search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Convulsions"

    • மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. மாரிமுத்து அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான சாகுபடி பரப்பை விட அதிக அளவில் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால் யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ரூ.260 மதிப்புள்ள யூரியாவை வாங்க ரூ.700 மதிப்புள்ள நுண்ணுயிர்கள் மற்றும் இடுபொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதனால் விவசாயிகளிடையே சாகுபடியில் ஒரு சுணக்கமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது நமது நாட்டில் உர உற்பத்தி குறைவு காரணமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் போதிய அளவு உரம் கிடைப்பதில் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுத்து உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வில்லியனூர் அருகே வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    நெய்வேலி தில்லை நகரை சேர்ந்தவர் ராமையன். ஓய்வு பெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மனைவி குப்பம்மாள் (வயது 58). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.

    இதற்காக இவர் வில்லியனூர் அருகே பத்துக்கண்ணுவில் உள்ள தனது அக்காள் மகள் தேன்மொழி வீட்டில் தங்கி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனாலும் நோய் குணமாகவில்லை. அவ்வப் போது வலிப்பு நோயால் குப்பம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதனால் மன முடைந்த குப்பம்மாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று மாலை வீட்டின் குளியல் அறையில் குப்பம்மாள் ‌ஷவரில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×