search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi chalo"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி.
    • நேற்று அரசுடன் நடைபெற்ற 6 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதாய விலையை உறுதி செய்தல் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் டெல்லியில் இன்று பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    அதனால் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப், அரியானா மாநில எல்லையில் இருந்து டெல்லிக்குள் விவசாயிகள் டிராக்டர்களுடன் நுழையாத வண்ணம் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நேற்றிரவு மத்திய அரசுக்கும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் அறிவித்தபடி பேரணி தொடங்கும் என விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன. அதனடிப்படையில் விவசாயிகள் ஷம்பு (பஞ்சாப்-அரியானா) எல்லையில் பேரணியை தொடங்கியுள்ளனர்.

    அதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் ஃபட்டோகார்ஹ் சாஹிப் என்ற இடத்தில் இருந்து அம்ாபலா அருகில் உள்ள ஷம்பு எல்லையை நோக்கி புறப்பட்டனர்.

    திக்ரி எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஷம்பு எல்லையில் போலீசார் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • இன்று டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
    • டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரியானா விவசாயிகள் டிராக்டர்களுடன் செல்லாத வகையில் அம்மாநில அரசு, சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுந்தியுள்ளார்.

    அதில், "இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், "நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆஜராகாத நிலையில், பாதிக்கக் கூடிய வகையிலான எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விவசாயிகள் போராட்டத்தை நிறுத்தும் வகையில், நேற்றிரவு மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    • விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்த நிலையில் டெல்லியில் தடைஉத்தரவு பிறக்கப்பட்டது.
    • சண்டிகரில் மத்திய அரசு விவசாயிகள் சங்கங்களுடன் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தின.

    தங்களுடைய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாயிகள் சங்கங்கள் அறிவித்தன.

    இதனால் முன்னெச்சரிக்கையாக டெல்லி-அரியானா, டெல்லி- பஞ்சாப் மாநில எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    டெல்லி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் விவசாயிகளுடன் நேற்று மத்திய அமைச்சர்கள் சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் டெல்லியை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.
    • டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர்.

    சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள்,விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகளின் பேரணி நாளை (13- ந்தேதி) டெல்லியில் நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் இந்த விவசாயிகள் நாளை 13ம் தேதி பெரிய அளவிலான போராட்டத்தை டெல்லியில் நடத்த தயாராகி வருகின்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தையொட்டி டெல்லி போலீசார் சிங்கு, காஜிபூர் மற்றும் திக்ரி எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி உள்ளனர். போராட்டக்காரர்களை நகருக்குள் நுழைவதைத் தடுக்க ஆணிகள் மற்றும் தடுப்புகளை அமைத்து உள்ளனர். 

    மேலும், சாலைகளில் கிரேன், ஜேசிபி எந்திரங்கள் மூலம் பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்புகள் அமைத்து உள்ளனர். விவசாயிகளின் வாகனங்கள் டெல்லி நகருக்குள் நுழைய முடியாதபடி தடைகளை அமைத்து உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான போலீசார் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×