search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasis"

    • விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • தொழிலாளர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது. மதுரை மண்டல கமிட்டி உறுப்பினர் சுகதேவ் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாள் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

    மாநில தலைவர் வரதராஜ், பொதுச்செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம், கல்குறிச்சி, சத்திரப்பட்டி, விருது நகர், சிவகாசி தீயணைப்பு நிலையம், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய 6 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதில் பணியாற்றிய ஊழியர்கள் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்க ளுக்கு இடமாற்றம் செய்யப்ப ட்டுள்ளனர். இதனால் அவசர காலங்களில் அந்த பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இதற்கு காரணமான விருதுநகர் மாவட்ட ஜி.வி.கே. - ஈ.எம்.ஆர்.ஐ. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விருதுநகர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.

    • பரமக்குடி அருகே கிராம சபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சியின் வளர்ச்சிக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வலியுறுத்தினார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், நெல்மடூர் ஊராட்சி நல்லூர் கிராமத்தில் காந்தியடிகளின் 154-வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் வரவேற்றார்.

    இதில் கலெக்டர் பேசுகையில், ஊராட்சியின் வளர்ச்சிக்கு கிராம சபை என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

    ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தேவையான புதிய திட்டங்களை பெறுவதற்கு கிராம சபையின் ஒப்புதல் முக்கியமான ஒன்றாகும். பொதுமக்களின் கோரி க்கைகள் குறித்து கேட்டறிந்து பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக முன்வைத்த நல்லூர் கிராம பாசன கண்மாய் தூர்வாரும் பணி மற்றும் மடை கட்டும் பணியை வரும் நிதியாண்டில் சிறப்பு கவனம் எடுத்து செயல்படுத்தப்படும்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் தளம் உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கட்டித்தருவதாக தெரிவித்துள்ளார்.

    அதே போல் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளதை வட்டாட்சியர் மூலம் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நெல்மடூர் ஊராட்சி பகுதியில் பிற ஊராட்சிகளை சேர்ந்த குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடுகள் விளைவதாக தெரிவித்துள்ளதையொட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் தொடர்புடைய ஊராட்சி களை அழைத்துப் பேசி வருங்காலங்களில் அந்தந்த ஊராட்சி குப்பைகளை அங்கேயே அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பரமசிவன், பரமக்குடி கோட்டாட்சியர் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், வட்டாட்சியர் தமீம் ராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காவலர்களில் 4 பேர் அன்றாட நீதிமன்ற வழக்கு தொடர்பான பணிகளிலும் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.
    • போக்குவரத்து இன்னலுக்கு தீர்வு காண முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ‌‌க‌ண்டமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர். 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 7 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 5 தலைமை காவலர்கள், 14 முதுநிலை காவலர்கள், 4 காவலர்கள் உள்ளனர். கண்டமங்கலம் காவல் நிலைய எல்லை பகுதியில்100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. காவலர்களில் 4 பேர் அன்றாட நீதிமன்ற வழக்கு தொடர்பான பணிகளிலும் ஈடுப்படுத்தப் படுகின்றனர். மேலும் வாகன சோதனை, அபராதம் விதித்தல் போன்ற செயல்களிலும் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    இதனால் முக்கியமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் முழு நேர போலீசார் நிறுத்த முடியாத சூழ்நிலை இருப்பதாகவும் அரசு இப் பிரச்சனையில் தலையிட்டு கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே போக்குவரத்து இன்னலுக்கு தீர்வு காண முடியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடனடியாக தமிழக அரசு கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு கூடுதலாக காவலர்களை நியமிக்க வேண்டும். இல்லையெனில் கண்டமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் நிலையம் அமைத்து புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மண் சாலையாக உள்ள கல்லூரி நுழைவுவாயிலை போர்க்கால அடிப்படையில் தார்சாலையாக அமைக்க வேண்டும்.
    • சுதந்திர போராட்ட வீரர் தியாகி சீனிவாசராவ் பெயரை அரசு கலைக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் திருத்துறைப்பூண்டி கல்லூரி மாணவர்கள் பேரவை கூட்டம் கல்லூரி கிளைத் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குணால் தலைமையில் நடைபெற்றது.

    மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஜேபி வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்கள்.

    கூட்டத்தில் புதிய புதிய தலைவராக பி.பரசுராமன் செயலாளர் எம்.மணிபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் நடந்து செல்லும் கல்லூரி நுழைவுவாயில் மண் சாலையாக உள்ளது.

    இதனை போர்க்கால அடிப்படையில் தார் சாலையாக அமைத்திட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி அரசு கலைக்கல்லூரியில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு கல்லூரி இயங்கி வருகிறது இதில் நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பாடப்பிரிவுகளை உடனடியாக தொடங்க வேண்டும்,சுதந்திர போராட்ட வீரர் தியாகி பி. சீனிவாசராவ் பெயரினை அரசு கலைக்கல்லூரி சூட்ட வேண்டுமென வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

    • தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தல்.
    • ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் நாகை வள்ளுவர் குல சங்கம், மயிலாடுதுறை மற்றும் வள்ளுவர் குல பண்பாட்டு விழிப்புணர்வு பேரியக்கம் இணைந்து பட்டியல் இன வெளியேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் குல மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வள்ளுவர் குல நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

    பிறவி ஞானமும், கல்வி அறிவியலில் சிறந்து விளங்கும் திருவள்ளுவர் சமுதாய மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி அவர்களின் தனி சிறப்பை போற்றுகிற வகையில் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    வள்ளுவர் குலத்தின் வரலாற்று பெருமைகளையும் பண்பாட்டு வாழ்வியலிலும் நமது சமுதாய வரலாற்று ஆதாரங்களை உலகறிய செய்திட புலனறிதல் குழுவும் வலைக்காட்சி மற்றும் இணையதளம் பரப்புரையினை செய்திட தீர்மானிக்கப்பட்டது.

    • குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
    • அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி கோலாஸ் நகரில் குடிதண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் பச்சை நிறமாக வருவதாக தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. நேரில் அணுகி நிலைமையை விளக்கினார். அதிகாரிகளின் பதிலால் சமாதானம் அடையாத எம்.எல்.ஏ. நீர் தேக்க தொட்டியின் மேல் ஏறி அங்குள்ள மூடிகளைத் திறக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதன் பின் தண்ணீர் கலங்கலாக உள்ளதையும், பாசி பிடித்து உள்ளதையும் சுட்டிக்காட்டி உடனடியாக போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

    மேலும் நீர்த்தேக்கத் தொட்டியில் உள்ள இரு மூடிகளும் உடைந்த நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மக்கள் குடிக்கும் குடிநீர் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பணியில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறினார்.

    அதன் பின் கீழே இறங்கி வந்து தண்ணீர் சேமிக்கும் சம்பையும் ஆய்வு செய்தார். அதிலும் பாசி பிடித்து இருந்ததை சுட்டிக்காட்டினார். உடனே இந்த குறைகளை சரிசெய்து தருவதாக பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உறுதிமொழி அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது உப்பளம் தொகுதியின் அவைத்தலைவர் ரவி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி மாநில தி.மு.க. இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ஆரோக்கிராஜ், முன்னாள் தொகுதி இளைஞர் அணிதுணை அமைப்பாளர் ரவிக்குமார், தி.மு.க. பிரமுகர்கள் அஷ்ரப், நிஷார், தப்பு, இருதயராஜ், காலப்பன், மோரிஸ், ரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • வன்முறையாக வெடித்து பள்ளிவாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது.
    • மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்கு–லத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளி–யில் விடுதியில் தங்கி படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த சில தினங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க கோரியும், பள்ளியை இழுத்து மூட வலியுறுத்தியு ம்தொடர்ச்சியாக 4 நாட்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை அமைதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும்எடுக்காததால் போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்து பள்ளிவாகன ங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு, பள்ளி சூறையாடப்பட்டது. காவல், தீயணைப்பு வாகனங்களும் தாக்கப்பட்டன.

    இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆறுதலோ, இழப்பீட்டு உதவி தொகையோ, வழங்காதது கண்டிக்கத்தக்கது.இந்த சம்பவத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுத்திருந்தால் வன்மு றையை தவிர்த்து இருக்க முடியும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிதி உதவியும், நீதியும் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுத்து தடை விதிக்க வேண்டும். இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப் படுவதாக கூறப்படுகிறது. எனவே, போராடிய இளை ஞர்கள், மாணவர்களின் எதிர்காலம்பாதிக்க ப்படாமல் இருக்க, ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது போல இதையும் நீக்க வேண்டும் என்று முக்குலத்துப்புலிகள் கட்சி–யின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தமிழக சிறைகளில் உள்ள முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
    • மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் உமர் பாரூக் தலைமையில் ராமநாதபுரம் தனியார் அரங்கில் மாவட்ட பொதுக்குழு நடந்தது. மாவட்ட பேச்சாளர் பரக்கத் அலி தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத்தலைவர் ஆல்பா நசீர், மாநிலச் செயலாளர் முஹம்மது பரூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2023 ஜனவரி 8-ந்தேதி திருச்சியில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நடைபெறவுள்ள மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற சிறப்பு மாநில மாநாட்டின் பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத் துணை தலைவர் ஆல்பா நசீர் நபிகளின் வரலாறு குறித்து தமிழக மக்களுக்கு விளக்குவது நமது கடமை என்று பேசினார்.

    தமிழக சிறைகளில் 20 வருடங்களுக்கு மேலாக வாடு ம் ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடி ப்படையில் விடுவிப்பதை போல, 20 வருடத்திற்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசி களையும் விடுவிக்க ஆவணம் செய்ய தமிழக அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் முஹம்மது கான் நன்றி கூறினார்.

    • மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
    • அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது.

    தாராபுரம்:

    தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் மங்கலம் என்.ரவி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மத்திய அரசின் நிதி உதவியோடு தாராபுரம் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட நிதியை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்தாமல் வேறு நகரத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.உடனடியாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் ஏற்கனவே திட்டமிட்டபடி தாராபுரத்தில் மாவட்ட மருத்துவமனைக்கு நிகரான தரத்தோடு அரசு தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும்.

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் அனுமதி இல்லாமல் கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் இரவு-பகலாக கொள்ளை நடக்கிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதி செய்ய வேண்டும் என வி.சி.கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
    • கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் பாசித் இல்யாஸ், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கீசை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கீழக்கரை நகரில் அரசு மருத்துவமனையில் போதிய வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே முறையாக ஆய்வு செய்து கூடுதல் மருத்துவர்களை நியமித்து மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும்.

    வட்டாட்சியர் அலுவல கத்தில் இலவச பட்டா, அரசு விதவை மானிய தொகை, முதியோர் உதவித்தொகை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகராட்சியில் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப்போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழக்கரை நகரில் நிலவும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×