என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "electric wire"
- மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
- உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், மார்க்கெட் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை, பூ கடைகள் உள்ளன. இந்த பஜார் பகுதிக்கு திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மேலும் பஜார் பகுதியை சுற்றி அரசு பள்ளி, தனியார் பள்ளி, திருமண மண்டபங்கள், கோவில்கள் உள்ளன.
இதனால் இந்த சாலையில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இருக்கும். இந்நிலையில் இன்று காலை ஆஞ்சநேயர் கோவில் அருகே மார்க்கெட் கூட்டுச்சாலையில் திடீரென உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்தது.
மேலும் மின்கம்பிகள் உரசி தீப்பொறிகள் பறந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மின்கம்பி அறுந்து விழுந்த போது அவ்வழியே பொதுமக்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை.
இதுபற்றி உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
- மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
- கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும்.
மயிலாடுதுறை:
கொள்ளிடம் கடைவீதியிலிருந்து ஆச்சாள்புரம், ரெயில் நிலையத்துக்கு செல்லும் சாலையிலிருந்து கொள்ளிடம் அக்ரஹார தெருவுக்கு மின் கம்பங்கள் மூலம் மின் கம்பிகள்செல்கின்றன.
இதில் உள்ள ஒரு மின்கம்பத்தில் கொடிகள் படர்ந்து மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை முழுமையாக மூடி மறைத்துள்ளன.
இதன் வழியே அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்சாரம் சென்று கொண்டிருக்கின்றன.தாழ்வாக செல்லும் மின்கம்பியில் கொடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்களில் கம்பிகளிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் கொடிகள் வழியே மின்சாரம் பாய்ந்து சாலையில் நடந்து செல்பவர்கள் மீது மின்சாரம் தாக்கும் அபாய நிலை உள்ளது.
இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படவும், தீவிபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின் கம்பிகளை அடர்ந்து சூழ்ந்து மூடி மறைத்துள்ள செடிகளை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
- மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் அக்ரவர்த்தி பகுதியை சேர்ந்தவர் ராசு.
இவருக்கு சொந்தமான 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி இளங்காடு செல்லும் சாலை அருகில் இருந்த வயலில் மேய்ச்சலுக்கு சென்றன.
அங்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அந்த வயலில் இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது.
இந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன.
இதில் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
- ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.
சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.
இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.
- அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள சிறுமங்கலம் கிராம த்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 52) என்பவரிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த கோபால் விவசாய வேலை செய்து வருகி றார். இவர் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று விட்டுள்ளார். மீண்டும் மாலை வெகுநேரமாகி யும் மாடுகள் வீடு திரும்பாததால் நேற்று முதல் மாடுகள் காணாமல் போய்விட்டதாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமங்கலம் சுடுகாட்டின் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக மின்கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் அறுந்து விழுந்து உள்ளதை மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மிதித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்தது. இதை பார்த்த திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமச்சந்திரன் ஆனவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவினங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்கம்பியையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- திருப்பணி வேலைகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா
பெரம்பூர் ஊராட்சி காளியம்மன்கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் தலைமையில் பொதுமக்கள், கலெக்டர் மகாபாரதியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
எங்கள் ஊரில் உள்ள காளியம்மன்கோயில் மேலே மிகவும் ஆபத்தான நிலையில் மின்கம்பி தாழ்ந்து செல்வதால் கடந்த ஐந்து வருடங்களாக திருப்பணி வேலைகள் முடிந்து கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம்.
தற்பொழுது கோயில் கும்பாபிஷேகம் செய்ய முயற்சி செய்து வருவதால் மின்சாரம் ஓடிக்கொண்டி ருக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கோயிலுக்கு மேலே தாழ்ந்து செல்லும் மின்கம்பி யையும், கம்பத்தையும் மாற்றி அமைத்துதர மின்சார துறையில் பல முறை புகார் கொடுத்தும் எந்த வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.
எனவே தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளையும், மின்கம்பத்தையும் மாற்றி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது.
- உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே இன்று காலை மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலியானார்.
திருவாரூர் அருகே புலிவலம் ஆர்.பி.எஸ். சாந்தாநகர் பகுதியில் சாலை பணிக்காக தஞ்சாவூர் பகுதியில் இருந்து டிப்பர் லாரி மூலம் செம்மண் இறக்கும் பணி நடை ெபற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் ஒரு லாரி செம்மண் இறக்க வந்துள்ளது. அந்த லாரியை மணிகண்டன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். பின்னர் லாரியில் இருந்த மண்ணை இறக்க டிப்பரை தூக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின் கம்பி மீது டிப்பர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் உயிரிழந்தார்.
உடனடியாக அப்பகுதி மக்கள் இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மணி கண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காலை நேரத்தில் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பி மீது டிப்பர் லாரி உரசி ஓட்டுநர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
- கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.
- பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.
- அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது.
புதுக்கோட்டை :
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கரம்பக்குடிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் கரம்பக்குடி புதுக்குளம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்கு ஓரமாக பேருந்தை டிரைவர் நிறுத்தினார்.
அப்பொழுது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின் கம்பி பேருந்தின் மேற்கூறையில் அறுந்து விழுந்தது. அது தீப்பொறியாக பறந்தன. இதனைக் கண்டதும்பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளும் பஸ்சை விட்டு இறங்கி தப்பியோடினர்.
மின் கம்பி அறுந்து விழுந்தவுடன் அதிர்ஷ்டவசமாக மின்தடை ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த மின்சார துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பியை சீரமைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேசியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 62).
- இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தனது மொபட்டில் தோட்டத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
நெல்லை:
நெல்லையை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேசியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(வயது 62). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருக்கு சொந்தமான தோட்டம் அந்த பகுதியில் உள்ளது. நேற்று வழக்கம்போல் தனது மொபட்டில் தோட்டத்திற்கு சென்ற கிருஷ்ணசாமி வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது மனைவி அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உடனே அவர் தோட்டத்திற்கு புறப்பட்டு சென்றார். அங்கு செல்லும் வழியில் கிருஷ்ணசாமி இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது நடத்திய விசாரணையில், நேற்று மதியம் அந்த பகுதியில் பெய்த கனமழையால் தோட்டத்திற்கு செல்லும் வழியில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் கிருஷ்ணசாமி சென்றபோது அவரது கால் அந்த கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
- இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நுகர்வோர் பயன்பாட்டிற்கு பூமிக்கு அடியில் கொண்டு செல்ல ப்பட்ட புதைவட மின்கம்பி பாதை திட்டம் மற்றும் தமிழகத்தில் முதல்மு றையாக சமையலறைக்கு கொண்டு செல்லப்பட்ட எரிவாயு குழாய் இணைப்பு பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டத்தில் அவ்வப்போது ஏற்படும் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பல்வேறு சமயங்களில் மின் தடை ஏற்படுகிறது. இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகை மற்றும் வேளாங்கண்ணியில் தமிழக அரசு 62 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பில் பூமிக்கு அடியில் புதைவட மின்கம்பி அமைக்கும் பணியை துவங்கின. இப்பணிகள் யாவும் முடிவுற்ற நிலையில் 11, ஆயிரம் நுகர்வோர்கள் பயன்பாட்டிற்குகொண்டு வரப்பட்ட புதைவட மின்கம்பி பாதைதிட்ட பணிகளை வேளாங்க ண்ணியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவினர் பார்வை யிட்டனர்.
தாம்பரம் எம்.எல்.ஏ ராஜா தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி, நாகை மாலி, எஸ்.எஸ்.பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட குழுவினர் பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து நாகை மாவட்டம் சீயாத்தமங்கையில் பூமிக்கு அடியில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ள எரிவாயு இணைப்பு நிலையத்தினையும் ஆய்வு செய்தனர்.
கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு பைப் லைன் மூலமாக சமையலறைக்கு எரிவாயு கொண்டு சென்ற திட்டத்தினை, டோரண்டோ கேஸ் நிறுவனத்தினர் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினருக்கு எடுத்துரைத்தனர். சமையலறைக்கு எடுத்துச் செல்லப்படும் எரிவாயு இணைப்பு திட்டத்தின் விவரங்களை கேட்டறிந்த தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு, டோரண்டோ கேஸ் நிறுவனத்தின் பணிகளையும் பாராட்டினர்.
- அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
- இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
அந்தியூர்:
அந்தியூர் தெப்பக்குளம் வீதி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் எதிரே செல்லக்கூடிய மின் வயர் மீது பறவைகள் கம்பியை கொண்டு சென்றபோது மின் கம்பியின் மீது போட்டுவிட்டு சென்று விட்டது.
இதனால் அந்த கம்பி மின்கம்பியிலிருந்து சாலையின் கீழ் பகுதி வரை தொங்கிக் கொண்டிருந்தது. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் அந்த கம்பியை தொட்டால் மின்தாக்கிவிடும் என்ற அச்சத்தில்ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வர தாமதம் ஆகிவிட்டது.
இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு குழந்தையை கொண்டு சென்று விட்டு செல்லும் பெற்றோர்களும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்தோடு சென்றனர்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அட்டையும் கற்களையும் வைத்து பொ துமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி அந்த கம்பியில் மோதாமல் செல்லுமாறு அறிவுறுத்திக் கொண்டி ருந்தனர். இதையடுத்து அந்த கம்பி அகற்றப்ப ட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்