஓ ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளர்கள்தாரா, பலராமன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் வனிதாமுரு கானந்தம் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- மேட்டூர் மீன்வளத் துறையின் உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்திரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
- ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் பிடிக் கப்படும் மீன்களை பாது காத்து வைப்பதற்காக, மேட்டூர் மீன்வளத் துறை யின் உதவி இயக்குனர் அலு வலக வளாகத்தில், ஐஸ் கட்டிகள் உற்பத்தி செய்யப் படும் செய்யப்படும் எந்தி ரங்கள் அடங்கிய கட்டிடம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஐஸ் கட்டி உற்பத்தி எந்திரம் பழுதடைந்து இருந்ததால் கடந்த பல வருடங்களாக ஐஸ் கட்டி உற்பத்தி என்பது நடைபெறாமலே இருந்தது. தற்போது இந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு உதவி இயக்குனருக்கு புதிதாக அலுவலகம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
இதையடுத்து பழைய ஐஸ் கட்டி உற்பத்தி செய்யப் படும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
- ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர்ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதிபாளையம் வி.ஏ.டி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார்ஜெ ய்சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- மாவட்டத்தில் உள்ள சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
உடுலை:
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆணடுக்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
காண்டூர் கால்வாய் அடர்வனப் பகுதி வழியாக வருவதால் மழைக்காலங்களில் பாறைகள் சரிந்தும் காரை உடைந்தும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட அரசு காண்டூர் கால்வாயில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது.
தற்போது பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீ ச்சில் நடைபெற்று வருகின்றன. நிர்ணிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக நடக்கின்றன.
இதனால் இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 87-வது வார்டில் ரூ.83 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.
- ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை மாநகராட்சி 87-வது வார்டுக்குட்பட்ட பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் தி.மு.க. கவுன்சிலர் காளிதாசிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக அவர் மாநகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். மேலும் மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் புதிய சாலை அமைக்க வலியுறுத்தினார்.
இந்த கோரிக்கையை ஏற்று மாநகராட்சி சார்பில் அரசு நிதியாக ரூ. 83 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது. அதன்படி இன்று நாகம்மா கோவில் தெரு, சமயபுரம் கோவில் தெரு, அண்ணாமலையார் கோவில் தெரு ஆகிய இடங்களில் புதிய தார் சாலை அமைக்கும் பணி யினை 87-வது வார்டு கவுன்சிலர் காளிதாஸ் தொடங்கி வைத்தார். கவுன்சிலரின் முயற்சி யால் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதை வார்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துக்குமார், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முருகன், மகளிர் தொண்டர் அணி மாவட்ட துணை அமைப் பாளர் சுபாஷ் ஸ்ரீ மற்றும் ராஜா, சண்முகநாதன், ராம்ராஜ், சங்கர், பஞ்ச வர்ணம். மேகலா. செல்வி, ராஜா. ஜெயராமன்,வசந்த், பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.