search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "door broken"

    திருவெறும்பூரில் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 9 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் திருவேங்கடநகரை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். இன்று காலை பார்த்த போது ரெங்கசாமியின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

    இதைப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டனர். ரெங்கசாமியும் சம்பவம் அறிந்து வீட்டிற்கு விரைந்து வந்தார். 

    அப்போது வீட்டில் 9 பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருந்தது. ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள்  தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவட்டார் அருகே வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்றனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் கண்ணணூர் உடையார்விளை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். இவரது மனைவி எலிசபத் (வயது 60). இவர்களது மருமகள் பிரசவத்திற்காக சுவாமியார் மடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் இவர்கள் அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தனர்.

    நேற்று காலை இவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.57 ஆயிரம் ரொக்கப்பணம், 3 பவுன் நகை ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ் பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த வீட்டின் மாடி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதுபற்றி துப்புதுலக்க திருவட்டார் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரவீந்திரன் தலைமையில் தனி போலீஸ்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் கருங்கல்லை அடுத்த பூட்டேற்றி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் அலுவலக அறைக்கதவை யாரோ மர்ம மனிதர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை சிதறடித்து உள்ளனர். அதே சமயம் அங்கிருந்த பொருட்கள் எதுவும் திருட்டுப்போக வில்லை.

    இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ×