என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Erode government hospital"
- சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார்.
- இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.
இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர் அந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக இறந்தார். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை.
இறந்தவர் சிவப்பு வெள்ளை நிறத்தில் கோடு போட்ட அரக்கை சட்டை, வெள்ளை ப்ளூ கலரில் கட்டம் போட்ட லுங்கி அணிந்திருந்தார்.
அவரது வலது பக்க கால் எலும்பின் மேல் காயத் தழும்பு, இடது கால் முட்டியில் காய தழும்பும், தலை வழுக்கையாகவும், மீசை தாடியுடன் கருப்பு நிற முடிகளுடன் இருந்தார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
- இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த ஊதியமான நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதம் ரூ.21,260 வழங்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவமனையில் உடை மாற்ற, ஓய்வெடுக்க, உணவு சாப்பிட ஓய்வறை ஒதுக்கிட வேண்டும். ஒப்பந்த முறைப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும். வேலை நேர பணி அட்டை வழங்க வேண்டும். மாத ஊதிய சீட்டு வழங்க வேண்டும்.
வார விடுமுறை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இலவச சீருடை, பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் பணியாற்றுபவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 23-ந் தேதி தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் உடன்பாடு ஏற்படாததால் தலைமை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக ஒப்பந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணியை புறக்கணித்து கடந்த மாதம் 29-ந் தேதி இரவு முதல் ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 4 நாட்களாக பகல், இரவு என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் அவர்களது கோரிக்கையை ஏற்று அடுத்த 15 நாட்களில் அமல்படுத்தப்படும் என உறுதியளித்தார். இதன்பேரில் நேற்று இரவு ஒப்பந்த ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு தங்களது பணிக்கு திரும்பினர்.
இன்று வழக்கம் போல் ஒப்பந்த ஊழியர்கள் தங்களது வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே உள்ள காடப்பநல்லூரை அடுத்த குதிரைக்கல்மேட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் முருகன் (வயது 22).
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நிவிதா (21) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகனை நிவிதா 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நிவிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பிரசவ சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு ஆபரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அன்று இரவு கிரிஜா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் முருகன் புகார் செய்துள்ளார்.
தனது மனைவி மரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் அவர் கூறி உள்ளார். #tamilnews
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வீடு-வீடாகபுகுந்து ஆய்வு செய்கிறார். வீடுகளில் தேங்கி உள்ள தண்ணீரில் ஆய்வு செய்து டெங்குவை பரப்பும் கொசுவை கண்டறிந்து அதை ஒழிக்க உத்தரவிட்டு வருகிறார்.
மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்களின் தீவிர நடவடிக்கையால் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்களில் பலர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி, இருமல் மற்றும் விஷக்காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் 50 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்