search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephants are awesome"

    • பயிர்களை சேதப்படுத்தியது
    • காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன

    ஆம்பூர்:

    ஆந்திரா மாநிலம், நனியாலயா பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக -ஆந்திரா எல்லையான வாணியம்பாடி வன பகுதிக்குள் நுழைந்தது.

    வாணியம்பாடி அருகே உள்ள சிந்தகாமணி பெண்டா, வெலதிகாமணி பெண்டா, மாதகடப்டா ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்தி நாசம் செய்தன.

    பின்னர் அவைகள் மதகடப்பாவில் இருந்து புறப்பட்டு அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா சென்று அந்த கிராமத்தில் உள்ள வாழை தோட்டம், நெற்பயிர் மற்றும் மாட்டு கொட்டகை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.

    இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட யானைகள் வெங்கடசமுத்திரம் ஊராட்சி, மலைக்காட்டை ஒட்டி உள்ள ராளகொத்தூர் பகுதியில் நெல் மற்றும் மக்காசோளம் உளிட்ட பயிர்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனை தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக மிட்டாளம்மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை மரங்கள், காய்கறி தோட்டம், பூ தோட்டம், நெல் ,கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    இந்நிலையில் தற்போது அந்த காட்டு யானைகள் மிட்டாளத்தை ஒட்டி உள்ள காப்பு காட்டில் முகாமிட்டுள்ளன.

    • நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது.
    • அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள வெட்டுக்காடு, வண்ணாத்தி ப்பாறை, மாவடி உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு வாழைத்தோட்டங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி யானைகள் மற்றும் வன விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு சுருளியாறு மின்நிலையம் அருகே உள்ள வாழை த்தோட்ட ங்களுக்குள் யானைகள் புகுந்தது. அங்கிருந்த 1000த்துக்கும் மேற்பட்ட வாழைக்க ன்றுகளை பறித்தும், மிதித்தும் அட்டகாசம் செய்தது. நேற்று காலை தோட்டங்களுக்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கூடலூர் வனச்சரகர் முரளிதரனுக்கு புகார் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு வந்து சேதம் அடைந்த வாழைத்தோட்ட ங்களின் மதிப்பை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுபோன்ற சம்பவ ங்களை தடுத்து நிறுத்த யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து விளை நிலங்களுக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாமரங்களை சேதப்படுத்தியதாக விவசாயிகள் புகார்
    • வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியில் சுப்பிரமணி என்பவரது மாந்தோப்பில் காட்டு யானைகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புகுந்தன. 5 பெரிய யானை 2 குட்டி யானைகள் என அட்டகாசம் செய்தது. வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து இறங்கி வந்த யானைகள் காட்டுபகுதியில் அட்டகாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 குட்டிகளுடன் சுற்றி திரிகின்றன
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அரங்கல்துருகம் ஊராட்சி பொன்னப் பல்லி பகுதியில் 2 குட்டிகள் உடன் வந்த 5 யானைகள் மாமரங்களை சேதப்படுத்தியது. அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது.

    இது குறித்து ஆம்பூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். உமராபாத் போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன
    • வனப்பகுதிக்குள் விரட்டினர்

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகள் வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களிலும் மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் 2 யானைகளும் நேற்று அதிகாலை அரவட்லா மலை கிராமத்தில் பொதலகுண்டா பகுதியில் புகுந்தன. அங்கு கோபிநாத் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு பயிரை மிதித்து நாசம் செய்தன.

    இதனை அறிந்த விவசாயிகள் பட்டாசு, வெடி வெடித்து அருகில் உள்ள வனப் பகுதிக்குள் யானைகளை விரட்டினர்.

    யானைகள் அட்டகா சத்தினால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்து அரவட்லா வி.ஏ.ஓ. தனசேகரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    ×