search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "devegowda"

    • தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல.
    • தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது.

    திருவனந்தபுரம்:

    கேரளா, தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனது கட்சியின் அனைத்து மாநில பிரிவுகளும், பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க ஒப்புதல் அளித்திருப்பதாக முன்னாள் பிரதமரும், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

    மேலும் கேரளாவில் நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறோம். எங்களது எம்.எல்.ஏ. அங்கு அமைச்சராக இருக்கிறார். கேரளாவின் இடதுசாரி அரசாங்கத்தின் முதல்-மந்திரி பினராயி விஜயன் கட்சியை காப்பாற்றுவதற்காக பாரதிய ஜனதாவுடன் கரநாடகாவில் முன்னேற முழு ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

    தேவேகவுடாவின் இந்த பேச்சு கேரள மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கே.சுதாகரன், வி.டி.சதீசன் உள்ளிட்டோர் முதல்-மந்திரி பினராயி விஜயனை கடுமையாக தாக்கி கருத்து வெளியிட்டனர்.

    தனது நிலைப்பாடு குறித்து தேவேகவுடா கூறிய கருத்துக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படையற்ற உண்மைக்கு மாறான தகவலை அவர் தெரிவித்திருப்பதாகவும் கூறினார். இது பற்றி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பாரதிய ஜனதாவுடனான தொடர்பை திட்டவட்டமாக எதிர்க்கிறோம் எனவும், கேரளாவில் இடது முன்னணியுடன் வலுவாக நிற்போம் என்றும் ஜனதாதளம்(எஸ்) மாநில பிரிவு தெளிவு படுத்தி உள்ளது.

    தேவேகவுடா பாரதிய ஜனதாவுடன் கைகோர்ப்பது இது முதல் முறையல்ல. 2006-ம் ஆண்டு ஜனதா தளம்(எஸ்) பாரதிய ஜனதாவில் இணைந்தது. தனது மகனுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதாவுடன் இணைந்தார்.

    தேவேகவுடாவின் சமீபத்திய அறிக்கையால் நான் முற்றிலும் வியப்படைகிறேன். தேவேகவுடா போன்ற அனுபவமிக்க அரசியல்வாதி இப்படி செய்வது முற்றிலும் அவமானகரமானது. இதுபோன்ற ஆதாரமற்ற பொய்கள், சங்பரிவாருக்கு எதிரான போரில் சி.பி.எம். ஒரு அசைக்க முடியாத மற்றும் தளராத சக்தியாக இருந்து வருகிறது. எங்களின் நிலைப்பாட்டில் தெளிவற்ற தன்மைக்கு இடமில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

    • முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவேகவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
    • தேவேகவுடா மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் இந்தியப் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவேகவுடாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    அவர் மகிழ்ச்சியுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளது. தங்களுக்கு 12 தொகுதிகள் கேட்டு தேவகவுடா பிடிவாதம் பிடிப்பதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது. #devegowda #parliamentelection #rahulgandhi
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும் பான்மை கிடைக்கவில்லை. இதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வருவதை தடுக்கும் நோக்கத்தில் ஜே.டி.எஸ். கட்சிக்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.

    முதல் மந்திரியாக குமாரசாமியும், துணை முதல் மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வரரும் இருந்து வருகிறார்கள். 2 கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மந்திரிகளாக உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலிலும் ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். தங்களுக்கு 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசிடம் ஜே.டி.எஸ். கட்சி தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வலியுறுத்தி வருகிறார்.

    இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட முடிவு செய்து உள்ளோம். கர்நாடகாவில் மொத்தம் 28 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இதில் 12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கட்சிக்கு கண்டிப்பாக ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளேன்.

    விரைவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து இது குறித்து பேசுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜே.டி.எஸ். கட்சிக்கு 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான சித்தராமையா ஆகியோர் காங்கிரஸ் தலைமையில் வலியுறுத்தி உள்ளனர்.

    12 தொகுதிகளை ஜே.டி.எஸ். கேட்டு உள்ளதால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்து உள்ளது. ராகுல்காந்தியை, தேவகவுடா சந்திக்கும் போதுதான் ஜே.டி.எஸ். கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியவரும். #devegowda #parliamentelection #rahulgandhi
    2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, இந்தியா-இலங்கை உறவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். #Rajapaksa
    பெங்களூரு :

    பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்திருந்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    எனது தலைமையில் இலங்கையில் ஆட்சி நடந்த போது, இந்தியாவுடனான நட்புறவு சிறப்பாக இருந்தது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு பின்பு புதிய அரசு உருவானதும் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இருந்த உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் இரு நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, இதுபோன்ற உறவில் பாதிப்பு ஏற்படுவது உண்டு. இரு நாடுகள் இடையே உள்ள உறவில் பாதிப்பு ஏற்படுவது சரியல்ல.

    2014-ம் ஆண்டுக்கு முன்பாக 1980-ம் ஆண்டிலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது கூட இந்தியா-இலங்கை உறவில் விரிசல் உண்டாகி இருந்தது. என்றாலும், இரு நாடுகளுக்கு இடையே உண்டாகும் விரிசல்களை தவிர்த்திருக்கலாம்.

    இந்தியா மற்றும் இலங்கையின் அரசியல் கட்சி தலைவர்கள் இடையே உறவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். ஏனெனில் வெளியுறவுத்துறை, பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவை அரசியல் கட்சி தலைவர்களிடமே இருக்கிறது. இலங்கையில் எதிர்க்கட்சியாக நான் இருந்தாலும், இந்தியாவில் ஆளுங்கட்சியுடன் நல்ல உறவு இருக்கிறது. அண்டை நாடுகளான இந்தியாவும், இலங்கையும் தங்களது பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டும்.

    தேவேகவுடாவை, ராஜபக்சே சந்தித்து பேசிய காட்சி.

    இந்திய தலைவர்கள் எதிர்பார்ப்பது இலங்கை மூலம் 3-வது நபரால் எந்த அச்சுறுத்தலும் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறார்கள். அதையே இலங்கை தலைவர்களும் எதிர்பார்க்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இரு நாடுகளுடையே நடைபெறும் பேச்சு வார்த்தை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பெங்களூருவுக்கு வந்திருந்த முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த போரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், ராஜபக்சே பெங்களூருவுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று காலையில் கருநாடக தமிழர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். #Rajapaksa

    மத்திய அரசை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataBanerjee #Devegowda
    பெங்களூரு :

    மேற்கு வங்க மாநில உயர் போலீஸ் அதிகாரி ராஜீவ் குமாரிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்றனர். அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களை மீறி, அத்துமீறி நுழைந்ததாகக் கூறி அவர்களை கைது செய்ய மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். அதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த சென்ற விவகாரத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நேர் எதிர் போட்டி ஏற்பட்டுள்ளது. இது அவசர கால பிரகடன நிலையை எனக்கு நினைவுபடுத்துகிறது. மேற்கு வங்க உயர் போலீஸ் அதிகாரியை சி.பி.ஐ. அதிகாரிகள் அவசர, அவசரமாக கைது செய்ததையும், அதைத்தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். இதேபோன்றதொரு நிலையைத்தான் இந்த நாடு அவசர கால சூழ்நிலையில் சந்தித்தது. மேற்கு வங்காளத்தில் இப்போதுள்ள சூழ்நிலை அவசர கால நிலையைப் போன்றே உள்ளது.

    மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக களமிறங்கும் ‘மகாகத்பந்தன்’(மெகா கூட்டணி) கூட்டணியின் துருப்புச்சீட்டு ஆவார். அவருடன் பெரும் கூட்டணி அமைத்துள்ள ஜனதா தளம்(எஸ்) கட்சியும், நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய செயல்பாடு உள்ள பங்குதாரர்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சேவ் டெமாக்ரசி’ (ஜனநாயகத்தின் பாதுகாப்பு) என்ற ‘ஹாஷ் டேக்’கில்இதுபற்றி தெரிவித்துள்ள கருத்து பற்றிய விவரம் வருமாறு:-

    கர்நாடக காங்கிரசுடனான கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்கிறது. இந்த கூட்டணி, மத்திய அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கையும், கூட்டணி ஆட்சிக்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கிறது. மத்திய அரசின் செயல்பாடு, நாட்டில் கூட்டணி அரசுக்கான அச்சுறுத்தலாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுமட்டுமல்லாமல் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியில் இருந்து செல்லும் நேரம் வந்துவிட்டது’’ என்று பதிவிட்டுள்ளார்.  #MamataBanerjee #Devegowda
    கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறியுள்ளார். #Devegowda
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி நடந்து செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டணி அரசை அகற்ற பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் முயற்சி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார் என்று தேவேகவுடா கூறி இருக்கிறார். இது காங்கிரசார் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் உள்ள கூட்டணி அரசை கவிழ்க்க பிரதமர் மோடி விரும்ப மாட்டார். கர்நாடக பா.ஜனதா தலைவர்களை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வழி நடத்துகிறாரா? என்று எனக்கு தெரியாது. பா.ஜனதா தேசிய கட்சி. கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்தால், அதற்கு அக்கட்சியின் மேலிடத்தின் அனுமதி தேவை. கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா 3 நாட்கள் மட்டுமே முதல்-மந்திரியாக இருந்தார். அதனால் இயற்கையாகவே அவர் பாதிக்கப்பட்டுள்ளார்.  #Devegowda

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.
    இனி காங்கிரசாரின் விமர்சனத்தை சகித்துக்கொள்ள மாட்டேன் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Devegowda #Congress
    பெங்களூரு :

    ஜனதா தளம்(எஸ்) கட்சியின் பொதுக்கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா கலந்து கொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் முதல்-மந்திரி குமாரசாமியை தொடர்புகொள்ள முடியவில்லை என்று சொல்கிறார்கள். இதுபோல் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தினமும் பேசுகிறார்கள். காங்கிரஸ் கொடுத்த பட்டியலில் ஒரு வாரியத்தை தவிர மற்ற வாரியங்களுக்கு தலைவர்களை நியமனம் செய்துள்ளோம்.

    ஆட்சி நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை. எத்தனை நாட்கள் தான் இவ்வாறு நடந்து கொள்வீர்கள்?. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்ெவான்று பேசுகிறார்கள். நாங்கள் இப்போது இறுதிக்கட்டத்தில் வந்து நிற்கிறோம்.

    நாட்டில் சில கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. நானும் காங்கிரசின் ஆதரவில் பிரதமரானேன். தரம்சிங் ஆட்சியில் கூட்டணி நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தரம்சிங் அரசு கவிழ நானோ அல்லது குமாரசாமியோ காரணமல்ல. இப்போது காங்கிரஸ் ஆதரவில் குமாரசாமி முதல்-மந்திரி ஆகி இருக்கிறார்.

    தனக்கு ஏற்பட்ட வேதனை காரணமாக, முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக குமாரசாமி கூறினார். எங்கள் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் தான்(சித்தராமையா) எந்த பணிகளையும் செய்யவில்லை. அப்போது எனக்கு ஏற்பட்ட வலி, கடவுளுக்கு மட்டுமே தெரியும்.



    சோனியா காந்திக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், நான் முதல்-மந்திரி ஆகி இருப்பேன் என்று அவர் (சித்தராமையா) அடிக்கடி சொன்னார். கூட்டணி ஏற்பட்டபோதும், என்னையே மீண்டும் முதல்-மந்திரியாக்கி இருக்கலாம் என்று அவர் கூறினார்.

    அப்போது காங்கிரசில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. யார் ஆட்சியை நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. சோனியா காந்தியின் பிரதிநிதிகள் வந்து, குமாரசாமியை முதல்-மந்திரியாக்கினால் ஆதரவு வழங்குவதாக கூறினார்கள். இதனால் காங்கிரஸ் மேலிடத்தின் விருப்பப்படி குமாரசாமி முதல்-மந்திரியானார்.

    கூட்டணி அரசு பற்றி யாராவது விமர்சனம் செய்தால் அதை நான் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்கு தக்க பதில் கொடுப்பேன். காங்கிரசார் தொடா்ந்து எங்களை விமர்சித்து பேசினால், நிலைமை கைமீறி போய்விடும்.

    இனி காங்கிரசாரின் விமர்சனத்தை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்து ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். அவரை பற்றி நாங்கள் எந்த விமர்சனமும் செய்யவில்லை. குமாரசாமி இதுவரை எல்லை மீறி பேசியது இல்லை.

    ஒரு முறை மட்டும், நான் குமாஸ்தாவை போல் பணியாற்றுவதாக கூறினார். அது உண்மை. ஆனால் அது, ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் அவர் தனிப்பட்ட முறையில் கூறியது. கூட்டணி அரசை நடத்துவது எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கவே அவர் அவ்வாறு கூறினார். அந்த வார்த்தையின் பின்னணியில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார். #Devegowda #Congress
    காங்கிரஸ் விமர்சனத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா அறிவுரை கூறியுள்ளார். #Devegowda #Kumaraswamy
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆனால் காங்கிரஸ் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சிலர், எங்கள் முதல்-மந்திரி சித்தராமையா தான் என்று கூறுகிறார்கள்.

    மேலும் காங்கிரசை சேர்ந்த எஸ்.டி.சோமசேகர் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது, தேவேகவுடா குடும்பம் பற்றி விமர்சனம் செய்தார். பெங்களூருவின் வளர்ச்சியில் குமாரசாமி அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



    இதற்கு சற்று கோபமாக பதிலளித்த குமாரசாமி, காங்கிரசார் இதேபோல் தொடர்ந்து பேசினால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று எச்சரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, குமாரசாமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசினார்.

    அப்போது தேவேகவுடா, “காங்கிரசாரின் விமர்சனத்திற்கு உடனே கருத்து கூற வேண்டாம். அதுபற்றி கவலைப்பட வேண்டாம். முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியது தவறு. அரசியலில் இதுபோன்ற விமர்சனங்களை தாங்கிக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்க வேண்டாம். அவற்றை கவனத்தில் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அறிவுரை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Devegowda #Kumaraswamy
    ஹாசனில் நடந்த ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டு கவிழ விட மாட்டோம் என்று கூறியுள்ளார். #Devegowda
    ஹாசன் :

    ஹாசன் டவுன் சென்னப்பட்டணா பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஹாசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்து கொண்டு பரபரப்பாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி இன்னும் ஓரிரு நாட்களில் கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர்.

    ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இல்லை. நானும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும் கூட்டணி ஆட்சியை எக்காரணத்தை கொண்டும் கவிழ விடமாட்டோம். எனக்கு யாரை கண்டும் பயம் இல்லை. விவசாயிகளின் கடன், கூடிய விரைவில் படிபடியாக தள்ளுபடி செய்யப்படும்.

    பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பேசுகிறார். அவைதான் முக்கியம் என்று கூறுகிறார். அவர் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுகிறார். நான் 56 வருடமாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் என்னை வளர்த்து விட்டது ஹாசன் மக்கள் தான்.



    ஜனதாதளம் (எஸ்) கட்சி, ஒரு குடும்ப கட்சி என்று கூறுகின்றனர். இந்த கட்சி ஒன்றும் எனது சொத்து இல்லை, இது அனைவருக்கும் பொதுவான கட்சி. குமாரசாமி முதல்-மந்திரி ஆன பின்பு தான் கர்நாடகத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. கூட்டணி ஆட்சி என்றால் சிறிய, சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனைதொடர்ந்து பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா பேசினார். அப்போது அவர், ‘‘மாநிலத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு தான் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்டு யானைகளின் தொல்லைகள் கட்டுப்படுத்தப்படும். அதிகமாக அரசு பள்ளிகள் திறக்கப்படும். ஹாசனில் இருந்து பேலூருக்கு விரைவில் ரெயில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.600 கோடி செலவிடப்பட உள்ளது. அதை மத்திய அரசும், மாநில அரசும் தலா 50 சதவீதம் என பங்கிட்டுக் கொள்ளும்’’ என்று கூறினார்.
    தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என்று தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார். #devegowda #Congress

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஜே.டி.எஸ். -காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அவ்வப்போது கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகளால் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.

    தற்போது தங்களை கேட்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக ஜே.டி.எஸ். கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து காங்கிரசுக்கு ஜே.டி.எஸ். கட்சி தலைவர் தேவேகவுடா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    3 மாநில தேர்தல் வெற்றிக்குப்பின் காங்கிரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசு நிர்வாகத்தில் கூட்டணி கட்சியாக எங்களை கலந்து ஆலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறது. இந்தப் போக்கு நீடித்தால் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும்.

    எங்கள் தோழமை கட்சி மீது எந்த குற்றச்சாட்டும் கூற விரும்பவில்லை என்றாலும், காங்கிரஸ் எங்களை நடத்தும் விதம் அதிருப்தியளிக்கச் செய்வதாக உள்ளது.

    இவ்வாறு தேவேகவுடா கூறினார்.  #devegowda #Congress 

    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தேவேகவுடா விடுத்த அழைப்பை ஏற்று பெங்களூரு செல்ல உள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சியமைக்க உரிமை கோரி மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கவர்னரை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. 

    அந்த வகையில் குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்தார். தேவேகவுடாவின் அழைப்பை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் 23-ம் தேதி பெங்களூரு சென்று பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார் என டெல்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Kumarasamy #Devegowda #ArvindKejriwal
    கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தேவேகவுடா அழைப்பு விடுத்துள்ளார். #Devegowda #MKStalin
    சென்னை:

    கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத் தொடர்ந்து காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை அழைத்து கவர்னர் பேசினார். அப்போது ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

    அதன் அடிப்படையில் வருகிற 23-ந்தேதி (புதன் கிழமை) கர்நாடக முதல்- மந்திரியாக குமாரசாமி பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒத்த கருத்துடைய கட்சி தலைவர்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    குமாரசாமியின் தந்தையும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா தொலைபேசி மூலம் மு.க.ஸ்டாலினிடம் பேசி உள்ளார். இதை ஏற்று பெங்களூர் சென்று பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிகிறது. #Kumarasamy #Devegowda #MKStalin
    ×