search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Editing"

    • சத்தியமங்கலத்தில் இன்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் தனியார் பள்ளியில் அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டதில் பழைய ஓய்வூதியத் திட்டம், ஆசிரியரின் பணி பாதுகாப்பு, அகவிலைப்படி உயர்வு ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பட்டது.

    இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் பிரபாகரன் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • காலையில் ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.

    காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது.

    ரயில்வே சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 7-க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்களும் சென்று வருகிறது.

    ரயில்வே இளநிலை பொறியாளர்கள் பங்கஜ் பாண்டே, பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் ரயில்வே தொழிலாளர்கள் புதிய தண்டவாள புதுப்பிக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு பணிகள் மேற்கொண்டனர்.

    கோபுராஜபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டது.

    ×