என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "electricity board employees"
- மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்தது.
- மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது
பொள்ளாச்சி:
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று மின்சார சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் இந்த செயலை கண்டித்து இன்று பொள்ளாச்சி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு 100-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநில அரசுகளின் உரிமையை அடியோடு பறிக்கப்படும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்படும்100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் பறிபோகும் நிலை ஏற்படும்.
எனவே இந்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மின்சார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவர், மரவனேரியில் உள்ள அரசு மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெயராமன் நேற்று மாலையில் மளிகை கடைக்கு மிட்டாய் வாங்குவதற்காக சென்ற 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் ஜெயராமனை பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதையடுத்து ஜெயராமன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இன்று காலையில் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சேலம் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பாக ஜெயராமனை வேனில் அழைத்துச்சென்று சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்