search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Draft Voter List Issue"

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. #DraftVoterList

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    வாக்காளர் வரைவு பட்டியலை வெளியிட்டு கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 9 லட்சத்து 39 ஆயிரத்து 707 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 72 ஆயிரத்து 522 பெண் வாக்காளர்களும், இதர வகுப்பினர் 92 பேரும் உள்ளனர். மொத்தம் 19 லட்சத்து 12 ஆயிரத்து 322 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த 10.1.2018 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 40 ஆயிரத்து 970, பெண் வாக்காளர்கள் 9 லட்சத்து 74 ஆயிரத்து 786, 3-ம் பாலினத்தவர் 92 ஆக மொத்தம் 19 லட்சத்து 15 ஆயிரத்து 848 பேர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த நிலையில் 11.1.2018 முதல் 31.8.2018 வரை தகுதி அடிப்படையில் ஆண் வாக்காளர்கள் ஆயிரத்து 888 பேரும், பெண் வாக்காளர்கள் 2 ஆயிரத்து 146 பேரும், 3-ம் பாலினத்தவர் 2 பேரும் சேர்த்து 4 ஆயிரத்து 36 வாக்காளர்கள் புதிதாக இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அது போன்று 11.1.2018 முதல் 31.8.2018 வரை விசாரணை அடிப்படையில் இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 3 ஆயிரத்து 151 பேரும், பெண் வாக்காளர்கள் 4 ஆயிரத்து 410 பேரும், 3-ம் பாலினத்தவர் ஒருவரும் சேர்த்து மொத்தம் 7 ஆயிரத்து 562 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்களின் பார்வைக்காக இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஆயிரத்து 147 அலுவலர்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் 1.1.2019 அன்று 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று படிவம் எண் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம்.

    மேலும் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6-ஐயும், பெயர் நீக்கம் செய்திட படிவம் 7-ஐயும், பெயர், முகவரியில் ஏதேனும் திருத்தங்கள் செய்திட படிவம் 8-ஐயும், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8 ஏ -ஐயும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வாக்குச் சாவடி மைய அலுவலரிடம் அளிக்கலாம்.

    வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் வருகிற 9-ந்தேதி, 23-ந்தேதி, 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள வாக்குச் சாவடி மையங்களுக்கு சென்று தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் வருகிற 4.1.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டு அவர் பேசும் போது கூறியதாவது:-

    நாகை மாவட்டத்தில் 12 லட்சத்து 49 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6 லட்சத்து 18 ஆயிரத்து 557 பேர் ஆண்கள்.. 6 லட்சத்து 30 ஆயிரத்து 951 பேர் பெண்கள். இதர வகுப்பினர் 29 பேர் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DraftVoterList

    கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டார்.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் ஹரிஹரன் வெளியிட்டார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி கடந்த 11.1.2018 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் தீர்வு செய்யப்பட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    அதன் படி கோவை மாவட்டத்தில் தற்போது 28 லட்சத்து 33 ஆயிரத்து 509 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 14 லட்சத்து 5003, பெண்கள் 14 லட்சத்து 28 ஆயிரத்து 218, மூன்றாம் பாலினத்தவர் 288 ஆவார்கள்.

    கோவை மாவட்டத்தில் 1.1.2019-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யும் பணி 1.9.2018 முதல் 31.10.2018 வரை நடைபெற உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள 1.9.2018 முதல் 31.10.2018 வரை படிவங்கள், வாக்கு பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறப்பட உள்ளது.மேலும் 9.9.2018,23.9.2018,7.10.2018 மற்றும் 14.10.2018 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. இம்முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்படும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6,பெயர் நீக்கம் செய்தவற்கு படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8, மற்றும் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

    மேலும் 8.9.2018, 22.9.2018,, 6.10.2018 மற்றும் 13.10.2018 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள கிராம சபா மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களிலும் அப்பகுதிக்கு உண்டான வாக்காளர் பட்டியலின் சம்பந்தப்பட்ட பாகங்கள் படிக்கப்படும்.

    31.10.2018 வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 4.1.2019 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.கடந்த ஜனவரி 10-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 28 லட்சத்து 29 ஆயிரத்து 570 வாக்காளர்கள் இடம் பெற்று இருந்தனர்.

    பின்னர் புதிதாக பெயர் சேர்த்தல் மூலம் ஆண் வாக்காளர்கள் 2,774 பேரும், பெண் வாக்காளர்கள் 2,591 பேரும் இதரர் 3 பேரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.முகவரி திருத்தம் வாயிலாக ஆண்கள் 757 பேரும், பெண்கள் 671 பேரும் இதரர் ஒருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் இதுவரை 2892 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவின் படி ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி வீதம் கோவை மாவட்டத்தில் புதிய கணக்கெடுப்பு படி 178 வாக்கு சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.எனவே கோவை மாவட்டத்தில் மொத்தம் 3,070 வாக்குச்சாவடிகள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டு நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, சப்-கலெக்டர் கார்மேகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 21 லட்சத்து 71 ஆயிரத்து 477 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 10 லட்சத்து 82 ஆயிரத்து 855 பேர். பெண்கள் 10லட்சத்து 88 ஆயிரத்து 377 பேர். இதரர் 245 பேர் ஆவார்கள்.

    ×