என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "COURT ORDERS"
- அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை.
- ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு.
சென்னை:
இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த சட்டங்களை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அவர் தனது மனுவில், நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களிலும் மட்டும் தான் இந்தி அலுவல் மொழியாக உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 43.63 சதவீதம் மக்கள் மட்டுமே இந்தியை தாய் மாொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். வேறு மொழிகளில் சட்டம் இயற்ற பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளுக்கு எதிராக இந்தியில் பெயரிடப்பட்டுள்ள மூன்று சட்டங்களையும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவித்து, ஆங்கிலத்தில் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், மூன்று சட்டங்களும் ஆங்கிலத்தில் தான் நிறைவேற்றப்பட்டன எனவும், சட்டங்களின் பெயர்கள் கூட ஆங்கில எழுத்துக்களில் தான் இடம் பெற்றுள்ளன என்றும் விளக்கினார்.
மேலும், இந்த சட்டங்கள், அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறவில்லை எனவும், எவரின் அடிப்படை உரிமையும் இதனால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பாராளுமன்றத்தின் விருப்பம் எனவும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் விளக்கமளித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு ஜூலை 23-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
- வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் ஜூன் 6ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பியும், மத்திய சென்னை திமுக வேட்பாளருமான தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொகுதி மேம்பாட்டு நிதியில் தயாநிதி மாறன் எதுவும் பயன்படுத்தவில்லை என வினோஜ் பி.செல்வம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கடந்த மாதம் ஏப்ரல் 13ம் தேதி, வினோஜ் பி.செல்வம் சமூக வலைளத்தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வினோஜ் பி.செல்வம் கருத்து பதவிட்டதாக தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வினோஜ் வரும் ஜூன் 6ம் தேதி ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
- மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
கோவை,
கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் யூனியன் சின்னத் தடாகம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019 அன்று நடைபெற்றது.
இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும். அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திரவடிவு உள்பட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2.1.2020- அன்று எண்ணப்பட்டது.
அன்று இரவு 10 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. முதலில் தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சுதா 2,553 வாக்குகளும், அ.தி.மு.க. ஆதரவு பெற்ற வேட்பாளர் சவுந்திரவடிவு 2,549 வாக்குகளும் பெற்றதாகவும், தெரி விக்கப்பட்டது.இதையடுத்து சுதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும் அறி விக்கப்பட்டது.
ஆனால் வாக்குகள் மறுபடியும் எண்ணப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் சவுந்திர வடிவு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுதா, தேர்தல் அதிகாரியிடம் ஆட்சேபனை மனு அளித்தார். மேலும் அவர் சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர்தேர்தலில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிடக்கோரி கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், சின்னத்தடாகம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று குருடம்பாளையம் அருகே அருணா நகர் சமுதாய நலக்கூடத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதற்காக கலெக்டர் அலுவலக கருவூலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 ஓட்டுப்பெட்டிகளும் பலத்த பாதுகாப்புடன் குருடம்பாளையம் எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 12 மணிக்கு வாக்குப்பெட்டிகளை திறந்து அதிகாரிகள் வாக்குகளை எண்ணினர்.
வாக்கு எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் கோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என்றும், அதன்பின்னரே வெற்றி பெற்றவர் விவரம் தெரிவிக்கப்படும் எனவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வாகன உரிமையாளருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.30 லட்சம் வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது
- ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
அரியலூர்:
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டில் வசித்து வருபவர் சம்பத் மகன் முருகன் (வயது42). கடந்த 2014 ஆம் ஆண்டு வாங்கிய புதிய காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 15,860 செலுத்தி காப்பீடு செய்திருந்தார்.இந்நிலையில், கடந்த 2015 ஜூன் முதல் வாரத்தில் வீட்டின் முன்பாக சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் காணாமல் போய்விட்டது. ஒரு வாரம் தனது வாகனத்தை தேடியும் கிடைக்காததால், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து தமது காப்பீட்டு நிறுவனத்துக்கும் தகவல் அளித்துள்ளார் முருகன். ஆனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க 8 நாள்கள் கால தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனம் புகார் தாரருக்கு இழப்பீட்டு தொகையை தர மறுத்துவிட்டது.இதையடுத்து முருகன், தமக்கு காப்பீட்டுத் தொகை ரூ.3.20 லட்சமும், அந்நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் கேட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு விசாரணைக்காக மாற்றப்பட்டது. இதனை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பில், வாகனம் காணாமல் போன பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்ய ஏற்பட்ட கால தாமதத்தை காரணம் காட்டி காப்பீட்டுத் தொகையை மறுக்க முடியாது. எனவே புகார்தாரர் தமது வாகனத்தை ரூ.4 லட்சத்துக்கு காப்பீடு செய்து 11 மாதங்கள் நிறைவடைந்து விட்டதால் சட்டப்படியான பிடித்தங்களாக 20 சதவீத தொகையை கழித்துக் கொண்டு ரூ 3.20 லட்சத்தை வட்டியுடன் காப்பீட்டு நிறுவனம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும். மேலும், காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை புகார்தாரருக்கு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கப்பட்ட எட்டு வாரங்களுக்குள் வாகனத்தை கண்டுபிடிக்க இயலவில்லை என்ற சான்றிதழை அரும்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் பெற்று காப்பீட்டு நிறுவனத்திடம் புகார்தாரர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.- சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது
பெரம்பலூர்:சேவைகுறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என சிமெண்ட் ஏஜென்சீசுக்கு பெரம்பலூர் நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர் நிர்மலா நகரை சேர்ந்தவர் குலாம் மொய்தீன் மகன் முகமது சபீக் (வயது 38). இவர் புதிதாக கட்டிடம் கட்டியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி கட்டிடத்திற்கு பூச்சு மற்றும் பட்டி பார்ப்பதற்காக பெரம்பலூர் பழைய ஆர்டிஓ அலுவலகம் எதிரில் உள்ள ஒரு ஏஜென்சியில் 35 மூட்டை ஒயிட் சிமெண்ட் வாங்கியுள்ளார். அந்த ஒயிட் சிமெண்டை பயன்படுத்தியபோது கட்டிட சுவற்றில் ஒட்டாத சாதாரண சுண்ணாம்பு போல் இருந்துள்ளது. அந்த ஒயிட் சிமெண்ட் தரக்குறைவாகவும், கலப்படம் நிறைந்ததாகவும் இருந்துள்ளது.இதையடுத்து முகமது சபீக் விக்னேஷ் ஏஜென்சீசுக்கு சென்று அதன உரிமையாளரிடம் ஓயிட் சிமெண்ட் தரமற்றதாகவும், கலப்படம் உள்ளதால் தான் சுவற்றில் ஒட்டவில்லையே என கேட்டதற்கு அவர் நான் சென்னை, சைதாபேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்ட் லிமிடெட் மேலாளரிடம் இருந்து தான் ஓயிட் சிமெண்ட் ஏஜென்சீஸ் எடுத்து விற்பனை செய்து வருகிறேன் எனவும், அங்கிருந்து வந்ததை தான் நான் உங்களுக்கு விற்பனை செய்தேன் என கூறியுள்ளார்.பின்னர் முகமது சபீக் வேறு கடையில் ஓய்ட் சிமெண்ட் வாங்கி கட்டித்திற்கு பயன்படுத்தியுள்ளார்.இதனால் மனஉளைச்சல் அடைந்த முகமது சபீக் சேவை குறைபாடு புரிந்தற்காக ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவு தொகையும் வழங்க கோரி கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம்தேதி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோர் அளித்த தீர்ப்பில், விக்னேஷ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சேவை குறைபாடு புரிந்தால் பாதிக்கப்பட்ட முகமது சபீக்கு ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும், பெரம்பலூர் ஏஜென்சீஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
- சேவை குறைபாடு காரணமாக செல்போன் நிறுவனம் ரூ.20 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- செல்போனை சரி செய்து தரவும் இல்லை.
அரியலூர்:
அரியலூர் மின் நகரில் வசித்து வருபவர் மோகன். இவர் அரியலூரில் உள்ள தனியார் செல்போன் விற்பனை நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20 ஆயிரம் செலுத்தி புதிய செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் அந்த செல்போன் வாங்கப்பட்ட ஒரு மாத காலத்துக்குள் 2 முறை பழுது ஏற்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் அதனை கொடுத்தபோது 2 முறையும் தற்காலிகமாக பழுதை நீக்கி கொடுத்துள்ளார்கள். மீண்டும் செல்போனின் பழுது ஏற்பட்டதால் புதிய செல்போனை வழங்குமாறு மோகன் கேட்டு உள்ளார். ஆனால் அதனை பெற்றுக்கொண்ட விற்பனையாளர் செல்போனை சரி செய்து தரவும் இல்லை. புதிய போன் வழங்கவும் இல்லை.
இதையடுத்து அரியலூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் குறைபாடுள்ள செல்போனை விற்பனை செய்த நிறுவனம் மோகனுக்கு புதிய செல்போன் வழங்க வேண்டும். மேலும் நிறுவனத்தின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக அவருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்