search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counting work"

    • அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் தள்ளுவண்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகருடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளுவண்டி உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், செயல் அலுவலர் கருணாகரன், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வாளர் கர்ணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சீனிவாச பெருமாள் கோவில் 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது
    • இதில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சன்னதியில் உள்ள 8 உண்டியல்கள் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது.

    விருதுநகர் அறநிலையத்துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில், செயல் அலுவலர் கரு முத்துராஜா, ஆய்வாளர் முருகானந்தம், தக்கார் பிரதிநிதி ராஜாராம், நகை மதிப்பீட்டாளர் பிரபாகரன், அர்ச்சகர் ராஜ கோபால பட்டர் முன்னிலையில் உண்டியல் திறந்து பணம் எண்ணப்பட்டன.

    இதன் முடிவில் ரொக்கப்பணம் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்து 320-ம், 32 கிராம் தங்க நகைகளும், 27 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு ரூபாய் ேநாட்டுகளும் கிடைத்தன.

    ×