என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Decomposing body"
- 2 நாட்களாக வாலிபரின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
- வாலிபர் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பித்தளைபட்டியை சேர்ந்தவர் ரத்தினம். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் சுரேஷ்குமார் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ரத்தினம் தனது மகளுடன் வெளியூரில் வசித்து வருகிறார். சுரேஷ் குமார் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் சந்தேகம் அடைந்து தாலுகா போலீ சாருக்கு புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சுரேஷ்குமார் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரி சோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எவ்வாறு இறந்தார், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.
- மக்கள் சென்று பார்த்தபோது ஏரியினுள் அழுகிய நிலையில் ஆண்பிணம் நீரில் மீதந்தது.
கடலூர்:
குறிந்சிப்பாடி அருகே யுள்ள ரங்கநாதபுரம் ஏரியில் இருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது. பொது மக்கள் சென்று பார்த்தபோது ஏரியி னுள் அழுகிய நிலையில் ஆண்பிணம் நீரில் மீதந்தது. இது குறிந்து குறிந்சிப்பாடி போலீசா ருக்கும், ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குறிஞ்சிப்பாடி போலீசார் ஏரியில் மிதந்த உடலை கைப்பற்றினர். இவருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் கூறினர். மேலும், கிராம நிர்வாக அலுவலர் ரகுராமன் கொடுத்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்