என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Curriculum"
- சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
- அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது.
தகவல் தொழில் நுட்பத்தில் நாளுக்குநாள் வளர்ச்சி கண்டுவரும் காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை கிடைக்கப் பெறுகிறோம். இதன் காரணமாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக செய்து முடிக்க முடிகிறது.
இதுபோன்ற வளர்ச்சிகளை கண்டு வியக்கும் நாம், சில விஷயங்களை கண்டு அதிர்ச்சியடைய வேண்டி இருக்கிறது. அதில் ஒன்று தான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள். சின்னஞ்சிறிய குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு ஆளாவது என்பது சர்வ சாதாரணமாக நடக்கிறது.
அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்த போதிலும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடரத்தான் செய்கின்றன. ஆகவே அதனை கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டம்.
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகளின் பாதுகாப்பு மசோதா (POCSO)-2011 நம் நாட்டு நாடாளுமன்றத்தில் 2012-ம் ஆண்டு மே 22-ந்தேதி நிறைவேற்றப்பட்டது.
2019-ம் ஆண்டில், போக்சோ சட்டம் திருத்தப்பட்டு மேலும் கடுமையாக்கப்பட்டது. இந்த திருத்தம் குறைந்தபட்ச தண்டனையை 7 முதல் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் வரை உயர்த்தியது. பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், குற்றத்தில் ஈடுபட்டவருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும். தீவிர தாக்குதலுக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம்.
போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து அனைத்து மாநிலங்களிலும் அது தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையும் கிடைத்துள்ளது. ஆனால் போக்சோ வழக்குகள் அதிகரித்ததே தவிர, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறைந்ததாக தெரியவில்லை.
அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில் போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்படும் மாநிலத்தில் ஒன்றாக கேரளா இருக்கிறது. குட் டச், பேடு டச் என அனைத்து தொடுகைகளின் விவரத்தையும் சிறு குழந்தைகள் இன்று எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பெரும்பாலான குழந்தைகளுக்கு தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பற்றி அறிந்து கொண்டுள்ளனர் என்றால் அதை மறுக்கமுடியாது. இருந்தபோதிலும் போக்சோ சட்டம் பற்றி பள்ளி குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்வதற்காக கேரள மாநில பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ சட்டம் சேர்க்கப்படுகிறது.
வருகிற கல்வியாண்டில் 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் பற்றிய பாடம் இடம்பெற உள்ளது. இந்த தகவலை கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் கூறியதாவது:-
போக்சோ சட்டம் பற்றிய பாடம் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும். சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் போக்சோ சட்டம் கற்பிக்கப்படும். இது அடுத்த ஆண்டு முதல் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திலும் சேர்க்கப்படும்.
மேலும் 5 முதல் 10-ம் வகுப்பு வரை தொழிற்கல்வி சேர்க்கும் வகையில் பாடத்திட்டம் முழுமையாக திருத்தப்படும். 1,3,5,7,9 ஆகிய வகுப்பு பாடப் புத்தகங்களும் அடுத்த கல்வியாண்டில் மாற்றப் படும். 4,6,8,10 வகுப்புகளிலும் பாடத்திடம் அடுத்த ஆண்டு மாற்றப்படுகிறது.
1-ம் வகுப்பில் உள்ள அனைத்து புத்தகங்களிலும் செயல்பாட்டு புத்தகங்கள் உள்ளன. ஆசிரியர்களுக்கான புத்தகங்களும் தயாராகி வருகின்றன. மேலும் நாட்டிலேயே முதன்முறையாக பெற்றோருக்கான புத்தகங்களும் தயாராகிறது.
புதிய பாடத்திட்டத்தில் விளையாட்டு, கழிவு பிரச்சினை, தூய்மை, குடிமை உணர்வு, சமநீதியுடன் கூடிய பாலின விழிப்புணர்வு, அறிவியல் உணர்வு, விவசாயம், மதச்சார்பின்மை உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பாட சாலைகள் திறப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநிலத்தில் இதற்கு முன்பு விரிவான பாடத்திட்ட திருத்தம் 2007-ம் ஆண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
- பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப்பள்ளிகள் ,அரசு உதவிப் பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி முகாம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலையில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
2025 ஆம் ஆண்டிற்க்கு தொடக்கக்கல்வியில் 100 சதவீதம் கற்றல் அடைவை பெற வேண்டி தொடங்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் கல்வித்திட்டத்தின் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் இரண்டாம் பருவத்தில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் , கணிதம் ஆகிய பாடங்களை எவ்வாறு நடத்தப்பட்ட வேண்டும் , கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி புத்தகங்கள் ஆகியவைகளை பாடத்திற்க்கு ஏற்றாற்போல் பயன்படுத்துவது குறித்து பயிற்சி நடைப்பெறுகிறது. வரை நடைபெறுகிறது.
இப்பயிற்சியை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி,வட்டாரக்கல்வி அலுவலா்கள் தாமோதரன் , ஜெயலெட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா். இதில் 7 ஆசிரியர் பயிற்றுனர்கள், 36 ஆசிரியர்கள் பயிற்சி கருத்தாளர்களாக செயல்படுகின்றனர். மூன்று நாட்கள் நடைப்பெறும் இப்பயிற்சியில் 212 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்