search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "D.N.A. experiment"

    • உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
    • டி.என்.ஏ. பரிசோதனைக்கு பரிந்துரை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை தொடர்ந்து பெய்ததால் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய 3 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

    இதன் காரணமாக அந்த பகுதிகளில் இருந்த வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் தூங்கிக் கொண் டிருந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த சம்பவத்தில் பலியான 300-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    மேலும் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. கடற்படை, கப்பல்படை, விமானப்படை என ராணு வத்தின் முப்படை வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் இரவு பகல் பராமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலியானவர்களின் உடல்கள் அரசு ஆஸ்பத்திரி கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தினர் அடையாளம் காட்டுவதன் அடிப்படையில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    நிலச்சரிவில் பெரிய பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததாலும், காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற தாலும் பலியானவர்களின் உடல்கள் சிதைந்த நிலையி லேயே மீட்கப்பட்டு வரு கின்றன. பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு சின்னா பின்னமாகி இருக்கின்றன. இதனால் இறந்தவர்களை அடையாளம் காணுவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

    இதன் காரணமாக ஒரு உடலுக்கு பலர் உரிமை கொண்டாடும் அரங்கமும் அரங்கேறி வருகிறது. முண்டக்கை நிலச்சரிவில் சிக்கி பலியான ஒரு சிறுமி உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி உள்ளனர். அந்த சிறுமியின் உடல் மேப்பாடி மருத்துவ மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. சிறுமியின் உடல் மிகவும் சிதைந்த நிலையில் இருந்துள்ளது.

    முதலில் ஒரு குடும்பத்தினர் அந்த சிறுமி தங்களது குழந்தை என கூறி இருக்கின்றனர். அவர்களிடம் அந்த சிறுமியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் மற்றொரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.

    இருவரது குடும்பத்தின ரையும் அதிகாரிகள் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் இரு குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர். இதனால் மேலும் குழப்பம் ஏற்பட்டது. முதலில் உரிமை கொண்டாடிய குடும்பத்தினர் அந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கே கொண்டு சென்று விட்டனர்.

    பின்பு அவர்களிடமிருந்து மீட்டு 2-வது குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போதுதான் மேலும் 2 குடும்பத்தினரும் சிறுமியின் உடலுக்கு உரிமை கொண்டாடினர்.


    இந்நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்னிலையில் மக்கள் பிரதிநிதிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அதில் சிறுமியின் உடலுக்கு 4 குடும்பத்தினர் உரிமை கொண்டாடுவது குறித்து பினராயி விஜயனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக சிறுமிக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த வேண்டிய அவசியத்தை அவரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினர்.

    அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பினராயி விஜயன் பரிந்துரைத்தார். இதேபோன்று பல அடையாளம் தெரியாத உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உரிமை கொண்டாடுவதால் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதனை தீர்க்க ஒரு அமைப்பை கொண்டு வர அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

    • குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்கள் பலர் கரிக்கட்டையாகி விட்டனர்.
    • உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

    குவைத் தீ விபத்தில் மரணம் அடைந்தவர்கள் பலர் கரிக்கட்டையாகி விட்டனர். அவர்களது உடல்களை அடையாளம் காணமுடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

    இதனால் இறந்த உடல்களை அடையாளம் காண்பதற்கு குவைத் அரசு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் மூலம் இறந்தவர்கள் உடல்களை விரைந்து அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவைத்துக்கு விமானப்படை விமானம் விரைகிறது

    குவைத் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தாயகம் கொண்டு வர பிரதமர் மோடி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தை குவைத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    • விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர்.
    • சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த 25-ந் தேதி இரவு 7 மணியளவில் இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரை யோரம் செங்கமேடு சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த அடையாளரம் தெரியாத வாலிபர்கள் மாணவனை கத்தியால் குத்தினார்கள். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக முதலில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது.

    ஆனாலும் குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவனும, மாணவியும் நீதிபதியிடம் வாக்கு மூலம் அளிததனர். இருவரும் கூறியது உண்மையா என்பதை அறிய அவர்களிடம் உண்மை கண்ட றியும் சோதனை நடைபெற்றது.  இது குறித்து போலீசார் கூறியதாவது  சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்.பின்னர் மாணவி அணிந்தி ருந்த வெள்ளி மோதிரம் மற்றும் ெகாலுசை பறித்துள்ளார். மற்றொருவர் மாணவரை கத்தியால் குத்தி உள்ளார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.      இதற்கிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    இதற்கிடையே டி.என்.ஏ. மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து அதன் முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.

    ×