search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "emphasize"

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • திருமருகல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் வட்டார தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம்,திட்டச்சேரி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர் உடன் செயல்பட வேண்டும், திருமருகல் ஒன்றிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பணப்படிகளுக்கு இணையாக தமிழ்நாடு அரசு அனைத்து டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் அர்ச்சுனன் தலைமையில் டாக்டர்கள் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

    அப்போது அரசு டாக்டர்கள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர்கள் கலெக்டர் சாந்தாவை சந்தித்து, அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அரியலூர் மாவட்ட அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமையில் டாக்டர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர். இதில் தலைமை டாக்டர்கள் ரமேஷ் கண்ணன், உமா, மறைதென்றல், விக்னேஷ், மேகநாதன் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களும் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் டாக்டர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
    கிருஷ்ணகிரியில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை சார்பில் போராட்டம் நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரி எதிரில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை சார்பில், இந்திய உயர் கல்வி ஆணையம் வரைவு சட்ட மசோதா திரும்ப பெறுதல், யு.ஜி.சி.யை காப்பாற்ற வேண்டுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க போராட்டம் நேற்று நடந்தது.

    ஜேக்கின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத்தலைவர் சிவப்பிரியா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சரவணன் பேசினார்.

    இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையம் வரைவு சட்ட மசோதாவை திரும்ப பெற்று, யு.சி.ஜி. அமைப்பை காப்பாற்ற வேண்டும். உயர்கல்வி தனியார் மயமாக்கப்படுதலை தடுக்க வேண்டும். உயர் கல்விக்கான நிதி குறைப்பு, பல்கலைக்கழகம் மற்றும் அரசு நிறுவனங்கள் தன்னாட்சி மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

    மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்படுவதோடு, தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி நிதிவழங்கல் நிறுவனம் மற்றும் உயர்கல்வி திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆகஸ்டு 3-ந் தேதி பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டமும், டெல்லியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் பேராசிரியர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    நாகையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ரமேஷ் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம்), சிவகுருநாதன் (தமிழக தமிழாசிரியர் கழகம்), லட்சுமிநாராயணன் (தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), கல்யாணசுந்தரம் (தமிழக ஆசிரியர் கூட்டணி) ஆகியோர் தலைமை தாங்கினர். 

    ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு உயர்வில் 21 மாதகால நிலுவை தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒருநபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்து முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும்.

    சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் கல்வித்துறையை குழப்பத்தில் ஆழ்த்தி நிர்வாகத்தினை சீர்குலைக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    ×