search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dance Competition"

    • கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ஓபன் கேட் நடனப்பள்ளியின் சார்பில் 9-வது ஆண்டு நடனப் போட்டி நிகழ்ச்சி மந்திதோப்பு சாலையில் உள்ள சர்க்கஸ் மைதானத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மருத்துவர் காந்திராஜ், தொழிலதிபர் பெரியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடனப்பள்ளி நிறுவனர் முத்து வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, பரிசுகளும், சான்றிதழ்களையும், வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர்கள் பத்ம பிரகாஷ், நர்மதா தேவி, பாலமுருகன், துறை பத்மநாபன், யூனியன் துணை சேர்மன் பழனிச்சாமி, நகர ஜெயலலிதா பேரவை ஆபிரகாம் அய்யாதுரை, கோபி, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சேலம் தங்கமாளிகை உரிமையாளரும், தொழிலதிபருமான பிரகாஷ், தொழிலதிபர் பிரண்ட் பேஜ் கார்மெண்ட்ஸ் உரிமையாளர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாணவி சாதனா நன்றி கூறினார்.

    • அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டி மதுரை விளாச்சேரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது.
    • 7 மாணவிகளும் மாநில அளவில் முதலிடம் பிடித்து "கலையரசி" பட்டம் பெற தகுதி பெற்றனர்.

    தென்காசி:

    தமிழக அரசால் நடத்தப்படும், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத் திருவிழா மாநில அளவிலான போட்டி மதுரை விளாச்சேரியில் உள்ள பெண்கள் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் அருகே உள்ள வெள்ளகால், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் அனுசுயா பேபி, நந்தனா, ஜனனி, சந்திகா, அனுஷாசெல்வி, வர்ஷா, லலிதா ஆகியோர் கிராமிய நடனம் போட்டியில் கலந்து கொண்டனர். இவர்கள் 7 பேரும் மாநில அளவில் முதலிடம் பெற்று, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் "கலையரசி" பட்டம், பரிசும் பெற தகுதி உள்ளவராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சாதனைப்படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    ×