என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cows"
- கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும்.
- எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஒரு மளிகை கடையில் மாடுகள் தினமும் கடையை எப்போ திறப்போம்னு காத்திருந்து, கதவை திறந்ததுமே உள்ளே நுழைந்து அதற்கு தேவையானதை சாப்பிட்டு எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடுமாம்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் மாசிலாமணி கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டம் சிங்கபுணரியில் பஸ்ஸ்டாண்டிற்கு எதிரில் மளிகை கடை நடத்திவருகிறேன். மாடுகள் நாங்கள் தினமும் கடை திறப்பதற்கு முன்பே கடைக்கு வந்து காத்து நிற்கும். நாங்கள் கடையை திறந்ததும் முதல் ஆளாக கடைக்குள் நுழைந்து அதற்கு தேவையான பொருட்களை எடுத்து சாப்பிட்டுவிட்டு எந்த பொருட்சேதத்தையும் ஏற்படுத்தாமல் வெளியே சென்றுவிடும்.
தினமும் இரண்டு மூன்று தடவை கடைக்கு வரும். நாங்கள் மாடுகளை தொந்தரவு செய்வதில்லை, நாங்கள் அந்த மாடுகளை சிவனாக பாவித்து அதனை தடுப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது.
- மாட்டின் கொம்புகளை அப்பெண் கெட்டியாக பிடித்தார், இதனால் மாடு சிலநொடிகள் அமைதியாக இருந்தது.
டெல்லியில் குறுகலான பாதையில் சென்ற கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அக்டோபர் 30 அன்று டெல்லியில் உள்ள ஆயா நகரில் நடந்துள்ளது.
பெண் ஒருவர் டெல்லியின் குறுகலான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது. அச்சமயத்தில் துணிச்சலாக செயல்பட்ட அப்பெண் மாட்டின் கொம்புகளை கெட்டியாக பிடித்தார். இதனால் மாடு சில நொடிகள் தாக்க முடியாமல் அமைதியாக இருந்தது.
மாட்டின் கொம்புகளை பிடித்தபடியே அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாட்டை விரட்ட முயன்றனர். இதனையடுத்து மாடு அங்கிருந்து ஓடியது. மாடு தாக்கியதில் அப்பெண் பலத்த காயமடைந்தார்.
देखिए राह चलते ये हादसा किसी के भी साथ हो सकता है दिल्ली में एक गुस्सैले आवारा पशु ने महिला को उठाकर पटका और घसीटा, महिला और लोग चीखते चिल्लाते रहे लोगो ने बचाने की कोशिश भी लेकिन लोगो पर भी हमला कर दिया ?वीडियो दिल्ली के आया नागर का है pic.twitter.com/xTIsu7DnKj
— Lavely Bakshi (@lavelybakshi) November 6, 2024
தெருவில் சுற்றி வரும் மாடுகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தெருவில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்லியில் அதிகரித்துள்ள சட்டவிரோத பால்பண்ணைகள் தான் தெரு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். சட்டவிரோத பால்பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பால் கறந்த பிறகு தெருவில் விட்டு விடுகிறார்கள். தெருவில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது.
- இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ளது பிதாத்வாத் கிராமம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கோவர்தன் பூஜை நடத்துவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடவுள் கிருஷ்ணருக்காக நடத்தப்படும் இந்த பூஜையில் மக்கள் தரையில் படுத்து, தங்கள் மீது பசு மாடுகளை ஓடவிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது. அப்போது பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதன்படி இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டுமென அரசு ஊக்குவிக்கிறது.
மகாராஷ்டிரா மாநில அரசு நாட்டு பசுமாடுகளை ராஜமாதாவாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. வேத காலத்தில் இருந்தே ஆன்மிகம், அறிவியல் மற்றும் இராணுவ துறையில் பசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவகையாக பார்க்கப்படுகின்றன.இந்தியா முழுவதும் பல்வேறு வகையான மாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை அண்மைய காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.
ஆகவே நாட்டு மாடுகளை விவசாயிகள் வளர்க்க வேண்டுமென அரசு ஊக்குவிக்கிறது. மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம், நமது உணவில் அதிக ஊட்டச்சத்து பெற முடியும். சமூக - பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி கடுமையான பின்னடைவை சந்தித்தது. இந்தியா கூட்டணி அதிக இடங்களை வென்றது.
இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை மனதில் வைத்து தான் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்தியாவின் வடமாநிலங்களில் பசுக்கள் புனிதமானவை என்று மக்கள் நம்புகின்றனர். பசுவின் கோமியத்தை புனித நீராக பருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
- பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த மாடு அடுத்தடுத்து இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர். பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
கலப்பின மாடுகளுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறை கையாளப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பில் சினை பிடித்த பசுமாடு, 2 கன்றுகள் ஈன்றுவது அடிக்கடி நடக்கிறது. பசுவையும், கன்றுகளையும் நன்கு பராமரிக்க மரக்காணம் கால்நடைத் துறையின் ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் நேரில் பார்வையிடவும் விவசாயி கதிரவன் கோரிக்கை வைத்துள்ளார்.
- விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றம் மனுத்தாக்கல் செய்திருந்தார்
அந்த மனுவில், உரிய சான்றிதழ்கள் இல்லாமல், அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி, விலங்குகள் கொண்டு செல்லப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஜி.பி. தரப்பில் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தனி நபர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சந்தேகத்துக்கு இடமான வகையில் மாடுகள் கொண்டு செல்லப்படுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இந்திய நலவாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை.
ஆதலால் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக ஜூன் 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
அந்த நாளில் இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாவிட்டால், விலங்குகள் நல வாரிய செயலாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன.
- மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம் போல் ஏராளமான மாடுகள் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. மாலையில் மாடுகள் திரும்பியபோது வரும் வழியில் ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் 9 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்து விழுந்தன. மேலும் 4 மாடுகள் மயக்கமடைந்து உள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெற்பயிர்கள், நெல்குவியல்கள் உள்ளன. அதை மாடுகள் சேதம் செய்ததால் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என்றனர்.
இதுபற்றி அறிந்ததும் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் விரைந்து வந்தனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்தனர்.
- காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர்
- நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்
உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அம்மாநில முதல்வர் யோகிநாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது,
"காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியில், சிறுபான்மையினருக்கு உணவு சுதந்திரம் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். அதாவது, பசுவதையை எந்தத் தடைகளும் இன்றி அனுமதிக்கப் போகிறார்கள் என்று அதற்கு அர்த்தம். நாம் தாயாக மதிக்கும் பசுவை, கறிக்காக கொடுக்கப்போகிறார்களாம். இந்தியாவின் உணர்வுகளோடு வெட்கமேயில்லாமல் விளையாடுகின்றனர்.
அதாவது, ஒருவரது வீட்டில் நான்கு அறைகள் இருந்தால், அதில் இரண்டை அவர்களே எடுத்துச் சென்று விடுவார்கள். அதுமட்டுமின்றி, பெண்களின் நகைகளை கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது, இதை நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவர்கள் முயலுகின்றனர்.
நாட்டின் வளங்களில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
நாட்டை பிளவுபடுத்த காங்கிரஸ் சதி செய்து வருகிறது. ராமரின் பிறப்பிடமான அயோத்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அவர்கள் ராமர் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கினர். ஆனால் தெய்வம் அனைவருக்கும் உள்ளது. இது அவர்களின் இரட்டை நிலைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டு.
'பாரத் மாதா கி ஜெய்' மற்றும் 'வந்தே மாதரம்' என்று முழக்கமிட தயங்குபவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது" என்று அவர் தெரிவித்தார்.
- மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
இதனை தடுக்கும் விதமாக மாநகர பகுதியில் சுற்றித்தெரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் உத்தரவிட்டார். அதன் பேரில் 4 மண்டலங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்து பூந்துறை செல்வி அம்மன் கோவில் தெருவில் சுற்றி திரிந்த மாடுகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையிலான குழுவினர் பிடித்து மேகலிங்கபுரம் ரேஷன் கடை எதிரே அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் அடைத்தனர்.
இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பூங்கா முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்காமல் வீடுகளில் நின்ற மாடுகளை பிடித்து வந்து அடைத்து உள்ளதாகவும், உடனடியாக அனைத்து மாடுகளையும் விடுவிக்கும்படியும் கூறினர்.
அப்போது சுகாதார ஆய்வாளர் முருகன் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை மட்டுமே பிடித்துள்ளோம். உரிய அபராதமாக ஆயிரம் ரூபாய் செலுத்திவிட்டு மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறும், இனிமேல் சாலைகளில் மாடுகளை சுற்றி திரிய விடமாட்டோம் என எழுதி தரும்படியும் அறிவுறுத்தினார்.
எனினும் அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- போட்டியில் விருதுநகர், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.
- சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூர் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
பூஞ்சிட்டு, சின்னமாடு என 2 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் மதுரை, ராமநா தபுரம், விருதுநகர், நெல்லை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 57 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து 2-வது பூஞ்சிட்டு மாடு முதல் சுற்றில் நடைபெற்ற போட்டியை மூர்த்தி தொடங்கி வைத்தார். பூஞ்சிட்டு மாடு 2-வது சுற்றை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுமதி இம்மானுவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை சாலையின் இரு புறமும் நின்று ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
- மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில், பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு அங்குள்ள மாநகராட்சி அலுவலக பூங்காவில் அடைக்கபட்டது.
- நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மேலப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி துணை கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.
மேலும் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்