search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Entry fee"

    • எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர்.
    • 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இத்தாலியில் உள்ள பிரபல சுற்றுலா நகரமாக வெனிஸ் விளங்குகிறது. ஏரிகளால் சூழ்ந்த இந்த நகரம், அதன் இயற்கையான அமைப்புக்கும், கலை கட்டுமானத்திற்கும் பெயர் போனதாக விளங்குகிறது. பல்வேறு கால்வாய்களை உள்ளடக்கிய இந்த நகரில் படகு போக்குவரத்து சேவைவே முக்கிய போக்குவரத்து அம்சமாக உள்ளது.

    எழில் கொஞ்சும் வெனிஸ் நகரை படகுகளில் அமர்ந்து சவாரி செய்தவாறு ரசிப்பதற்காகவே வெளிநாட்டினர் பலர் இங்கு சுற்றுலா வருவர். இந்தநிலையில் சுற்றுலா பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த நகர நிர்வாகம் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

    வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க ஒருநாள் கட்டணமாக 447 ரூபாய் (5 யூரோ) வசூலிக்கப்பட உள்ளது. 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊட்டி மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், கடந்த 1982-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே மரவியல் பூங்கா தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் குளிர்பிரதேசங்களில் வளரக்கூடிய சுமார் 60 வகை மரங்கள் பூங்காவில் நடப்பட்டு, அவை வளர்க்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்தது. இதற்கிடையே பூங்காவை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்படாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து பூங்காவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    கடந்த 2006-2007-ம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் பூங்கா புனரமைக்கப்பட்டு, சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. மேலும் கூடுதலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. பூங்காவின் மொத்த பரப்பளவு 1.58 ஹெக்டேர் ஆகும். பூங்காவில் நடைபாதையின் இருபுறங்களிலும் பல்வேறு வகையான மலர் செடிகள் காணப்படுகிறது. மரங்களை சுற்றிலும் அலங்கார செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. உயர்ந்த மரங்களுக்கு நடுவே பசுமையான புல்வெளிகள் இருக்கிறது. இது சுற்றுலா பயணிகளை கவருகிறது.

    மரவியல் பூங்காவில் அமருவதற்காக மரத்தினால் ஆன இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. பூங்காவை ரசிக்கும் வகையில் அழகான நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூங்காவையொட்டி ஊட்டி மலை ரெயில் செல்லும் போது, சத்தம் கேட்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குழந்தைகள் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அங்குள்ள மரங்களில் அரிய வகை பறவைகள் காணப்படுகிறது. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் நுழைவுக் கட்டணம் இன்றி ரசித்து வந்தனர். அப்பகுதி பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செய்து வந்தார்கள்.

    இந்த நிலையில் தோட்டக்கலைத்துறை திடீரென மரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு-ரூ.10, சிறியவர்களுக்கு-ரூ.5 நுழைவுக்கட்டணம், கேமரா-ரூ.10, வீடியோ கேமரா-ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பு குறித்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவுக்கட்டணம் வசூலிப்பதற்காக டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 2 பேர் பணியில் இருக்கின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா செயல்படும்.

    இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-

    இதுவரை இலவசமாக பொதுமக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் பூங்காவை கண்டு ரசித்து வந்தனர். தற்போது கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதால், அவர்கள் அவதி அடைந்து உள்ளனர். கட்டணம் நிர்ணயம் செய்யப்படாமல் இருந்த போது, பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது. இதனால் நுழைவுக்கட்டணம் நிர்ணயிப்பால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் குறையும். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், வாடகை வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து குறைந்த கட்டணம் உள்ள கர்நாடகா ஸ்ரீ தோட்டக்கலை பூங்காவுக்கு அழைத்து செல்கின்றனர். இதே நிலைமை நீடித்தால் அந்த பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி திகழ்கிறது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கடந்த 1848-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் மொத்த பரப்பளவு 22 ஹெக்டேர். வெளிநாடுகளை சேர்ந்த மரங்கள் பச்சை, பசேல் என வளர்ந்து காணப்படுவதோடு, பசுமையான புல்வெளிகள் உள்ளது. இதேபோன்று குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் ஊட்டி ரோஜா பூங்கா தோட்டக்கலைத்துறை மூலம் இயங்கி வருகின்றது.

    ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் மற்றும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் பண்டிகை, விடுமுறை காலங்களில் தாவரவியல் பூங்காவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நேற்று வரை (டிசம்பர் 15-ந் தேதி வரை) 26 லட்சத்து 91 ஆயிரத்து 727 சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை புரிந்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு மட்டும் நுழைவுக்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும், சிறியவர்களுக்கு ரூ.15-ல் இருந்து ரூ.20 ஆகவும் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. பூங்கா பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்காக கட்டணம் உயர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூங்காவில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து 2 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.50 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. ஊட்டி ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட வில்லை. இதுகுறித்து ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் கூறியதாவது:-

    ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்கள், 2-வது சீசன் காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு அதிகமாக வருகை தருகின்றனர். மேலும் விடுமுறை காலங்களிலும் வருகை புரிகிறார்கள். பொதுமக்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் உள்ளூர் மக்கள் பூங்காவிற்கு சென்று கண்டு ரசிக்க முடியாத வகையில், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. உடனடியாக மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் திடீரென உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ஊட்டியில் அரசுக்கு சொந்தமான சிறுவர் பூங்கா சாதாரண மக்கள் தங்களது குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழிக்கும் இடமாக இருந்தது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் அந்த பூங்கா ஏலம் விடப்பட்டு, குழந்தைகள் விளையாடும் இடமாக மாற்றப்பட்டது. தற்போது ஒரு நபருக்கு ரூ.100-க்கு மேல் வசூலிக்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்கள் குழந்தைகளுடன் பொழுதுகளை போக்க சமவெளி போன்ற நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள் இல்லை. எனவே, பிற துறையிடம் உள்ள நகராட்சி பூங்காவை திரும்ப பெற்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும்.

    மேலும் ஊட்டியில் நடந்த குறும்பட விழாவில் கலந்துகொண்ட மலையாள திரைப்பட இயக்குனர் ஜாய் மேத்யூ, ஊட்டியில் சினிமா கட்டணம் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பு அதிகளவில் எடுக்கப்படுவது இல்லை என்று தெரிவித்தார். தற்போது ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, சினிமா தொழிலாளர்கள் வேலையிழப்பை அதிகரிக்கும்.

    எனவே கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×