என் மலர்
நீங்கள் தேடியது "Driver"
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது.
- பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் ஐபிஎல் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார்.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் கே.கே.ஆர்.- ஆர்.சி.பி. போட்டியை பேருந்து ஓட்டுநர் ஒருவர் செல்போனில் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல் போட்டியை பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் செயலை பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் தேவேந்திர பட்நாவிசை அவர் டேக் செய்திருந்தார். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
- பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.
நெல்லை:
பாளை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவிலுக்கு சென்றார். வி.எம்.சத்திரம் சோதனைசாவடி அருகே சாலையில் லாரியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கி உள்ளார்.
அப்போது அங்கு 4 மோட்டார் சைக்கிளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் தாக்கி அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் - செல்போனை பறித்துக்கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.
- தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
- இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் சேகர் என்பவரும் நண்பர்கள் எனக் சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகில் தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிலர் ராஜ்குமாரை திடீரென வழிமறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீ சார் , அடிதடி வழக்கில், தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (47), அவரது மகன் அரவிந்த் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
- 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
- கடந்த 23-ம் தேதி நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் சித்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 51). இவரது மனைவி கோமதி (40). இவருக்கு லட்சுமி, ஷாலினி, சிவானி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர்.
செந்தில்குமார் கடந்த 2013 ஆண்டு முதல் 9 வருடங்களாக சவுதி அரேபியாவில் டேங்கர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி அங்கு சாலை விபத்தில் செந்தில்குமார் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த செந்தில்குமாரின் மனைவி உடல்நிலை பாதி க்கப்பட்டு இருப்பதாலும், அவருக்கு மூன்று பெண் குழந்தைகளாக இருப்பதாலும் அவரது உடலை விரைந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செந்தில்குமாரின் மனைவி கையெழுத்திட்ட மனுவை உறவினர் நவநீதகி ருஷ்ணன், சேமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்ட கலெக்ட ரிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொ ண்ட மாவட்ட கலெக்டர் உரிய நடவ டிக்கைகள் மேற்கொள்வ தாக தெரிவித்தார்.
- துரைமணி வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
- சாவியை எடுத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றுவிட்டார்.
பீளமேடு,
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் துரைமணி (வயது 30). டிரைவர். இவரது சகோதரர் சபாரத்தினம் (32). இவர் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் துரைமணி வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வீட்டுக்கு சென்ற போது, அங்கிருந்த மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ. 3 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை காணவில்லை.
வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் யாரோ திருடி சென்று விட்டனர். அவர் தனது தாய் வீட்டுக்கு சென்ற போது அவரது சகோதரரும் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.
இதனையடுத்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவர் தன்னுடைய சகோதரர் சபாரத்தினம் தனது வீட்டு சாவியை எடுத்து பணம் மற்றும் நகையை திருடி சென்றுவிட்டார் என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சபாரத்தினம் எங்கு சென்றார்? அவர்தான் பணத்தை திருடி சென்றாரா? அல்லது வேறு யாராவதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
- அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு குமரகிரி அடிவாரம் சிவன் கரடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 38). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணம் ஆகி உஷா (36) என்ற மனைவியுடன் வசித்து வந்தார். நேற்று இரவு 9.30 மணியளவில் மதன்ராஜ், சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் குமரகிரி அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் எதிர்பாராத விதமாக மதன்ராஜ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரும் பலத்த காயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த அம்மாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதன்ராஜ் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார்சைக்கிள் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் விஜய் (22) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள ஊஞ்சலூர் கருவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இவர்களது மகன் தமிழழகன் (வயது29). இவர் ஊஞ்சலூரில் உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்பெனியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
தமிழழகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தீராத வயிற்று வலி காரணத்தால் கடந்த 3 மாத காலமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் மற்றும் பார்வதி வேலைக்கு சென்றனர். வீட்டில் தமிழழகன் மட்டும் இருந்துள்ளார். இதனையடுத்து படுக்கையறையில் தமிழழகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் தந்தை ஆறுமுகம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தமிழழகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கி கொண்டிருந்த தமிழழகனை கீழே இறக்கி பார்த்த போது அவர் இறந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தமிழழகன் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லாரி டிரைவர் மகேஷ் 7 வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
- சிறுமி கத்தி கூச்சலிடவே மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று மகேஷ் ஒரு 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கதினார் ஓடி வந்தனர்.
இதனைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் சம்பவம் குறித்து சீவலப் பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேசை பிடித்து கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வந்த வேன் டிரைவர் மாயமானார்.
- கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
சேலம்:
சேலம் எருமாபாளையம் சுந்தர்மாளிகை தெரு மாரியம்மன் கோவில் எதிரில் வசித்து வருபவர் சிவகுமார் (வயது 45). இவருடைய மனைவி சங்கீதா (40). இந்த தம்பதிக்கு பிரகாஷ் (23) என்ற மகனும், பிரதிஷா(21) என்ற மகளும் உள்ளனர்.
வேன் டிரைவர் சிவகுமார் சன்னியாசி குண்டு அருகில் சொந்தமாக பந்தல் அமைக்கும் கடை வைத்தும், வேன் வைத்தும் டிரைவராக தொழில் செய்து வந்தார். இந்த வேன் வாங்குவதற்கும் பிள்ளை–களை படிக்க வைப்பதற்கும் சில வருடங்களுக்கு முன்பு அவர், வட்டிக்கு பணம் 7 லட்சம் வரை கடன் வாங்கினார். பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர்.
இந்த நிலையில் அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் சிவகுமார் கவலை அடைந்து புலம்பிக் கொண்டிருந்தார். கடந்த 20-ந்தேதி மதியம் கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என கூறி சென்றார். அன்று மாலை 5.30 மணி அளவில் அவர் தனது மனைவி சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் கோவை யில் வாடகைக்கு வண்டி ஓட்ட சென்றுள்ளேன்.
நாளை வீட்டிற்கு வந்து விடுகிறேன் என கூறினார். அதன் பிறகு அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கீதா மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிவகுமாரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என தெரியவில்லை.
'இது குறித்து சங்கீதா கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிவகுமார் கடனுக்கு பயந்து தலைம–றைவாக உள்ளாரா? அல்லது கந்து வட்டி கும்பல், சிவகுமாரை கடத்தினார்களா? என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் கோவையில் முகாமிட்டு சிவகுமாரை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே இரும்பு பொருட்களை திருடி மினி வேனில் கொண்டு சென்ற டிரைவர் போலீஸ்காரரை பார்த்ததும் தப்பி ஓடி விட்டார்கடலூர் அருகே குள்ளஞ்சாவடி ராமநாதன் குப்பம் கூட்ரோடு பகுதியில் குள்ளஞ்சாவடி போலீஸ்காபெரியகுப்பம் தனியார் கம்பெனியிலிருந்து திருடப்பட்ட 2 டன் இரும்பு பொருட்கள் அதில் இருந்தது தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இரும்பு பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இசைக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார்.
களக்காடு:
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள்நகர், கீழத்தெருவை சேர்ந்தவர் இசை (வயது26). கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (29) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இசை தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த சின்னதுரை, இசையை அவதூறாக பேசி செங்கற்களால் தாக்கினார். இதில் காயமடைந்த இசை நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக சின்னதுரையை தேடி வருகின்றனர்.
- இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நல்லசாமி சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கயத்தாறு:
கயத்தாறை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில மாதங்க ளாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து ெரயில்வே போலீசார் அங்கு வந்து நல்லசாமி உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.