என் மலர்
நீங்கள் தேடியது "couple"
- ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
- இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாக்கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் கமலி (வயது 22). இவர் பி.எஸ்.சி படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்தார். இதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் மோகன்ராஜ் (27).
இவர் பரமத்திவேலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் காதல் ஜோடி ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு நேற்று ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இருதரப்பு பெற்றோரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால் கமலியை அவரது கணவர் மோகன்ராஜ் உடன் அனுப்பி வைத்தனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் தம்பதியின் குடிசை வீடு இடிந்து விழுந்தது.
- இன்று ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநேரி வி.கே. நகரைச சேர்ந்தவர்கள் வேலு -இசக்கியம்மாள் தம்பதியர். முதியவர்களான இவர்கள், மண் குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் இவர்களது குடிசை வீடு இடிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட அந்த தம்பதியினரை நேரில் சந்தித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர்களுக்கு உதவித்தொகை வழங்கியதோடு, இடிந்து விழுந்த வீட்டை தனது சொந்த செலவில் புதுப்பித்து தருவதாக உறுதியளித்தார்.
அதன்பேரில் தம்பதியினருக்கு சொந்தமான இடத்தில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வீட்டை புதுப்பிக்கும் பணியை ஆரம்பித்தார்.
தற்போது அந்த வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இன்று அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி.யின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிதாக கட்டப்பட்ட அந்த வீட்டின் சாவியை முதிய தம்பதியினரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இன்று அங்கு நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.வுடன் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர். கன மழையில் வீட்டை இழந்த முதிய தம்பதியினருக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. செய்துள்ள இந்த மனிதாபிமான உதவியை நாங்குநேரி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
தேனி:
தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் (வயது 25). இவரது மனைவி கவுசல்யா. (20). இவர்கள் தீபாவளி என்பவருக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை வைத்திருந்தனர். இதற்காக ரூ.15 ஆயிரம் அட்வான்சும் மாதம் ரூ.1500 வாடகையும் செலுத்தி வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையை காலி செய்வதாக அவர்கள் கூறி தங்களது அட்வான்ஸ் பணத்தை திருப்பி தருமாறு கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே தீபாவளி, அவரது மனைவி செல்வி மற்றும் முருகன், குமரேசன், விகாஸ் ஆகியோர் சேர்ந்து நவீன் மற்றும் அவரது மனைவியை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் போடி மல்லிகாபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்த கோபால் மகள்கள் ஜெயசூர்யா (21), ஸ்ருதி (15) ஆகியோர் சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த பங்கஜம் என்பவரது வீட்டு முன்பு விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது பங்கஜத்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் பங்கஜம், கணவர் ராஜா, மகன் மலைச்சாமி ஆகியோர் சேர்ந்து கோபால் மற்றும் அவரது மனைவியை தாக்கினர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு அய்ரக்கண்ணி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது74). இவர் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, சந்திரா, புனிதா, நாராயணசாமி, சந்திரசேகரன் ஆகிய 5 மகன், மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவியான சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். எங்கும் சென்றாலும் ஜோடியாகவே செல்வர்.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று காலை திடீரென அவர் இறந்தார். இந்நிலையில் கணவர் சுப்பிரமணியன் இறந்ததை அறிந்த ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்த அங்கேயே மயங்கி விழுந்தார். இதைகண்ட உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப் பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்து கணவன் மனைவி இருவரது உடல்களையும் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
கணவர்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் ஆலங்காடு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 30). பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். (வயது 20). இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது பதிவு திருமண விபரம் தெரிய வரவே பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணியில் திருமணம் செய்து கொண்டனர்.
தங்களுக்கு பெற்றோர்களால் ஆபத்து ஏற்படும் என்று நினைத்த அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் சேர்ந்து வாழ எவ்வித தடையும் செய்யக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி (21). இவர் பொதட்டூர்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட், இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவரும் அதே கல்லூரியில் உடன்படிக்கும் புண்ணியம் கிராமத்தை சேர்ந்த சின்ராஸ்(22). என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் திலகவதி வீட்டில் தெரிய வந்தது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த 7-ந்தேதி திலகவதியும், சின்ராசும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை பாரிமுனையில் உள்ள பதிவு துறை அலுவலக்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இருவரும் தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தினார், அப்போது இருவிட்டாரின் பெற்றோர்களை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகே ஒரு லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. கடந்த 14-ந்தேதி காலை 7 மணி அளவில் இந்த லாட்ஜிக்கு இளம்பெண் ஒருவருடன் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் தாங்கள் கன்னியாகுமரியை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகவும், சில நாட்கள் இங்கு தங்கி இருக்க போவதால் தங்களுக்கு லாட்ஜ்யில் ரூம் வேண்டும் என்று கேட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு லாட்ஜ்யில் ரூம் ஒதுக்கப்பட்டது. அந்த ஜோடியிடம் இருந்து முகவரி சான்றாக ஆதார் அட்டையின் நகலும் வாங்கப்பட்டது.
தினமும் காலையில் லாட்ஜ்யில் இருந்து புறப்படும் அந்த ஜோடி பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு இரவு மீண்டும் லாட்ஜிக்கு திரும்பி விடுவார்கள்.
இந்த நிலையில் நேற்றும் காலையில் அவர்கள் இருவரும் வழக்கம் போல வெளியில் சென்று விட்டு இரவு தாங்கள் தங்கி இருந்த லாட்ஜிக்கு திரும்பினார்கள். இன்று காலையில் லாட்ஜ் ஊழியர்கள் அங்கு தங்கி இருப்பவர்களின் அறைகளுக்குச் சென்று அவர்களுக்கு உணவு தேவையா? என்பது பற்றி கேட்டனர்.
இந்த ஜோடி தங்கி இருந்த அறை கதவை தட்டிய போது திறக்கப்படவில்லை. அதே சமயம் அறை உள்ளே இருந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டது. இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த லாட்ஜிக்கு விரைந்துச் சென்றனர். அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளேச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு அந்த வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார்.
உடனடியாக அந்த வாலிபரை காப்பாற்றி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த பெண்ணின் பிணம் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் இருவரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரியவந்தது.
அந்த வாலிபர் பெயர் சதீஷ் (வயது27), ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள கருமாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அவருடன் தங்கி இருந்த பெண்ணின் பெயர் கார்த்திகா(24). கோபி செட்டிப்பாளையம் அருகே உள்ள கடத்தூர். இவருக்கு திருமணமாகி விட்டது. சதீஷ் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கார்த்திகா ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்லும் போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இவர்களது கள்ளக்காதல் உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கன்னியாகுமரிக்கு வந்தனர்.
இங்கு பல இடங்களையும் சுற்றிப்பார்த்த அவர்கள் லாட்ஜியில் வைத்து விஷ மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். இதில் கார்த்திகா இறந்து விட்டார்.
சதீஷ்சுக்கு வாந்தி ஏற்பட்டதால் அவர் சாப்பிட்ட விஷ மாத்திரையில் இருந்து தப்பி விட்டார். ஆனாலும் கள்ளக்காதலி இறந்த பிறகு தான் உயிர் வாழக்கூடாது என்பதற்காக கத்தியால் கையை அறுத்து உள்ளார். அதற்குள் போலீஸ் வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். இது பற்றி சதீஷ் மற்றும் கார்திகாவின் பெற்றோர், உறவினர்களுக்கு கன்னியாகுமரி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எடப்பாடி:
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட, கூடக்கல் பகுதியை சேர்ந்த அம்மாசி கூலித்தொழிலாளி இவரது மகள் இந்துமதி (20), டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். எடப்பாடியை அடுத்த தேவூர் கோரைக்காடு பகுதியை சேர்ந்த சித்தன் மகன் மோகன்ராஜ்(22). இவர் தேவூர் பேரூராட்சியில் பிலம்பராக பணிசெய்து வருகிறார்.
இந்நிலையில் கூடக்கல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த மோகன்ராஜிற்கு, இந்துமதியுடன் நட்பு ஏற்பட்டு அவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்துமதியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் அவரை கண்டித்துள்ளனர்.
இதனை அடுத்து தனது நிலை குறித்து இந்துமதி தனது காதலன் மோகன்ராஜிடம் கூறவே, அவரை மோகன்ராஜ் பவானி பகுதியில் உள்ள ஓர் கோவிலுக்கு அழைத்து சென்று தாலிக்கட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அவர்களின் பெற்றோர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், பாதுகாப்பு கேட்டு பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து இருவரின் பெற்றோர்களை அழைந்து சமாதானம் செய்த பூலாம்பட்டி போலீசார் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை யாரும் துன்புறுத்தக்கூடாது என கூறி அனுப்பி வைத்தனர். இளம்ஜோடிகள் இருவரும் காவல்துறை அலுவலர்களிடம் ஆசி பெற்று சென்றனர்.
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடி தாலுகா, வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தவல்லி (வயது 20). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கடந்த 4 வருடமாக பணிபுரிந்து வந்தார்.
அதே தொழிற்சாலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தலயநல்லூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (22) என்பவரும் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
எனிலும் காதலில் உறுதியாக இருந்த ஜோடிகள் கடந்த 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி சிவகிரியில் உள்ள வேலாயுதம் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இன்று ஆனந்தவல்லி தனது காதல் கணவர் அஜித்குமாருடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
வடமதுரை:
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவர் கவுதமி (வயது 22). பி.எஸ்.சி. பட்டதாரி. அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வடமதுரை அருகே ஆர்.கோம்பையைச் சேர்ந்தவர் மோகன் (22), காங்கேயம் பகுதியில் வேலைக்கு சென்றார்.
அப்போது கவுதமியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. காதல் ஜோடி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்துள்ளனர்.
இந்த விஷயம் இரு வீட்டு பெற்றோருக்கும் தெரிய வரவே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தங்களை பிரித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் இருந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறினர். பின்பு கரூர் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். ஆனால் இருவரும் காதல் ஜோடியை ஏற்றுக் கொள்ள மறுத்தனர்.
மோகன், தனது காதல் மனைவியை தானே காப்பாற்றிக் கொள்வேன் எனக் கூறி காதல் ஜோடி தனியாக சென்று விட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (65). இவர்களது மகன் முருகேசன். திருவாரூரில் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷ்ணுதோப்பில் உள்ள செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வாடகைக்கு வீடு தேவைப்படுவதாகவும், தான் நாட்டு வைத்தியர் என்றும் கூறினார்.
அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வம் தனக்கும் மனைவிக்கும் மூட்டு வலி இருப்பதாக கூறி அதற்கு மருந்து இருந்தால் கொடுக்கும் படி கேட்டார்.

அப்போது அந்த நபர் மயங்கி விழுந்த சகுந்தலா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இந்தநிலையில் வீடு திரும்பிய செல்வத்தின் மகன் முருகேசன் தனது பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது உடல்கள் வீங்கி போய் இருந்தன. இதனால் பயந்து போன அவர் தனது பெற்றோர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகுந்தலா பரிதாபமாக இறந்தார். செல்வம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சகுந்தலாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த நாட்டு மருந்தை சாப்பிட்டு சகுந்தலா பலியாகி விட்டதால் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Womankilled
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பபிரான் பட்டயட் (வயது 28). பனியன் கம்பெனி தொழிலாளி. இவர் திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு பபிரான் பட்டயட்டின் 1½ வயது மகன் உதய நாராயன் வீட்டு முன்பு உள்ள காம்பவுண்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். திடீரென குழந்தை மாயமானது. இதனால் அதிர்ச்சிய டைந்த பெற்றோர் குழந்தையை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் எந்த பலனும் இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பபிரான் பட்டயட் திருப்பூர் மத்திய போலீசில் புகார் அளித்தார். உடனடியாக துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் தங்கவேல், இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் நீண்ட நேரமாக இங்கு சுற்றி திரிந்ததாகவும் அவர்கள் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் போல இருப்பதாகவும் தெரிவித்தார்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சன்கர் சன் பேத்தி, இவரது மனைவி சுசித்ரா ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூரில் வேலை பார்த்ததும், தற்போது கோவை செட்டிப் பாளையத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இரவோடு இரவாக போலீசார் கோவைக்கு விரைந்து வந்து சன்கர்சன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அங்கு இருந்த 1½ வயது குழந்தை உதய நாரானனை மீட்டனர்.
பின்னர் கணவன்- மனைவி இருவரையும் திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாததால் வளர்ப்பதற்காக குழந்தையை கடத்தியதாக தெரிவித்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.